உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி
பல் ரோகப்பொடி
சுக்கு, காசிக்கட்டி, கடுக்காய்த் தோல், இந்துப்பு இவைகளைச் சமமாக எடுத்துலர்த்தி இடித்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு சதா பல்லில் எகிறுகளில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டு இருக்கும் அன்பர்கள், சிரித்தால் அழுதால் பல்லில் இரத்தம் வருபவர்கள், தினம் இரண்டும் முறையும் பல்துலக்கி வர இவையாவும் ஒழிந்துபோகும்.
உணவு செரிக்க எளிய வழி!
செரிமானக் கோளாறு உள்ளவர்கள் உணவு சாப்பிட்டதும் பறித்த (உலராத) ஒரு இஞ்சித் துண்டை வாயில் போட்டு மெல்ல வேண்டும். கடும் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாந்தி முதலியவற்றால் அவதிப்படுகிறவர்களும் இதே போல் ஒரு சிறு துண்டை மென்று தின்றால் போதும். இது வயிற்றையும், குடல் பகுதிகளையும் நன்கு பாதுகாக்கிறது. இந்தப் பகுதிகளில் வலி இருந்தாலும் உடனே குணமாகி விடுகிறது. சாப்பிட்ட உணவும் செரிமானம் ஆகிறது. வாந்தி ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.
இப்படிச் சாப்பிடப்படும் சிறு துண்டு உடனே நன்கு உமிழ் நீரைச் சுரக்கச்செய்கிறது. அதன்மூலம் உணவு செரிமானத்துக்கு இன்றியமையாதது பயன்பரும் காடிப் பொருளையும், ஒரு வகையான எண்ணெயையும் உற்பத்தி செய்கிறது. இதனால் உணவு உடனடியாக ஜீரணமாகிறது.
அசைவ உணவு, பொரியல் வகைகள் ஆகியவை அதிகமாய்ச் சாப்பிட்டால் இது போல் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடவும்.
இல்லையெனில், உலராத இஞ்சியை ரசமாக்கி அரை தேக்கரண்டி மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ரசத்துடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் ரசம், ஒரு தேக்கரண்டி புதினா இரசம், ஒரு தேக்கரண்டி தேன் முதலியவற்றைக் கலந்து அருந்தினால் போதும்.
காலை நேரத்தில் காய்ச்சலா?
காலை நேரத்தில் காய்ச்சலால் அவதிப்படுபவர்களும், மஞ்சள் காமாலை, மூலத்தொந்தரவு, வாந்தி, பித்தக் கோளறு ஆகியன உள்ளவர்களும், காய்ச்சல் ஏற்படுவது போல் உணர்பவர்களும் மேற்கண்ட முறையில் ஒவ்வொரு முறையும் அவ்வப்போதே தயாரித்துத் தினமும் மூன்று வேளை வீதம் அருந்தி வரவேண்டும் இஞ்சி, தேன், புதினா, எலுமிச்சை ஆகியவை கலந்த இந்த டானிக் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படாமல் முன்னரே தடுக்கும் சக்தி வாய்ந்த மருந்தும் ஆகும். உலராத இஞ்சிக்குப் பதிலாக சுக்குப் பொடியையும் பயன்படுத்தலாம்.
உடனே காய்ச்சல் தணிய'
ஆஸ்துமா, நுரையீரலில் காசம், கக்குவான் இருமல், மார்புச்சளி, கடுமையான காய்ச்சல் முதலியவை குணமாக ஒரு தேக்கரண்டி இஞ்சி இரசத்தை ஒரு டம்ளர் வெந்தயக் கஷாயத்தில் கலக்கவும். சுவைக்காக ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தவும், இன்புளுன்சா காய்ச்சல்காரர்களுக்கு இஞ்சி சேர்க்கப்பட்ட இந்தக் கஷாயம் உடனடியாக உடலை வியர்க்கச்செய்து காய்ச்சலின் வேகத்தை மட்டுப்படுத்திவிடுகிறது.
குழந்தை வேண்டுமா?
தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வமில்லாதவர்களுக்கு இது புத்துணர்ச்சியை ஏற்படுத்தித் தரும். மலட்டுத் தன்மை, விந்து முன் கூட்டியே வெளிப்படுதல், மேக நோய் போன்றனவும் உடனே குணமாகும். ‘ஆண்மை’ இல்லாதவன் என்று ஒதுக்கப்பட்ட ஆண்கள் இரவு படுக்கும் முன்பு அரைத்தேக்கரண்டி இஞ்சி இரசத்தையும், ஒரு தேக்கரண்டி தேனையும் அடுத்தடுத்து சாப்பிடவும், மூன்றாவதாக அவித்த கோழிமுட்டையில் பாதி சாப்பிடவும். இதனால் தாது பலம் பெறுவார்கள். தொடர்ந்து ஒரு மாதம் இதே போல் இரவில் சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும்.
ஜலதோஷம் உடனடி நிவாரணம்
ஜலதோஷம் குணமாக, இஞ்சியை சிறுசிறு துண்டுகாய் நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைக்கவும். பிறகு அதை வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் காபி சாப்பிடுவது போல சூடாகவே அருந்த வேண்டும்.
சுக்குப் பொடிகூட போதும் தேநீர் தயாரிக்க!
ஜலதோஷம் தொடர்பான காய்ச்சலும், ஜலதோஷமும் குணமாக இஞ்சித்தேநீர் தயாரித்து அருந்த வேண்டும். முதலில் இஞ்சித் துண்டுகளை கொதிக்கும் தண்ணீரில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து டீத்தூளை இந்தக் கலவையில் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பால், சர்க்கரை ஆகியன சேர்த்து அருந்தவேண்டும்.
இருமலா?
இஞ்சித் துண்டை ரசமாக்கி, அதில் தேன் கலந்து தினமும் நான்கு வேளை அருந்தினால் எப்படிப்பட்ட இருமலும் உடனே கட்டுப்படும். ஒரு வேளைக்கு இரண்டு மூன்று துண்டுகளை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் இரசமாக்கி வடிகட்டி, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்த வேண்டும். ஒவ்வொரு வேளையும் இதே போல் தயாரித்து உடனுக்குடன் அருந்தி வர வேண்டும். இருமலுக்கும் ஜலதோஷத்துக்கும் இஞ்சியைப் போல் சிறந்த மருந்து இல்லை என்பார்களே மூலிகை மருத்துவர்கள்.
இஞ்சிக் காபி அருந்தலாமா?
அதிகமான அல்லது மட்டமான மாதவிடாய்ப் போக்கு உள்ள பெண்கள், உலராத பச்சையான இஞ்சியைத் தோல் உரிந்து இடித்துப் பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும். இதற்கு ஒரே ஒரு சிறிய இஞ்சித்துண்டு போதும். ஒரு டம்ளர் கொதிக்கும் தண்ணீரில் இந்தப் பொடியைப் போடவும். 5 நிமிடங்கள் கழித்து இறக்கி, வடிகட்டி அருந்த வேண்டும். தேவை எனில் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். காபி போல சுவையாகவும் இருக்கும். மாதவிடாய்க் கோளாறுகள் அனைத்தையும் குணமாக்கும். ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் அந்தந்த வேளைச் சாப்பாட்டிற்கு பிறகு இந்தச் சூடான இஞ்சி காபியை அருந்த வேண்டும். இந்தியாவின் சில பகுதிகளில், இஸ்லாமிய பெண்கள் இந்த முறையைப் பின்பற்றி பலனடைந்துள்ளார்க்ள.
தலைவலி உடனே குணமாக!
உலர்ந்த இஞ்சியைச் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அந்தப்பசையை நெற்றியில் தடவ உடனே தலைவலி குணமாகும். பல் வலி என்றால் அந்த இடத்துக்கு மேலே முகத்தில் இந்தப் பசைையைத் தடவ வேண்டும்.
காது வலி என்றால், இஞ்சிச்சாற்றில் ஒன்று அல்லது இரண்டு துளிகளைக் காதுக்குள விட வேண்டும்.
எல்லா விதமான உடல் வலிகளையும் இஞ்சி குணமாக்கும். முதுகு வலி, இடுப்பு வலி என்றால் அந்தந்த இடங்களில் இஞ்சிப் பசையை அழுத்தி தடவினால் போதும்.
இதய நோய்களைக் குணப்படுத்தும் சுக்கு!
இதயத்தில் வலி, இதய பலவீனம், இதயப்படபடப்பு முதலியவை குணமாக இருபது கிராம் இஞ்சியை நன்கு கழுவி மிக்ஸி மூலம் ரசமாக்கி ஒரு டம்ளரில் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சாற்றில் இரு தேக்கரண்டி தேன் சேர்த்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இந்த முறையில் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் இதய சம்பந்தமான கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.
உலர்ந்த இஞ்சியைத்தான் சுக்கு என்கிறோம். ஒரு தேக்கரண்டி சுக்குத்தூளை இதே போல் ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு, இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து, அருந்தினாலும் இதய வலி, பலவீனம், படபடப்பு முதலியவை குணமாகும்.
நீரிழிவு நோய்க்காரர்கள் இஞ்சிச் சாற்றிலோ சுக்குச் சாற்றிலோ கல்கண்டு போட்டு தண்ணீர் சேர்த்துக் குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
நெஞ்சு வலி குணமாகும்!
பாடகர்களும், தொண்டைப்புண், குரல் கமரல் முதலியவற்றால் அவதிப்படுவோர்களும் இஞ்சியை நன்கு மென்று தின்று உமிழ்நீரை வெளியில் துப்பவேண்டும்.
இளநீரில் தலா ஒரு தேக்கரண்டி சுக்குத் தூள், கல்கண்டுத் தூள் முதலியவற்றைக் கலந்து தினமும் இருவேளை வீதம் முடித்தால் நெஞ்சுவலி குணமாகும்.
ஆடுகின்ற பற்கள் கெட்டிப்பட்டு நிற்கவும், மஞ்சள் நிறப்பற்கள் ‘பளிச்’ என்று பிரகாசிக்கவும் 100 கிராம் சுக்குபொடியில் 7 கிராம் அளவு டேபிள் சால்ட் கலந்து, பற்பொடி தயாரிக்கவும். உப்பு சேர்க்கப்பட்ட இந்த சுக்குப் பற்பொடி வாய் நாற்றத்தையும் போக்கிவிடும்.
நறுமணப் பொருள்களும், வாசனைப் பொருள்களும் தயாரிக்க இஞ்சிலியிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயும் பயன்படுகின்றன. இவை இஞ்சி ரொட்டி, வயிற்றுக் கோளாறுகள் சம்பந்தமான மருத்துப் பொருள்கள் ஆகியன தயாரிக்கவும் பயன்படுகின்றன.
உலகில் சீனாதான் இஞ்சியை அதிகம் இறக்குமதி செய்து தக்க பாதுகாப்புடன் இருப்பில் வைத்திருக்கிறது.
வயிற்றுவலி என்றால் உடனே வீட்டில் சுக்குத் தேநீர் போடுவதற்குக் காரணம் பண்டைய கிரேக்க வைத்திய மேதைகளான அலிசென்னாவும், கேலனுந்தாம். இவர்கள் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி முதலியவற்றுக்கு சுக்கு டீ தூள், அருந்தச் சொன்னார்கள். அப்போது இதற்குச் சுக்கு கஷாயம் என்று பெயர்.
வேத காலத்திலும் இஞ்சியும், உலர்ந்த இஞ்சியான சுக்கும் மிக முக்கியமான மருந்துகளாக இருந்திருக்கின்றன.
இவ்வளவு ஆதாரங்கள் எதற்காக? தினமும் சுக்கு தேநீர் அல்லது சுக்கு காபி சாப்பிட்டாவது உடல் நலத்தைப் புதுப்பித்து ஆரோக்கியமாக வாழ ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்!
குறைந்த செலவில் கிடைக்கும் தங்கபஸ்பம், இஞ்சி.
No comments:
Post a Comment