Search This Blog

Thursday, September 12, 2013

Did you know that Avocado was so helpful...

Sharewith your friends too....


1. Prevents Prostate, Breast and Oral Cancers:

Researches have shown that avocado helps in preventing the development of breast cancer thanks to its oilic acid content. Moreover, owing to the presence of certain compounds, avocado fruit has found to be very effective in seeking out pre-cancerous and cancerous oral-cancer cells and obliterate them without doing any harm to the healthier ones. In addition, it is also known for inhibiting the growth of prostate cancer.

2. Eye health:

Eye health is another health benefit, avocado offers. It contains more of carotenoid lutein as compared to any commonly consumed fruit. Lutein prevents any eye-related disorders by offering protection against macular degeneration and cataracts.

3. Regulates blood cholesterol level:

Avocado helps in regulating blood cholesterol level because of its high beta sitosterol content. It is shown to reduce cholesterol as well as phospholipid levels to almost 20% if consumed on a daily basis.

4. Heart Health:

Avocados are extremely helpful when it comes to maintaining a hale and hearty heart. They are rich in folate – an ingredient essential for a healthy, problem free heart. One cup is enough to satisfy your body’s 23% of the daily folate requirement alone. Additionally, monounsaturatedfats, glutathione and vitamin E in the avocado are also very beneficial for human heart.

5. Better Nutrient Absorption:

Avocados are found to be very effective in boosting the absorption of certain nutrients plus they also improve human digestive system. Likewise, it also helps preventing constipation and facilitates immediate weight lose.

6. Glutathione Source:

Avocados are a rich source of glutathione, an antioxidant important in preventing ageing, cancers, and heart disorders. Furthermore, the abundance of vitamin E makes it an amazing ingredient to keep numerous health issues bay.

7. Beauty benefits of avocado fruit:

Avocado is an excellent natural way to nourish and stock up your body without any abrasive chemicals. Essential and extra virgin avocado oil has long been used in beauty products such as hair conditioners, moisturizers, cleanses and facials etc. This is all because they are a rich source of several essential nutrients that relive and moisturize your skin.

8. Clean Skin:

Avocados are filled with vitamin A which helps purging off any dead skin cells. The glutamine amino acid present in avocados cleanses your skin and offers it enough protection against harsh environmental factors.

MUST SHARE WITH OTHERS

பழந்தமிழ் போர்க்கருவிகள்

1) வளைவிற்பொறி 2) கருவிரலூகம் 3) கல்லுமிழ் கவண் 4) கல்லிடுகூடை 5) இடங்கணி 6) தூண்டில் 7) ஆண்டலையடுப்பு கவை 9) கழு 10) புதை 11) அயவித்துலாம் 12) கைப்பெயர் ஊசி 13) எரிசிரல் 14) பன்றி 15) பனை 16) எழு 17) மழு 18) சீப்பு 19) கணையம் 20) சதக்களி 21) தள்ளிவெட்டி22) களிற்றுப்பொறி 23) விழுங்கும் பாம்பு 24) கழுகுப்பொறி 25)புலிப்பொறி 26) குடப்பாம்பு 27) சகடப்பொறி 28) தகர்ப்பொறி 29) அரிநூற்பொறி 30) குருவித்தலை 31) பிண்டிபாலம் 32) தோமரம் 33) நாராசம் 34) சுழல்படை 35) சிறுசவளம் 36) பெருஞ்சவளம் 37) தாமணி 38) முசுண்டி 39) முசலம் 40) வளரி

வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரு வியப்பை தருவதாக அமைந்துள்ளது.

தமிழர்தம் மரபுசார் போர்க்கருவிகள - முனைவர். மு.பழனியப்பன்

தமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும், அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது, காலை முரசறையத் தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது, முழுஇரவு ஓய்விற்குப்பின் மீண்டும் அடுத்தநாள் காலை தொடங்கும் அவர்களின் போர்முறை எதிரிகளுக்கு இரங்கும் நெஞ்சம் உடையதாக, எதிரிகளுக்குத் தக்க வாய்ப்பளிக்கும் போக்கினதாக அமைந்திருக்கிறது, இன்று போய் போர்க்கு நாளை வா என்று இராவணனை அனுப்பிய இராமனின் உள்ளம் தமிழர் போர் பண்பாட்டின் வழிப்பட்டதாகக் கம்பரால் வரையப் பெற்றதாகும்,

எதிர்குழுவினரையும் தம்மொடு ஒத்த மனித உள்ளமாக, மனித உடலாகக் கொண்டு தமிழர்கள் போர் செய்துள்ளனர், அவர்கள் தன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தைப் போலவே பிறன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தையும் கண்டுள்ளனர். இதன்மூலம் போர்க்களம் என்பது கொலைக்களமாக மட்டும் விளங்காமல் துயரம் கண்டு இரங்கும் களமாகவும் இருந்துள்ளது, முல்லைப்பாட்டில் இறந்த உயிர்களுக்காகத் துன்புறும் மன்னனின் செயல் இதற்குத் தக்க எடுத்துக்காட்டாகும், எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து, பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய , தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி, சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து, உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து (முல்லைப்பாட்டு 68-75) அஃறிணை உயிர்களுக்கு இரங்கும் மன்னவன் உள்ளம் இவ்வடிகளில் போர்க்களத்தை இரங்கு களமாகக் கண்டுள்ளது,

இவ்வகைப்பட்ட போரை நடத்திட தமிழர்க்குப் பல போர்க்கருவிகள், பல திட்டங்கள் உதவிபுரிந்திருக்க வேண்டும், அவர்கள் இவ்வகைக் கருவிகளை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்திடக் கற்றுக் கொண்டிருக்கவேண்டும், தமிழர் இத்தகைய போர் அறிவியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தமைக்கான சான்றுகள் பண்டை இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாக கிடைக்கப் பெறுகின்றன, பண்டைக்காலம் முதலாக, தொடர்ந்து வரும் காலங்களிலும் அவர்களின் போர் அறிவியல் ஆற்றல் மேம்பட்டிருந்ததற்கான பல சான்றுகள் தமிழிலக்கியங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன, அவ ற்றை ஆய்வுநோக்கில் அணுகுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு - இஸ்ரேல்

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு.
>>> உங்களுக்கு தெரியுமா?

எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு.

ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??
அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்

உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது

உலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்

கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் ..

உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு, இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி இப்பொழுது தெரிகிறது. அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம்??

>> அந்த நாடு தான் யூதர்களின் இஸ்ரேல்.

உண்மையில் வரலாற்றில் இஸ்ரேல் என்ற ஒரு நாடு முன்னர் இருக்கவில்லை. நாடற்று வாழ்ந்த யூதர்களுக்கு பரிதாபப்பட்டு பாலஸ்தீன நாட்டு முஸ்லிம்களால் கொடுக்கப்பட்ட ஒரு சிறுபரப்பே இன்று பெரும் நாடாகி அடைக்கலம் வழங்கிய பாலஸ்தீனத்திற்கும் ஏனைய நாடுகளுக்கும் தாக்குதல்களை நடத்தி உலகின் தீவிரவாத ஜாம்பவானாக மிளிரும் பெருமையும் இதற்குண்டு. பொதுவில் இந்நாடு அமெரிக்காவின் செல்லப்பிள்ளை என்றே அழைக்கப்படுகிறது. உலகில் இன்று தீவிரவாதம் என்ற வார்த்தைக்கு இலக்கணம் இந்நாடு என்றே கூறலாம்.

நீங்கள் பருகும் கோககோலா பெப்சி எல்லாம் இந்த மனிதாபிமானமற்ற இந்நாடு மற்றும் அமெரிக்க கூட்டணியில் உற்பத்தியாவதே.
PEPSI = Pay Every Peny For Save Israel - "உன் ஒவ்வொரு சதத்தையும் இஸ்ரேலை பாதுகாக்க செல்வழி" என்பதே அதன் விரிவான வடிவம்.

இஸ்ரேல் உலகில் முன்னணியில் திகழ அவர்களின் அறிவை பயன்படுத்தினாலும் தனது உற்பத்திகளை அனைத்து நாடுகளிலும் பிரபல்யப்படுத்தி அதன் மூலம் பெற்ற பணத்தில் தனது காரியங்களை சாதிப்பதுடன் உலகின் ஏனைய நாடுகளின் அப்பாவி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இறக்கும் சதவீதம் நாளுக்கு நாள் அதிகரிக்க முக்கிய காரனாக இருப்பதுவும் இவர்களே.

வாசியோகம் பயின்ற ராமதேவர்

ராமதேவர் புலத்தியரின் சீடர். இளமை முதலே அம்பிகை பக்தராகத் திகழ்ந்த இவர் அன்னையின் கருணையில் அபூர்வ சித்திகள் வாய்க்கப் பெற்றார். வாசியோகம் பயின்ற ராமதேவர் அஷ்டமாசித்திகளை பெற்று தேகத்துடனே வெளியிடங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் வெளி உலகங்களுக்கும் செல்லக் கூடிய சித்தியைப் பயில ஆரம்பித்தார்.

சஞ்சார சமாதியில் ஐக்கியப்படுத்திக் கொண்டு பல புண்ணிய தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்தார். ஒரு சமயம் மெக்கா சென்றார். அங்குள்ளவர்கள் அவருக்கு யாக்கோபு என்று பெயர் சூட்டி அந்நாட்டு வழக்கப்படி உபதேசம் செய்தார்கள். யாக்கோபு வெகு விரைவில் மெக்கா மக்களால் தம்முள் ஒருவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

ஒருவர் பின் ஒருவராக சீடர் பலர் சேர்ந்தனர். பாலைவன மணலில் புதைந்து கிடக்கும் கற்ப மூலிகையைப் பற்றியெல்லாம் ஆராய்ந்த யாக்கோபு அவை பற்றியெல்லாம் தம் நூலில் குறிப்புகள் எழுதி வைத்தார். ஒரு நாள் கற்பக மூலிகைகளின் திறனைச் சோதிப்பதற்காகத் தாம் சமாதியில் இருக்கப் போவதாகச் சீடர்களிடம் கூறினார். சமாதி மூடப்பட்டது.

ராமதேவன் கற்பக மூலிகைகளின் துணை கொண்டு யார் கண்ணிலும் படாமல் அங்கிருந்து மறைந்தார். காடு மலை நதி என்று நாடு கடந்தும் சுற்றித் திரிந்தார். அந்தக் காலத்தில் காலாங்கி நாதர் சமாதியைத் தரிசித்தார். உடனே கைகளைக் கூப்பி வணங்கி அதன் பக்கத்திலேயே தியானம் செய்ய ஆரம்பித்தார்.

தியானம் சித்தியான நிலையில் காலாங்கி நாதர் ராமதேவருக்குத் தரிசனம் தந்து அனுபவ ரகசியங்களை உபதேசித்து மறைந்தார். ராமதேவருக்கு அநுபூதி நிலை கை கூடியது. யாக்கோபு என்ற பெயரில் மெக்காவில் எழுதிய பதினேழு நூல்களைத் தமிழில் பாடினார். சதுரகிரியில் சிலகாலம் தங்கியிருந்து தவமியற்றினார்.

பத்து ஆண்டுகள் கழிந்தன. யாக்கோபு சொன்னது போலவே திரும்பி வந்தார். தன் உண்மைச் சீடன் சமாதியருகிலேயே இருந்தது கண்டு மனம் நெகிழ்ந்தார். நான் மறுபடியும் சிறிது காலம் சமாதியிலிருக்க விரும்புகிறேன். இந்த முறை முப்பது ஆண்டுகள் கழிந்த பிறகே வருவேன். நான் சமாதிக்குச் சென்ற பிறகு என்னைத் தரிசிக்க வேண்டுமானால் சதுரகிரி மலைக்கு வர வேண்டும், என்று தெரிவித்து விட்டு சமாதியானார்.

முப்பதாண்டுகள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ராமதேவராக நடமாடிய யாக்கோபு சதுரகிரி வனத்தில் தங்கி வைத்திய சாஸ்திர நூல்களைத் தமிழில் எழுதினார். ராமதேவர் மெக்காவிலிருந்து திரும்பி வந்து சதுர கிரிவனத்தில் தங்கியதால் அந்த வனத்திற்கு ராம தேவர் வனம் என்ற பெயரே வழங்குகிறது.

அதன் பிறகு ராமதேவர் மறுபடியும் மெக்கா சென்று அனைவருக்கும் தரிசனம் தந்ததாகக் கூறப்படுகிறது. யாக்கோபின் அன்புக்குரிய சீடனை அழைத்து அவனுக்கு காயகற்ப முறைகளைப் போதித்து இனிதான் திரும்ப மாட்டேன். நிரந்தர சமாதியோகம் பூணப் போகிறேன் என்று கூறி மெக்காவில் மவுன சமாதியானார். பின்னர் அங்கிருந்து வெளிப்பட்டு தமிழகம் வந்து அழகர் மலையில் சமாதியடைந்தார்.

மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவம்..!

உடலில் உஷ்ணம் மிகுந்து இருப்பதாலும், உடலுக்குத் தேவையான புரத சத்துக்கள் கிடைக்காததாலும், உடல் மெலிந்து இருப்பதற்கு காரணங்களாகும். 

சித்த மருத்துவ முறைகளில் இளைத்த உடல் பருக்கவும்,
பருத்த உடல் இளைக்கவும் ஏராளமான முறைகள் உண்டு.

இளைத்தவனுக்கு எள்ளு,
கொழுத்தவனுக்கு கொள்ளு

என்பது மருத்துவ பழமொழியாகும். இதன் விளக்கம் என்ன வென்றால் உடலில் சதைப்பிடிப்பு இல்லாமால் மெலிந்து இருப்பவர்கள் தினமும் இரவில் ஒரு கைபிடி அளவு எள்ளு எடுத்து சிறிது,சிறிதாக வாயிலிட்டு நன்கு மென்று தின்று ஒரு தம்ளர் பால் சாப்பிடவும். இது போல் 40 -தினங்கள் தொடர்ந்து உண்டு வரவும்.

மேலும் காலையில் வெறும் வயிற்றில் வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு உண்ணவும்.இதுவும் 40 -நாள் தொடர்ந்து உண்ணவும்.

தேறாத பிள்ளையையும் தேற்றி வைக்குமாம்
தேற்றான் கொட்டை லேகியம்.

இதுவும் ஒரு மருத்துவ பழமொழிதான்.அதாவது உடல் இளைத்து மெலிந்து இருக்கும் இளம் வயது பிள்ளைகளை உடல் பருக்க இந்த "தேற்றான் கொட்டை லேகியம்" உதவும்.சாப்பிடும் உணவுகளின் சத்துக்களை முழுமையாய் உடலில் சேர்க்க இந்த லேகியம் உதவும்.

சித்தா மெடிக்கல் கடைகளில் இந்த லேகியம் கிடைக்கும். வாங்கி தினமும் காலை, இரவு உணவிற்குப் பின் ஒரு டீஸ்பூன் உண்டு ஒரு தம்ளர் பால் சாப்பிடவும்.

இதில் கூறப்பட்டுள்ள மூன்று முறைகளையும் கடை பிடித்து வாருங்கள். மூன்று மாதங்களில் உடல் பருமனாக காணலாம்.

தந்த ரோகம் - பல்பொடி..!

அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை பல்பொடி செய்முறை .

1 - சுக்கு 
2 - காசுக்கட்டி
3 - கடுக்காய்
4 - இந்துப்பு

இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும். இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் ஆட்டம், பல் சொத்தை, இவை அனைத்தும் நீங்கும்.

இதனைக்கொண்டு காலை,
மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே வராது.