Search This Blog

Saturday, February 9, 2013

"பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..

பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

"பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..

1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா....???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...

2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா....??? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி)
காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்...

முதலுதவி:-

1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.

4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது

4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.

5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

6.பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.

பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...

கிடைத்த தகவலை பகிர்ந்துள்ளேன்...

காலை நேர உண்வை தவிக்க கூடாது ஏன் என்று தெரியுமா??

காலை நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு காலை உணவில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பது அவர்கள் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட, தேவையான சக்தியை அளிக்கிறது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அவசர உலகத்தில் பெரும்பாலானவர்களுக்கு, காலை உணவை சாப்பிடக்கூட நேரமின்மையால் அதனை தவிர்த்து விடுகின்றனர். அதிலும் பள்ளிக்குழந்தைகள் அநேகம் பேர் காலை உணவை உட்கொள்வதே இல்லை. பெரும்பாலும் காலி வயிறுடனே பள்ளிக்குச் செல்கின்றனர். இதற்கு நேரமின்மையையே காரணமாக தெரிவிக்கின்றனர்.

இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரங்கள் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு விடப்படுகிறது. எனவே உடலுக்கு தேவையான சக்திக்கு , காலையில் உணவு சாப்பிடுவது அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.

காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது, அது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது. காலையில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல், சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம். அதிக கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும்.

எனவே ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவாக திட்டமிட்டு குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

பெண்களின் பிரச்சினைகளுக்கு கை கொடுக்கும் உலர் திராட்சை

திராட்சையில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதில் விற்ற‌மின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம்.

அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும். மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும்.

இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.

உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும்.

தேமல் மறைய உதவும் கராம்பு

சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும். கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும். திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும். துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.

மாதவிலக்கு வலி குறைய இய‌ற்கை வைத்தியம் !!!!

நண்பர்கள் இந்த தகவலை முடிந்த அளவுக்கு ஷேர் செய்யுங்கள் அது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் .

முருங்கை இலையை இடித்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு எடுத்து, அதில் 10 கிராம் மிளகை தூள் செய்து கலந்து, சிறிது தேனும் சேர்த்து குடித்து வர, அதிகப்படியான ரத்த அழுத்தம் சமநிலைப்படும். முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டி தேவையான உப்பும் சேர்த்து 'சூப்' போல செய்து பருகி வர பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும். முருங்கைப் பட்டை, வெள்ளைக்கடுகு. பெருங்காயம் இவற்றை நன்கு அரைத்து சூடாக்கி பொறுக்க கூடிய சூட்டில் மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப் போட சில நாட்களில் மூட்டுவலி குணமாகும். முருங்கைக் கீரையுடன் உப்பு சேர்த்து இடித்து சாறு பிழிந்து, அதை இடுப்பில் நன்றாக தேய்த்தால் இடுப்புப் பிடிப்பு குணமாகும். அவ்வாறு இரண்டொரு முறை தேய்க்க நல்ல குணம் கிடைக்கும்

* சூதகத் தடை (ஹோர்மோன் பிரச்னை) உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.

* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

* உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு....ஹெல்த் ஸ்பெஷல்
மாதவிடாய்ல ஏதும் கோளாறுனா... பாவம், பொண்ணுங்க மனசொடிஞ்சு போய்விடுவார்கள் அந்த நேரத்துல அவங்களுக்கு ஆறுதலா நாலு வார்த்தையும்...நல்ல கவனிப்பும் இருக்கணும். கூடவே, பாட்டி சொல்ற மருந்துங்களையும் பக்குவமா தயார் பண்ணி சாப்பிட்டா... எல்லாப் பிரச்சினையும் பஞ்சா பறந்துடும்.

வெள்ளைப்படுதல் சரியாக:

ஆனைநெருஞ்சில் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அதோட இலை மூணு (எண்ணிக்கை) பறிச்சிட்டு வந்து, ஒரு டம்ளர் நீராகாரத்தில போட்டு, நல்லா கலக்கணும். கொஞ்ச நேரத்துல கொழகொழப்பா வரும். அதை அப்படியே கண்ணை மூடிக்கிட்டு காலையில வெறும் வயித்துல தொடர்ந்து மூணு நாள் குடீச்சீங்கனா... வெள்ளைப்படுதல் வராது.

வேரோடு சேர்த்து, முழுசா ஒரு மணத்தக்காளி செடியை தண்ணி விட்டு அலசி, ஒரு லிட்டர் தண்ணியில போட்டு காய்ச்சி அரை லிட்டராக்கணும். அதை வெள்ளைப்படுதல் படுற இடத்துல ஊத்திக் கழுவினா... நல்ல குணம் கிடைக்கும்.

தாமதமான மாதவிடாய்க்கு:

சில பொண்ணுங்களுக்கு மாதவிடாய் ஒழுங்கா வராம ஒரு வழி பண்ணிரும். அப்படிப்பட்டவங்க பெருந்துத்தி இலை - 5 எடுத்து, அதோட மிளகு 5 சேர்த்து காலையில வெறும் வயித்துல மென்னு சாப்பிடணும். மூணு முதல் அஞ்சு நாள் சாப்பிட்டு பாருங்க... ஒழுங்கா மாதவிடாய் வரும்.

மாவிலிங்கப்பட்டையும் நல்ல மருந்து தான். அதை மையா அரைச்சி நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில வெறும் வயித்துல சாப்பிட்டீங்கனா தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும்.

சதக்குப்பை 50 கிராம் எடுத்து, பொன்வறுவலா வறுத்து பொடியாக்கி, 3 பாகமாக்கி வச்சிக்கிடணும். ஒரு பாகத்தை ரெண்டா பிரிச்சி, காலையிலயும், சாயங்காலமும் சாப்பிடணும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக்கணும். இப்பிடி மூணுநாள் சாப்பிட்டாலே வராத மாதவிடாய் வந்துடும்.

கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா... மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.

மாதக்கணக்கில் மாதவிடாய் வராமலிருப்பவர்களுக்கு:

வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைச்சி சாப்பிட்டு வந்தா... மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.

கல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.

பெரும்பாடு பிரச்சினைக்கு தும்பை இலை:

மாதவிடாய் நேரத்துல அதிக ரத்தப்போக்கோட வயித்துவலி சேர்ந்து வர்றதை பெரும்பாடுன்னு சொல்வாங்க. இந்த நோயால அவதிப்படுறவுக நாவல் மரப்பட்டை 50 கிராம் எடுத்து, அதுல தண்ணி விட்டு இடிச்சி, 100 மில்லி வர்ற அளவுக்கு தண்ணி சேர்த்து காலையில மூணு நாள் வெறும் வயித்துல குடிச்சா... பெரும்பாடு தீரும்.

ஒரு முழு வாழைப்பூவை எடுத்து, இடிச்சி சாறு பிழிஞ்சி, அதோட ஒரு ஸ்பூன் மோர் விட்டு கலக்கி, காலையில வெறும் வயித்துல மூணு நாள் குடிச்சா.... மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலியும், ரத்தப்போக்கும் சரியாயிரும்.

கடுக்காய் பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதோட தோலை மட்டும் 25 கிராம் அளவு எடுத்து, ஒண்ணு ரெண்டா தட்டிப்போட்டு, 100 மில்லி தண்ணி விட்டு கொதிக்கவைக்கணும். அது 25 மில்லியா குறுகினதும் வழக்கம்போல மூணு நாள் குடிங்க. பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

அருகம்புல் 10 கிராம், மாதுளை இலை 10 கிராம் எடுத்து, 100 மில்லி தண்ணியில போடடு கொதிக்க வச்சி, 50 மில்லியாக்கி காலையில பாதி, சாயங்காலம் பாதி குடிக்கணும். இதேபோல 5 நாள் குடிச்சா மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலி, அதிக ரத்தப்போக்கு சரியாயிடும்.

தும்பை இலை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சி, பாலோட கலந்து சாப்பிடணும். இப்படி மூணு நாள் சாப்பிட்டா பெரும்பாடு பிரச்சினை சரியாயிரும்.

இலந்தைஇலை, மாதுளை இலை ரெண்டும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து 200 மில்லியாக்கி காலைல குடிக்கணும். மூணுநாள் செஞ்சாலே பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

நெல்லி வற்றல், படிகாரம், கல்கண்டு தலா 50 கிராம் எடுத்து பொடி பண்ணி வச்சிக்கிடணும். அதில் கால் ஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் மோர் சேர்த்து காலை, மாலை 10 நாள் சாப்பிட்டாலே பெரும்பாடு சரியாகும்.
கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா... மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.

சாதனை படைக்க முற்பட்டால் வேதனைகளைத் தாங்கும் மனோபலமும் தைரியமும் கட்டாயம் தேவை என்பதை மறந்துவிடாதே !

Friday, February 8, 2013

முட்டைகோஸ்யின் மருத்துவ குணம் பற்றிய தகவல் !!!



இயற்கையின் அருட்கொடைகள் அனைத்தும் மனிதனுக்கு ஏதோ வகையில் பயன்பட்டு வருகிறது. உலகில் மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அதிகம் பயன்படுத்துகிறான்.

மனித இனம் தோன்றிய காலம் முதலே அவர்களுக்கு காய், கொடி, கீரை, பழம் என பல வகைகளில் இயற்கையானது உணவளித்து வருகிறது.

இதையே சித்தர்களும் ஞானிகளும், அன்றாடம் உண்ணும் உணவின் மூலம் எப்படி ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வது என்பதையும், அவற்றை எக்காலங்களில் உண்ணவேண்டும், எப்படி உண்ணவேண்டும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர்.

இப்படி அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கள், கீரைகள், பழங்களின் மருத்துவக் குணங்களை நம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். அந்த வகையில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் முட்டைகோஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.

முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். இதனையோ உணவாகப் பயன்படுத்துகிறோம்.

இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது.

முட்டைகோஸின் மேல் பகுதியில் மூடியிருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.

முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்

கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.

முட்டைகோஸின் பயன்களை அறிந்து அதனை நம் உணவில் சேர்த்து நீண்ட ஆரோக்கியம் பெறுவோமாக ..!!!

உடலின் செயல்திறனை ஊக்குவிக்கும் இளநீரின் நன்மைகள்.

உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும்இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோயாளிகள், நாட்பட்டசீதபேதி, ,ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது. பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும்.

நீர்க்கடுப்பு மே, ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் சிறுநீரகம்வற்றித் தடித்துச் சிவந்து சொட்டு சொட்டாகப் போகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.

சிறுநீர்த் தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம்அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகிவர,5 நாளில் அவை நீங்கும்..

உடம்பெல்லாம் அனல்போல் தகித்தால் இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தேக அனல் தணியும்.

பேதி, சீதபேதி,இ,ரத்த பேதிஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.

டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்திபேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.

வயிற்றுப் பொருமல் மந்தம் உணவு செரியாமை பெருங்குடல் வீக்கம் ஈரல் கோளாறு குடல் கோளாறுகள் என அனைத்திற்கும் இது மருந்து மற்றும் உணவும் ஆகும். காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும்.

பித்தக் கோளாறு பித்தக்காய்ச்சல் உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து டானிக் ஆகும். காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் அருந்துங்கள். மதியம் தாகத்தைத் தீர்த்து உடலில் சக்தியைப் புதுப்பிக்க ஓர் இளநீர் அருந்தி வாருங்கள்.

ரத்தத்தை தூய்மை படுத்தும் எலுமிச்சை

ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது. முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண்போல பாதுகாக்கிறது.

குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தரக்கூடிய பழவகைகளில் ஈடு இணையற்றது எலுமிச்சம் பழம். இதன் மருத்துவப் பலன்களை இப்படி பட்டியலே போடலாம். பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியை போக்கும். வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை ஒழிக்கும். பல் நோய்களை குணப்படுத்தும், வாய் நாற்றத்தைப் போக்கும். சர்ம நோய்களைக் குணப்படுத்தும். 

டான்சிலைத் தடுக்கும். விஷத்தை முறிக்கும். வாய்ப்புண்ணை ஆற்றும். தேள் கடிக்கு உதவும். மஞ்சக் காமாலையை நீக்கும். வீக்கத்தைக் குறைக்கும். வாயுவை அகற்றும். பசியை உண்டாக்கும். விரல் சுற்றிக்கு உதவும். யானைக்கால் வியாதியைக் குணப்படுத்தும்.

ஓட்டலில் சாப்பிடுவோர் கவனிக்க

ஓட்டல் சாப்பாட்டுக்காரர்கள் சுத்தமற்ற வேகாத சமையலை, உண்ண நேர்வதால் ஏற்படக்கூடிய பல தொல்லைகளை நீக்க 2 எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழிந்து, நல்ல பெருங்காயத்தைக் கலந்து, உப்பு சேர்த்துத் தினமும் குடிப்பது நல்லது. அணுகுண்டு கதிரியக்கத்திலிருந்து தப்ப அணுகுண்டு சோதனைகள் நடத்துவதால் நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள 'ப்யோபிளேன்' என்ற சத்தில் உள்ளது.

தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத் தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது. தாங்க முடியா களைப்பா, விளையாட்டு, ஓட்டப்பந்தயம், கடுமையான வேலை இவற்றால் ஏற்படும் களைப்பை நீக்க ஒரு எலுமிச்சப் பழத்தை எடுத்து உடனே கடித்துச் சாற்றையோ, அல்லது பிழிந்து சர்க்கரை போட்டோ சாப்பிடுங்கள்.

உடனடி தென்பு ஏற்படும். உண்ணாவிரதம் முறிப்போர், மீண்டும் உண்ணும்போது எலுமிச்சை பழச்சாறு அருந்தி உணவு உண்டால் தான் சீரணப் பிரச்னைகள் நேர்வதைத் தடுக்க முடியும்.

சைனஸ் பிரச்சனைக்கு என்ன தீர்வு

சைனஸ் பிரச்சினைக்கு வெவ்வேறு வகையான வைரஸ்கள் தான் காரணம். இந்த வைரஸ் தாக்குதல் காற்றின் வழியாகவே பெருமளவில் நம்மை தாக்குகிறது. இதற்கு அடுத்தபடியாக நமது தவறான உணவுப் பழக்கம், உணவு மூலமாகவும் வைரஸ் தொற்றி ஜலதோஷத்தை உண்டாக்கி விடுகிறது.

ஜலதோஷத்தின் ஆபத்தான இன்னொரு பக்கம்தான் சைனஸ். ஜலதோஷம் என்பது 3 நாளிலோ அல்லது அதிகபட்சம் 2 வாரத்திலோ குணமடைந்து விடக்கூடிய ஒன்று. அதன் பிறகும் ஜலதோஷம் குணமாகவில்லை என்றால் `சைனஸ்' கோளாறின் பிடியில் வசமாக சிக்கிக் கொண்டோம் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காது மூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவி ராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:-

ஜலதோஷத்தின் தொடர்ச்சியான அவதாரமாகத்தான் சைனஸ் திகழ்கிறது. ஜலதோஷத்தால் உருவாகும் சளி சைனஸ் அறைகளில் தங்கி கிருமிகலந்த சீழாகி மாறி விடுகிறது.

அறிகுறிகள்.....

சைனஸ் பிரச்சினையில் சிக்குபவர்களால் நன்றாக சுவாசிக்க முடியாது. சரியாக பேசவும் இயலாது. தலை பாரமாக இருக்கும். குனிந்தாலும், நிமிர்ந்தாலும் கூட `விண் விண்' என்று தெறிக்கிற மாதிரி தலை வலிக்கும். லேசாக இருமினாலும் வலி ஏற்படும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்ளும். வாசனை தெரியாது. ருசியை உணர முடியாது. மூக்கின் முக்கிய பாகங்களாக இருப்பது சைனஸ் அறைகள். வலது - இடது என்று மொத்தம் 4 ஜோடி சைனஸ் அறைகள் இருக்கின்றன.

நெற்றி பகுதியில் பிரன்டல் சைனஸ் அறைகளும் அதற்கு சற்று கீழே `எத்மாய்டு' சைனஸ் அறைகளும், மூக்குக்கு பின்னால் ஸ்பீனாய்டு சைனஸ் அறைகளும் இருக்கின்றன. முன்பக்கம் பிரதானமாக இருப்பது மேக்ஸிலரி சைனஸ் அறைகள். மூக்கின் அனைத்து செயல்களுக்கும் உறு துணையாக நிற்பது இந்த சைனஸ் அறைகள்தான். நாம் எழுப்பும் சத்தத்துக்கு சரியான ஒலி வடிவம் தருவதும் இந்த சைனஸ் அறைகளே.

அற்புத மூலிகை அறுகம்புல்

நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் அமிலத்தன்மை உடையவை ஆகும். இவை உடல் நலத்தைக் கெடுக்கின்றன. அதேவேளை அறுகம்புல் சாறு காரத்தன்மை உடையது. இது எமது ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும். இன்றைய காலகட்டத்தில் அறுகம்புல் சாற்றைக் குடிக்க விரும்புவோர் ஆயுர்வேத மருத்துவரை அணுகி அவரது அறிவுறுத்தலின்படி அருந்தலாம்.

அறுகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும். வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்து. குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது..

அறுகம்புல் கட்டி, வீக்கம் என்பவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். இரத்தக் கசிவைத் தடுக்கும். மென்மையான மலமிளக்கி. இதனால் மலச்சிக்கல் நீங்க வழி உண்டாகும். இனி அறுகம் புல்லின் அற்புதத்தன்மைகள் சிலவற்றைப் பார்ப்போம். அறுகம்புல் அமிலத்தன்மையைக் குறைக்கின்றது. நரம்பு மண்டலத்திற்கு உறுதியும் ஊட்டமும் அளித்து உடல் பலவீனத்தைப் போக்கும் ஆரோக்கியம் அளிக்கும் டொனிக் ஆகச் செயற்படுகின்றது.

உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்ததோட்ட மண்டலத்தை தூய்மைப் படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம உப்புக்கள் பலவும் உண்டு

காலையில் ஒரு தேக்கரண்டி அறுகம்புல் பொடியைச் சாப்பிட்டு நீர் அருந்த வேண்டும். காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்னதாக இதனை மேற்கொள்வது சிறந்தது. இப்பொடியைத் தேனில் குழைத்தும் உட்கொள்ளலாம். குழந்தைகளும் பொடியை விழுங்குவது மிகவும் எளிய வழியாகும்.

கடுகு சிறுசு பலனோ பெரிசு

சமையல் அறையில் முன்னணி இடத்தை பெற்ற பொருளில் முக்கியமானது கடுகு. இதில் உள்ள ஹோமோபிராசினோலைட் என்ற மூலப்பொருள் தசைகளுக்கு வலு சேர்ப்பதுடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கிறது. 

கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற உதவுகிறது.

அதுமட்டுமல்ல, பசியை தூண்டி சிக்கலில்லா செரிமானத்துக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

கடுகானது மைக்ரேன் தலைவலிக்கு அருமருந்தாக செயல்படுகிறது. அதேபோல் ருமட்டாய்டு ஆர்த்தடீஸ், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவைகளை குணமாக்குகிறது. தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

ஜீரணக்கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுகு சிறந்த மருந்தாகும். ஜீரணத்தை தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன், அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.

Thursday, February 7, 2013

நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்

ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.

நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.

வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

ஏல‌க்காயை பொடியா‌க்க

ஏலக்காயைப் பொடித்துப் போடவும் என்றவுடன் பலரும் ஏலக்காயை அப்படியே அம்மியில் வைத்து பொடிக்க முயற்சி செய்வர். இது நன்கு பொடியாகாது.

ஏலக்காயை வெறும் வாணலியில் சிறிது நேரம் வறுத்து பிறகு பொடிக்கவும். எளிதாய் பொடியாகும்.

அதேசமயம், ஏலக்காயைத் தட்டிப் போடவும் என்ற இடத்தில், வறுக்காமல் ஏல‌க்காயுட‌ன் ‌சி‌றிது ச‌ர்‌க்கரையுட‌ன் அம்மியில் வைத்து, இலேசாக இடித்துப் போடலாம்.

இளமையாக என்றும் இருக்க உதவும் ஏலக்காய் !

இளமை காக்க எளிய வழிகள் ஏலக்காய் நல்லதா?
மிக நல்லது!

மிளகுக்கு அடுத்து உலகில் அதிக மதிப்பு மிக்க நறுமணப் பொருள் ஏலக்காய்தான்.

ஏலக்காய் எல்லோருக்கும் மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும் அரிய பொருளாகும்.

ஏலக்காயை தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் இதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது.எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது.

ஏலக்காய் ஆண்மைக் குறைவு பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியமும் உண்டாக்க வல்லது பலர் அறியாத செய்தி. இது தாம்பத்திய வாழ்வில் இனிமை சேர்க்கவல்லதும் கூட!

இரவு ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி தொண்டைக்கட்டு உள்நாக்கில் வலி குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்தி ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

நாம் குறைந்தபட்சம் தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்தால் கூட நல்ல சுறுசுறுப்பைப் பெற முடியும். அதோடு ஜீரணக்கோளாறு இல்லாமல் ஆரோக்கியமான உடலையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

பாலில் சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து இருபாலரும் தினமும் அருந்தி வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் குணமாகும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையே பயன்படுத்தினால் போதும்.

ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.சில சமயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்கு நெஞ்செரிச்சலும் வாய்வுத் தொந்தரவும் இருக்கும். இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது. இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து விழுங்கினாலும் உடல் ஜீரணமாகும்.

இதே போல ஏலக்காயை ‘சூயிங்கம்’மிற்கு பதிலாக மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும்.சிலர் வாயிலிருந்து முடை நாற்றம் வீசும். அருகில் இருந்து பேசமுடியாத படி வாய் நாற்றம் தூக்கி அடிக்கும். இவர்களும் ஏலக்காய் மெல்லலாம்.

நெல்லிக்காய்ச் சாறில் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளைச் சேர்த்துத் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் மேகவெட்டை நோய்க்கு இது அருமருந்தாகும். இத்துடன் சிறுநீர்ப்பை சுழற்சியும் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.

அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும். பிறகு புதினாக் கீரையில் 5 6 இலைகள் மட்டும் இதில் போட்டுக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும்.

ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப் பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும், ஜீரணம் அதிகரிக்கும்.

ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.

ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும். ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.

ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விலகும்.

அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்காய் பெரிதும் உதவும். ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

பாலில் ஏலக்காய் சேர்த்து சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித்தேனும் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைப் பேறில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும். இதனை இருபாலரும் அருந்தலாம். இருவருக்குமே பலன் தரும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், `ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும்ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும்ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் தொண்டை வலி தீரும்.

உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி !!

உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி 
பல் ரோகப்பொடி
சுக்கு, காசிக்கட்டி, கடுக்காய்த் தோல், இந்துப்பு இவைகளைச் சமமாக எடுத்துலர்த்தி இடித்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு சதா பல்லில் எகிறுகளில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டு இருக்கும் அன்பர்கள், சிரித்தால் அழுதால் பல்லில் இரத்தம் வருபவர்கள், தினம் இரண்டும் முறையும் பல்துலக்கி வர இவையாவும் ஒழிந்துபோகும்.

உணவு செரிக்க எளிய வழி!
செரிமானக் கோளாறு உள்ளவர்கள் உணவு சாப்பிட்டதும் பறித்த (உலராத) ஒரு இஞ்சித் துண்டை வாயில் போட்டு மெல்ல வேண்டும். கடும் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாந்தி முதலியவற்றால் அவதிப்படுகிறவர்களும் இதே போல் ஒரு சிறு துண்டை மென்று தின்றால் போதும். இது வயிற்றையும், குடல் பகுதிகளையும் நன்கு பாதுகாக்கிறது. இந்தப் பகுதிகளில் வலி இருந்தாலும் உடனே குணமாகி விடுகிறது. சாப்பிட்ட உணவும் செரிமானம் ஆகிறது. வாந்தி ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.

இப்படிச் சாப்பிடப்படும் சிறு துண்டு உடனே நன்கு உமிழ் நீரைச் சுரக்கச்செய்கிறது. அதன்மூலம் உணவு செரிமானத்துக்கு இன்றியமையாதது பயன்பரும் காடிப் பொருளையும், ஒரு வகையான எண்ணெயையும் உற்பத்தி செய்கிறது. இதனால் உணவு உடனடியாக ஜீரணமாகிறது.

அசைவ உணவு, பொரியல் வகைகள் ஆகியவை அதிகமாய்ச் சாப்பிட்டால் இது போல் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடவும்.

இல்லையெனில், உலராத இஞ்சியை ரசமாக்கி அரை தேக்கரண்டி மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ரசத்துடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் ரசம், ஒரு தேக்கரண்டி புதினா இரசம், ஒரு தேக்கரண்டி தேன் முதலியவற்றைக் கலந்து அருந்தினால் போதும்.

காலை நேரத்தில் காய்ச்சலா?
காலை நேரத்தில் காய்ச்சலால் அவதிப்படுபவர்களும், மஞ்சள் காமாலை, மூலத்தொந்தரவு, வாந்தி, பித்தக் கோளறு ஆகியன உள்ளவர்களும், காய்ச்சல் ஏற்படுவது போல் உணர்பவர்களும் மேற்கண்ட முறையில் ஒவ்வொரு முறையும் அவ்வப்போதே தயாரித்துத் தினமும் மூன்று வேளை வீதம் அருந்தி வரவேண்டும் இஞ்சி, தேன், புதினா, எலுமிச்சை ஆகியவை கலந்த இந்த டானிக் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படாமல் முன்னரே தடுக்கும் சக்தி வாய்ந்த மருந்தும் ஆகும். உலராத இஞ்சிக்குப் பதிலாக சுக்குப் பொடியையும் பயன்படுத்தலாம்.

உடனே காய்ச்சல் தணிய'
ஆஸ்துமா, நுரையீரலில் காசம், கக்குவான் இருமல், மார்புச்சளி, கடுமையான காய்ச்சல் முதலியவை குணமாக ஒரு தேக்கரண்டி இஞ்சி இரசத்தை ஒரு டம்ளர் வெந்தயக் கஷாயத்தில் கலக்கவும். சுவைக்காக ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தவும், இன்புளுன்சா காய்ச்சல்காரர்களுக்கு இஞ்சி சேர்க்கப்பட்ட இந்தக் கஷாயம் உடனடியாக உடலை வியர்க்கச்செய்து காய்ச்சலின் வேகத்தை மட்டுப்படுத்திவிடுகிறது.

குழந்தை வேண்டுமா?
தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வமில்லாதவர்களுக்கு இது புத்துணர்ச்சியை ஏற்படுத்தித் தரும். மலட்டுத் தன்மை, விந்து முன் கூட்டியே வெளிப்படுதல், மேக நோய் போன்றனவும் உடனே குணமாகும். ‘ஆண்மை’ இல்லாதவன் என்று ஒதுக்கப்பட்ட ஆண்கள் இரவு படுக்கும் முன்பு அரைத்தேக்கரண்டி இஞ்சி இரசத்தையும், ஒரு தேக்கரண்டி தேனையும் அடுத்தடுத்து சாப்பிடவும், மூன்றாவதாக அவித்த கோழிமுட்டையில் பாதி சாப்பிடவும். இதனால் தாது பலம் பெறுவார்கள். தொடர்ந்து ஒரு மாதம் இதே போல் இரவில் சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும்.

ஜலதோஷம் உடனடி நிவாரணம்
ஜலதோஷம் குணமாக, இஞ்சியை சிறுசிறு துண்டுகாய் நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைக்கவும். பிறகு அதை வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் காபி சாப்பிடுவது போல சூடாகவே அருந்த வேண்டும்.

சுக்குப் பொடிகூட போதும் தேநீர் தயாரிக்க!
ஜலதோஷம் தொடர்பான காய்ச்சலும், ஜலதோஷமும் குணமாக இஞ்சித்தேநீர் தயாரித்து அருந்த வேண்டும். முதலில் இஞ்சித் துண்டுகளை கொதிக்கும் தண்ணீரில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து டீத்தூளை இந்தக் கலவையில் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பால், சர்க்கரை ஆகியன சேர்த்து அருந்தவேண்டும்.

இருமலா?
இஞ்சித் துண்டை ரசமாக்கி, அதில் தேன் கலந்து தினமும் நான்கு வேளை அருந்தினால் எப்படிப்பட்ட இருமலும் உடனே கட்டுப்படும். ஒரு வேளைக்கு இரண்டு மூன்று துண்டுகளை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் இரசமாக்கி வடிகட்டி, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்த வேண்டும். ஒவ்வொரு வேளையும் இதே போல் தயாரித்து உடனுக்குடன் அருந்தி வர வேண்டும். இருமலுக்கும் ஜலதோஷத்துக்கும் இஞ்சியைப் போல் சிறந்த மருந்து இல்லை என்பார்களே மூலிகை மருத்துவர்கள்.

இஞ்சிக் காபி அருந்தலாமா?
அதிகமான அல்லது மட்டமான மாதவிடாய்ப் போக்கு உள்ள பெண்கள், உலராத பச்சையான இஞ்சியைத் தோல் உரிந்து இடித்துப் பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும். இதற்கு ஒரே ஒரு சிறிய இஞ்சித்துண்டு போதும். ஒரு டம்ளர் கொதிக்கும் தண்ணீரில் இந்தப் பொடியைப் போடவும். 5 நிமிடங்கள் கழித்து இறக்கி, வடிகட்டி அருந்த வேண்டும். தேவை எனில் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். காபி போல சுவையாகவும் இருக்கும். மாதவிடாய்க் கோளாறுகள் அனைத்தையும் குணமாக்கும். ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் அந்தந்த வேளைச் சாப்பாட்டிற்கு பிறகு இந்தச் சூடான இஞ்சி காபியை அருந்த வேண்டும். இந்தியாவின் சில பகுதிகளில், இஸ்லாமிய பெண்கள் இந்த முறையைப் பின்பற்றி பலனடைந்துள்ளார்க்ள.

தலைவலி உடனே குணமாக!
உலர்ந்த இஞ்சியைச் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அந்தப்பசையை நெற்றியில் தடவ உடனே தலைவலி குணமாகும். பல் வலி என்றால் அந்த இடத்துக்கு மேலே முகத்தில் இந்தப் பசைையைத் தடவ வேண்டும்.

காது வலி என்றால், இஞ்சிச்சாற்றில் ஒன்று அல்லது இரண்டு துளிகளைக் காதுக்குள விட வேண்டும்.

எல்லா விதமான உடல் வலிகளையும் இஞ்சி குணமாக்கும். முதுகு வலி, இடுப்பு வலி என்றால் அந்தந்த இடங்களில் இஞ்சிப் பசையை அழுத்தி தடவினால் போதும்.

இதய நோய்களைக் குணப்படுத்தும் சுக்கு!
இதயத்தில் வலி, இதய பலவீனம், இதயப்படபடப்பு முதலியவை குணமாக இருபது கிராம் இஞ்சியை நன்கு கழுவி மிக்ஸி மூலம் ரசமாக்கி ஒரு டம்ளரில் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சாற்றில் இரு தேக்கரண்டி தேன் சேர்த்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இந்த முறையில் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் இதய சம்பந்தமான கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.

உலர்ந்த இஞ்சியைத்தான் சுக்கு என்கிறோம். ஒரு தேக்கரண்டி சுக்குத்தூளை இதே போல் ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு, இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து, அருந்தினாலும் இதய வலி, பலவீனம், படபடப்பு முதலியவை குணமாகும்.

நீரிழிவு நோய்க்காரர்கள் இஞ்சிச் சாற்றிலோ சுக்குச் சாற்றிலோ கல்கண்டு போட்டு தண்ணீர் சேர்த்துக் குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

நெஞ்சு வலி குணமாகும்!

பாடகர்களும், தொண்டைப்புண், குரல் கமரல் முதலியவற்றால் அவதிப்படுவோர்களும் இஞ்சியை நன்கு மென்று தின்று உமிழ்நீரை வெளியில் துப்பவேண்டும்.

இளநீரில் தலா ஒரு தேக்கரண்டி சுக்குத் தூள், கல்கண்டுத் தூள் முதலியவற்றைக் கலந்து தினமும் இருவேளை வீதம் முடித்தால் நெஞ்சுவலி குணமாகும்.

ஆடுகின்ற பற்கள் கெட்டிப்பட்டு நிற்கவும், மஞ்சள் நிறப்பற்கள் ‘பளிச்’ என்று பிரகாசிக்கவும் 100 கிராம் சுக்குபொடியில் 7 கிராம் அளவு டேபிள் சால்ட் கலந்து, பற்பொடி தயாரிக்கவும். உப்பு சேர்க்கப்பட்ட இந்த சுக்குப் பற்பொடி வாய் நாற்றத்தையும் போக்கிவிடும்.

நறுமணப் பொருள்களும், வாசனைப் பொருள்களும் தயாரிக்க இஞ்சிலியிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயும் பயன்படுகின்றன. இவை இஞ்சி ரொட்டி, வயிற்றுக் கோளாறுகள் சம்பந்தமான மருத்துப் பொருள்கள் ஆகியன தயாரிக்கவும் பயன்படுகின்றன.

உலகில் சீனாதான் இஞ்சியை அதிகம் இறக்குமதி செய்து தக்க பாதுகாப்புடன் இருப்பில் வைத்திருக்கிறது.

வயிற்றுவலி என்றால் உடனே வீட்டில் சுக்குத் தேநீர் போடுவதற்குக் காரணம் பண்டைய கிரேக்க வைத்திய மேதைகளான அலிசென்னாவும், கேலனுந்தாம். இவர்கள் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி முதலியவற்றுக்கு சுக்கு டீ தூள், அருந்தச் சொன்னார்கள். அப்போது இதற்குச் சுக்கு கஷாயம் என்று பெயர்.

வேத காலத்திலும் இஞ்சியும், உலர்ந்த இஞ்சியான சுக்கும் மிக முக்கியமான மருந்துகளாக இருந்திருக்கின்றன.

இவ்வளவு ஆதாரங்கள் எதற்காக? தினமும் சுக்கு தேநீர் அல்லது சுக்கு காபி சாப்பிட்டாவது உடல் நலத்தைப் புதுப்பித்து ஆரோக்கியமாக வாழ ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்!

குறைந்த செலவில் கிடைக்கும் தங்கபஸ்பம், இஞ்சி.

வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !

* சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.

* அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

* வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

* வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.

* நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

* மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

* கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.

* பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

* தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

* சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

பளபளக்கும் சருமத்துக்கு உதவும் பப்பாளி!

பளீர் பளபளப்பையும், சூரியனும் கொஞ்சம் வெட்கப்படக் கூடிய நிறத்தையும் அள்ளி அள்ளித் தருவதில் ஒரு வள்ளல் பப்பாளி. வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. பப்பாளி மருத்துவத்தை செய்து பாருங்களேன்… பலே பப்பாளி தரும் பளீர் பளபளப்பில் சொக்கிப் போவீர்கள்!

எப்போது பார்த்தாலும் எண்ணெய் வழிந்து டல்லாக இருக்கிறோமே என்று கவலைப்படுகிறவர் களுக்காகவே இந்த பப்பாளி கூழ் மசாஜ்…

பப்பாளி பழ தோலை சீவி கூழாக்குங்கள். இந்த கூழ் & ஒரு டீஸ்பூனுடன், முல்தானி மட்டி | அரை டீஸ்பூன் கலந்துகொள்ளுங்கள்.

இதை முகத்தில் பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு, மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் ‘பளிச்’ என்று பிரகாசிக்கும். அதோடு, மேனியை சிவப்பாக்கும் மந்திரமும் இருக்கிறது இந்த மசாஜில்!

ஆண்களின் முகம் போல் சொரசொரப்பாக இருக்கும் சிலரின் முகம். அவர்களுக்கான சிறப்பு மருந்து இருக்கிறது, பப்பாளியின் தோலில்.

பப்பாளி தோலை வேகவைத்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கூழை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்து வந்தால், தொடத் தொட மிருதுவான சருமம் கிடைக்கும்.

கண்ணுக்குக் கீழ் கருவளையம், கருமை படர்தல், கன்னத்தில் கருந்திட்டு என்று கருமை ஆக்கிரமித்த பகுதிகளை நார்மல் நிறத்துக்குக் கொண்டு வருவதில் பப்பாளி ஒரு நிபுணர்.

சோற்றுக் கற்றாழை இலை ஒன்றின் ஜெல்லுடன், பப்பாளி கூழ் & 1 டீஸ்பூன் கலந்துகொள்ளுங்கள்.

இதை கழுத்திலிருந்து மேல்நோக்கி முகம் முழுவதும் நன்றாகத் தேய்த்து, இது நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள். வாரம் இருமுறை இந்த சிகிச்சை செய்தாலே கருப்பெல்லாம் காணாமல் போய்விடும்.

(நார்மல் சருமம் கொண்டவர்களும் இதை ஒரு ‘ஃபேஸ் பேக்’ ஆக உபயோகிக்கலாம்!)

இளமையையும் நிறத்தையும் அள்ளிக் கொடுக்கும் இந்த பப்பாளி பேஸ்ட் குளியல்…

பப்பாளி பழக் கூழ், மஞ்சள் வாழைப்பழக் கூழ், சந்தனப்பொடி, பயத்தமாவு பொடி… நான்கை யும் ஒரே அளவு எடுத்து, சூடான நீரை ஊற்றி, பேஸ்ட் ஆக்குங்கள்.

முகம் முதல் பாதம் வரை இதைப் பூசி, பத்து நிமிடம் ஊறவிட்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி குளியுங்கள். 10 நாளைக்கு ஒரு முறை இப்படி குளித்து வந்தால், இறந்த செல் புதுப்பிக்கப்பட்டு, அழகும் இளமையும் அள்ளிப் போகும்.

முகத்தைப் பராமரிக்கும் அளவுக்கு பலரும் பாதத்தின் மீது கவனம் செலுத்துவதில்லை. இதனால், ஒட்டுமொத்த உடம்பையும் தாங்கிப் பிடிக்கும் பாதத்தில் சுருக்கமும், கருமையும் படர்ந்து கரடு முரடாகிவிடும். இதற்கு பப்பாளி தரும் டிப்ஸ் இதோ…

பப்பாளி கூழ் & 2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் & கால் டீஸ்பூன், விளக்கெண்ணெய் & கால் டீஸ்பூன் மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள்.

இந்த பேஸ்ட்டை பாதங்களில் தடவி, காய்ந்ததும் கழுவுங்கள். கருமையும் சுருக்கமும் காணாமல் போவதுடன் மெத்மெத்தென்ற பாதங்கள் கிடைக்கும்.

சிவந்த மேனியை விரும்புகிறவர்களுக்கான ஸ்பெஷல் பேக் இது…

உலர்ந்த திராட்சை & 10, கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் & 1, இவற்றை முந்தைய நாளே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் பப்பாளி கூழ் & அரை டீஸ்பூன் கலந்துகொள்ளுங்கள்.

இதை முகத்துக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, 15 நிமிடம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவி வர, சிவப்பழகு க்ரீம் விளம்பரங்களில் வரும் பெண்கள் போன்ற மந்திர மாற்றத்துடன் ஜொலிப்பீர்கள்.
‘‘உறுத்தும் முடி நீக்க உதவுங்கள் ப்ளீஸ்…’’

‘‘என் முகத்திலும், கை, கால்களிலும் அதிகமாக முடி முளைத்திருந்தது. இதற்காக பியூட்டி பார்லர் போய் வாக்ஸிங்கும் த்ரெடிங்கும் செய்யத் தொடங்கினேன். இப்போது பார்த்தால் அந்த இடங்களில் முன்பைவிட அதிகமாகவும் தடிமனாகவும் முடி வளருகிறது. பார்லர் போகாமல் இருக்கவே முடியவில்லை. இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட, உதவுங்கள் ப்ளீஸ்…’’

‘‘பெண்களுக்கு முகம் மற்றும் இதர பாகங்களில் அதிக அளவு முடி வளர்வதற்குக் காரணமே, ஹார்மோன் மாற்றங் களும் பழக்கவழக்கங்களும்தான். த்ரெடிங், வாக்ஸிங் போன்ற வற்றைச் செய்யும்போது முடி அடர்த்தியாவதுடன், அதிகமாக வளரவும் தொடங்கும்.

முகத்தில் இருக்கும் மீசை, தாடியையும், கைகளில் புசுபுசுவென வளர்ந்த முடிகளையும் நிரந்தரமாக அகற்ற இயலாது. ஆனால், முடியின் கருமையையும், வளர்ச்சியையும் தடுத்து, வலுவிழக்கச் செய்வதுடன், முடிகளை உதிர வைக்கவும், மேற்கொண்டு முடி வளராமல் தடுக்கவும் சில சிகிச்சைகள் இருக்கின்றன.

சுட்ட வசம்புத்தூள், குப்பைமேனி கீரை பவுடர், கோரைக்கிழங்கு பவுடர், கஸ்தூரிமஞ்சள் பவுடர்… இந்த நான்கையும் சம அளவு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி, அழகைக் கொடுக்கும் அசத்தல் மிக்ஸ் இது! மஞ்சள் பூசிக் குளிப்பதுபோல் இந்த பவுடரை முகம் முதல் பாதம் வரை நன்றாக தேய்த்து குளியுங்கள். புருவத்தில் இந்த பவுடர் படுவதால் முடி உதிர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம். வாரம் இருமுறை குளித்து வந்தாலே முகம், உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகள் நிறம் மாறி, பின் உதிர்ந்துவிடும்.

மிருதுவான ப்யூமிக்ஸ்டோனை (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) வாங்குங்கள். கலந்து வைத்திருக்கும் மிக்ஸை குழைத்து ப்யூமிக்ஸ்டோனில் தடவி, முடி இருக்கிற பகுதிகளில் லேசாகத் தேயுங்கள். இதை தினமும் செய்து வந்தாலும் முடி உதிரும். மேற்கொண்டு முடி வளராது.

த்ரெடிங், வாக்ஸிங் என்று அடிக்கடி பியூட்டி பார்லர் பக்கம் போகிறவர்கள், தினமும் முகம், கை, கால்களை கழுவும்போதெல்லாம் சோப்புக்கு பதிலாக இந்த மிக்ஸை பயன்படுத்தலாம். இதனால், முடியை அகற்றியதால் ஏற்பட்ட கருமையும் புள்ளிகளும் மறைவதுடன் சருமமும் மிருதுவாகும்.’’

“சாப்பிடும் போது நீர் அருந்த கூடாது” ஏனென்று தெரியுமா??


நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், ந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் ஜீரண பணியை பாதித்துவிடும்.

“இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்” என்று ஆதங்கப்படுகிறார் பிரபல டயட்டீஷியன் ஷோனாலி.

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் கேஸ்கள்தான் என்று கூறுகிறார் ஷோனாலி.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேப்போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்.அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால்,அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்துவிடும்.
“சாப்பிடும் போது நீர் அருந்த கூடாது” ஏனென்று தெரியுமா??

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.  அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், ந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் ஜீரண பணியை பாதித்துவிடும்.

“இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்” என்று ஆதங்கப்படுகிறார் பிரபல டயட்டீஷியன் ஷோனாலி.

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் கேஸ்கள்தான் என்று கூறுகிறார் ஷோனாலி.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேப்போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்.அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால்,அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்துவிடும்.

கறிவேப்பிலை நீரிழிவிற்கு சிறந்த மருந்து!

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன.

மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது.

பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல. அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர்சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரியவந்தது.

மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10- இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டுமென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்

முடி வளர சித்தமருத்துவம்..!!


முடி உதிர்வதை தடுக்க:

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

முடி சம்பந்தமான நோய்களுக்கு சில குறிப்புக்கள்…
வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

Sunday, February 3, 2013

தமிழ் மொழிதான் தமிழரின் உண்மையான அடையாளம் என்று உலகிற்கு எடுத்துரைத்தவர் மறைமலை அடிகள் !!!

தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச கடப்பாடு கொண்டால் நம் தாய்மொழியான தமிழ்மொழி வாழுமா? வீழுமா? என்ற கேள்விக்கே இடமில்லாமல் போகும். தமிழ் உலக வரலாற்றில் அத்தகைய உணர்வு வெகு சிலருக்குதான் இருந்திருக்கிறது. அந்த வெகு சிலரில் ஒருவர் 'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒரு மாபெரும் இயக்கத்தையே தொடங்கி தமிழுக்காக அரும்பங்காற்றியிருக்கிறார். தமிழ் உலகம் அவரை 'தமிழ்க்கடல்' என்றும், 'தனித்தமிழின் தந்தை' என்றும் போற்றுகிறது.நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் அந்த வரலாற்று மாந்தர் மறைமலை அடிகள். 

1876-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் நாகப்பட்டினத்திற்கு அருகே அமைந்துள்ள காடம்பாடி எனும் சிற்றூரில் சொக்கநாத பிள்ளை, சின்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் மறைமலை அடிகள். பெற்றோர் அவருக்கு இட்ட இயற்பெயர் வேதாசலம். பெரியவரானதும் அவர் சைவ சமய சொற் பொழிவுகளை ஆற்றி வந்ததால் சுவாமி வேதாசலம் என்று அவரை அழைத்தனர் பொதுமக்கள். பிந்நாளில் தமிழ் மொழி மீது ஏற்பட்ட பெரும் பற்றாலும் தனித்தமிழ் மீது இருந்த ஆர்வத்தாலும் வேதாசலம் என்ற தன் பெயரை தூய தமிழில் மாற்ற விரும்பினார். அந்த பெயரை வேதம், அசலம் என்று இரண்டு சொற்களாகப் பிரிக்கலாம். வேதம் என்ற வடமொழி சொல்லுக்கான தூய தமிழ்ச்சொல் மறை. அசலம் என்பதற்கான தூய தமிழ்ச்சொல் மலை. சுவாமி என்பதற்கான தூய தமிழ்ச்சொல் அடிகள். எனவே சுவாமி வேதாசலம் என்ற பெயர் 'மறைமலை அடிகள்' என்றானது.

வெஸ்லியன் மிஷன் என்ற கிறிஸ்துவப் பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்றார் மறைமலை அடிகள். அங்கு ஆங்கிலம் முதல் மொழியாக இருந்ததால் ஆங்கிலத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார். வே. நாரயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றுக் கொண்டார். அதோடு நின்று விடாமல் சமஸ்கிருத மொழியையும் நன்கு கற்றறிந்தார். எனவே அவருக்கு மூன்று மொழிகளில் புலமை இருந்தது. தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருந்த தனியாத தாகத்தால் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, பதினொன் கீழ்கணக்கு போன்ற சிரமமான நூல்களையும் தெளிவாக கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலிருந்தே தன்னோடு பழகி வந்த செளந்தரம் என்ற பெண்ணை மணந்து கொண்டு ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார் மறைமலை அடிகள்.

நாகை மீனலோசனி என்ற செய்தித்தாளுக்கு தகவல் சேகரித்துக் கொடுக்கும் பணியை அவர் மேற்கொண்டார். சைவ சித்தாந்தத்தில் பெயர் பெற்ற சோம சுந்தர நாயக்கரின் சொற்பொழிவுகளைப் பாராட்டி அந்த பத்திரிகையில் அவர் கட்டுரைகள் எழுதினார். அவற்றைப் படித்து ரசித்த நாயக்கருக்கு அவருடைய எழுத்தின் மீது ஈடுபாடு ஏற்படவே சித்தாந்த தீபிகை என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பணியில் மறைமலை அடிகளை அமர்த்தினார். அந்தப் பணியை விருப்பமுடன் செய்த அதே வேளையில் தமிழாசிரியராக வர வேண்டும் என்ற தமது விருப்பத்துக்காகவும் உழைத்தார் மறைமலை அடிகள். தமிழாசிரியர் பணித் தேர்வுக்கு தம்மை தயார் செய்து கொண்டார். அந்தப் பணிக்காக நடைபெற்ற நேர்முகத் தேர்வில் மறைமலை அடிகளின் புலமையை சோதித்தவர் அப்போது புகழ் பெற்றிருந்த பரிதிமார் கலைஞர் என்ற தமிழறிஞர்.

மறைமலை அடிகளின் புலமை அவருக்கு தமிழாசிரியர் பணியைப் பெற்றுத் தந்தது. மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் சொந்தமாக இதழ் நடத்த விரும்பிய மறைமலை அடிகள் 1902-ஆம் ஆண்டு ஞானசாகரம் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அதன் பெயரை பின்னர் அழகு தமிழில் 'அறிவுக்கடல்' என்று மாற்றினார். காலப்போக்கில் தனக்கு சோறு போட்ட தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் துணிந்தார் மறைமலை அடிகள். தமிழாசிரியர் பணியை விட்டு விட்டு சொந்தமாக தொழில் தொடங்கினார். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள் கலப்படத்திலிருந்து தமிழை மீட்கவும், தனித்தமிழில் பேசவும், எழுதவும் தமிழர்களுக்கு ஊக்கமூட்ட முடிவெடுத்தார். வெறும் பேச்சோடு நின்று விடாமல் அதற்கு ஒரு முன்னுதாரணமாக செயல்படத் தொடங்கினார். தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார். அப்போதுதான் தன் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். அவரைப் பின்பற்றி பல தமிழர்கள் தங்களுக்கு தூய தமிழில் பெயர் சூட்டிக் கொண்டனர்.

முல்லைப்பாட்டு, பட்டிணப்பாலை போன்ற நூல்களுக்கு எளிமையான தமிழில் உரை எழுதினார். கடுமையானத் தமிழாக இல்லாமலும், கலப்புத் தமிழாக இல்லாமலும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தூயத் தமிழை அவர் பயன்படுத்தினார். வடமொழியில் காளிதாசன் படைத்த சாகுந்தல எனும் காதல் காவியத்தை தமிழில் மொழிப் பெயர்த்தார். மொழிக்கலப்பு தமிழ் மொழிக்குப் பாதிப்பாக அமையும் என்று நம்பிய அவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஹிந்தி மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாகவும், குறியாகவும் இருந்தார். ஹிந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கும் சென்றார். ஆனால் தமிழ், தமிழ் என்று மட்டும் அவர் கண்மூடி வாழவில்லை. ஆங்கில மொழி அறிவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆங்கிலத்தில் உள்ள நல்ல நூல்களைப் படித்தறியவும், நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் ஆங்கில அறிவு அவசியம் என்று அவரே கூறியிருக்கிறார்.

தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த பல சமஸ்கிருத சொற்கள் வழக்கொழிந்து போயின. நமஸ்காரம், ஜலம், சந்தோஷம், அபேட்சகர் போன்ற வடமொழி சொற்கள் முறையே வணக்கம், நீர், மகிழ்ச்சி, வேட்பாளர் என்றாயின. அந்தத் தூய தமிழுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டியது மறைமலை அடிகளுக்குதான். தமிழையே உயிர் மூச்சாக சுவாசித்த அவர் தம் வாழ்நாளில் மொத்தம் 56 நூல்களை எழுதினார். அவருக்கு கடவுள் பக்தி நிறைய இருந்தாலும் முற்போக்கு சிந்தனையும் அதிகமாக இருந்தது. தம் வாழ்நாளில் அவர் காதலித்த விசயங்கள் இரண்டு ஒன்று தமிழ், மற்றொன்று மனைவி செளந்தரம். எனவே மனைவி இறந்த சில மாதங்களிலேயே பிரிவைத் தாங்காமல் அவரும் மரணத்தைத் தழுவினார். கடைசி வரை தமிழுக்காக உழைத்த மறைமலை அடிகள் 1950-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் நாள் தமது 75-ஆவது வயதில் காலமானார்.

'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒன்று தேவைதானா? என்று எவர் வேண்டுமானாலும் எளிமையாக கேள்வி கேட்டுவிடலாம். ஆனால் ஒரு மொழியின் மீது காதல் கொண்டவர்களால்தான் அதன் முக்கியத்துவத்தை உணர முடியும். தமிழ் மொழிதான் தமிழரின் உண்மையான அடையாளம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்ததால்தான் தனித்தமிழ் இயக்கத்தையே ஆரம்பித்தார் மறைமலை அடிகள். அவரைப்போன்றோர் சிந்திய வியர்வையின் பலனாகத்தான் இன்று நமது தமிழ்மொழி செம்மொழி தகுதியைப் பெற்றிருக்கிறது. அவருக்கு தமிழுலகம் நன்றி கூறும் அதே வேளையில் அவரிடமிருந்துக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

ஒன்பதாம் வகுப்பு வரைதான் கல்வி கற்றிருந்தாலும் ஆசிரியர் பணியை எட்டும் துணிவு அவரிடம் இருந்தது. அந்தத் துணிவால் ஆசிரியர் பணி கிடைத்தும் தன்னுடையக் கொள்கைக்காக அந்தப் பணியை விட்டு விலகி வெறும் பேச்சால் மட்டுமே கொள்கைகளைப் பரப்பி விட முடியாது என்ற தெளிவும் அவரிடம் இருந்ததால்தான் அவர் தன்னுடையக் கொள்கைகளை வாழ்ந்தும் காட்டினார். இவற்றால்தான் அவருக்கு தமிழ் வரலாற்றில் ஒரு தனி இடம் கிடைத்தது.