Search This Blog

Saturday, January 12, 2013

தமிழ் சினிமாவின் தரை மட்டத் திரைப்படங்கள்

இங்கே இருக்கும் படங்கள் யாவும் ஒன்றை காட்டிலும் மற்றொன்று தனிப்பட்ட வகையில் சிறந்தது என்பதால் வரிசை படுத்த படவில்லை 

என்ன தான் பாறையில் செய்த இதயம் கொண்டவராக நீங்கள் இருந்தாலும் உங்களை இருக்கையிலிருந்து எழுப்பி திரையரங்கதிளிருந்து அலறவைத்து ஓட வைத்த படங்களை சற்று ரீ விசிட் செய்வோம்.

ஸ்ரீ : நந்தா படத்திற்கு பிறகு சூர்யா நடித்து வெளிவரும் படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது,ஒவ்வொரு காட்சியும் இந்த படத்தில் செதுக்கி வெச்சிருந்தாங்க , " யாமிருக்க பயம் ஏன் ஸ்ரீ இருக்க பயம் ஏன் " இப்படிலாம் டேரிபிக் பின்னணி இசை அமைத்து திரையரங்கில் இருக்கும் ரசிகர்களை பயமுர்த்தியிருப்பர். அதுவும் கடைசி காட்சியில் ரங்கோலி கோலத்தை முகத்தில் கொட்டிக்கொண்டு நீதி மன்றத்தில் நம் நாட்டாமை சாமி " விஜய் குமார்" பேசும் வசனம் இதுக்கு மேலயுமா டா நீங்க தியேட்டர்ல இருக்கீங்க என்ற கேள்வி எழுப்பியது.

தெனாவெட்டு , சிங்கம் புலி: இந்த இரண்டு ஜீவா படத்துக்குள்ள செம்ம போட்டி , " தப்புனே தப்புனே " ஜீவா பேசு வசனங்கள் " தெனாவெட்டு " படம் பார்க்க வந்த நம் தப்பை உணரத்திக்காட்டியது. இந்த படத்தோட இயக்குனரை ஒரு அறைக்குள் பூட்டி வைத்து இந்த படம் பார் என்று கூறினால் அந்த தண்டனை ' கும்பி பாகத்தை ' தாண்டியது. இந்த இருபடங்களோடு " டார்சர் ஆரம்பம் " (கச்சேரி ஆரம்பம் ) போட்டியிட ஏதோ இமானின் பாடல்கள் நல்லா இருக்கும் காரணத்தால் தோல்வி அடைந்தது.

சத்யம்: ப்ளாக் டிக்கெட் சங்கத்தினர் கடும் இழப்பை சந்திக்கச் செய்த படம் இது தான். " ஹாரிஸ் ஜெயராஜ் " இசையமைக்கும் 25 வது படம், விஷால் போலீஸ், நயன்தார வேற செம்மையா சிக்ஸ் பசக் வச்சுகிட்டு வராங்கனு இப்படி செம்ம பில்ட்அப் . " சட்டம் தான் தண்டனை கொடுக்கணும் சாமி தான் கண்ண குத்தனும்" இப்படி ஷேக்ஸ்பியர் கூட சிந்திக்காத வசனங்கள், குச்சி ஐசில் போதை மருந்தை கண்டுப்பிடிக்கும் வியக்கத்தக்க காட்சிகள், எல்லாவற்றையும் தாண்டி மொட்டை அடித்துக்கொண்டு " எவன் அப்பன் வீட்டு காசுனு " விஷால் பேசும் காட்சி நம் மனதை மம்முட்டியால் தோன்றுகிறது.

திருப்பதி: குடும்பத்தோடு படம் பார்க்கச் சென்ற ரசிகர்களுக்கு பெரிய மொட்டை போட்ட படம் தான் " திருப்பதி ".." அஜித்" வாயால நெருப்பு உடராறு, ஏ.வீ.எம். தயாரிப்பு, செம்ம படமா இருக்கும்னு தியேட்டர்க்கு சென்றால் அய்யோ அய்யோ வென்று அலறவைதது. இது ஒரு கடுப்பு சரித்திரம்.

சுறா: இதவிட ஒரு அற்புதமான 50 வது படம் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காது . " எந்த தியட்டர்ல சுறா படம் போட்டாலும் ஸ்க்ரீன் கிழிஞ்சிடும் " இந்த படத்த பத்தி பல நாளுக்கு கழுவி ஊத்தலாம் ஆனால் அவை யாவும் சுராவிற்கு ஒரு ஈடாகாது.

ராஜபாட்டை : இது படமா இல்ல மாறுவேட போட்டியா ?? என்ற பெரிய கேள்வி பார்க்கையிலே வரும் . எந்த கதை கிடைத்தாலும் ' சோ நைஸ் ல ' என்று பீல் பண்ணி பண்ணி நடிக்கும் நம்ம சியான் பெருசா மொக்கை வாங்கின படம்" " ராஜபாட்டை " தான். அக்கா சொன்ன என்ன டா ஆண்டவனே சொல்லிட்டான் இப்படி சுட்டி டிவி ரசிகர்கள் மனம் கவரும் வசனங்கள் அமையப்பெற்றிருப்பது இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம். "தூள்" மாறி இருக்கும் என எதிர்ப்பார்த்து போனால் தூள் தூளாய் அந்த எண்ணத்தை சிதைத்த ஒரு பெருமை இப்படத்திற்கு உண்டு.

வியாபாரி : படம் முழுக்க ஒரு மிருக காட்டுக்குள் புகுந்த ஒரு அனுபவம் . அடி வயற்றிலிருந்து கத்திக் கொண்டே இருக்கும் எஸ்.ஜே.சூர்யா கடுப்பின் உச்சகட்டம். இதனையும் தாண்டியது இவரின் பாட்டு , தனக்குள் இருக்கும் பாடகரை பாடவைத்து உலகத்தில் உள்ள அனைத்து பாடகருக்கும் எஸ்.ஜே.சூர்யா கொடுத்த சவால் வியக்கத்தக்கது.

இதய திருடன் : சார் நம்புங்க ' மோதி விளையாடு' மாதிரி அற்புதமான படத்தை சரண் தான் இயக்கினார் எனக் கூறினால் யாரும் நம்பமாட்டர் அதை மெய்ப்பிக்க வேண்டும் என்றால் அதற்க்கு ஆதாரம் " சரண்" இயக்கிய ' இதய திருடன்' .

பழனி: மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர்கள் பார்க்க வேண்டிய படமே அல்ல அதையும் தாண்டி கொடூரமானது. ஒரு படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் முதற்கொண்டு அனைவரும் பஞ்ச் வசனம் பேசி காதை இழுத்து தாரை தாரையாக அறுத்த படம் தான் " பழனி". " கமர்சியல் பஞ்சமிர்தம் " இப்படி காப்ஷனிலே புரட்சி செய்த படம் இது. " பழனி" படம் பார்த்து , கேட்டு உஷார் ஆனவர் " திருத்தணி " பார்க்காமல் தப்பித்திருப்பர் இல்லனா அவ்ளோ தான் வசனம் வசனமா பேசியே திரையரங்கிர்க்குள் நம்மை புதைப்பத்தில் வல்லவர் பேரரசு.

அலெக்ஸ் பாண்டியன்: இந்த பட்டியல் அமைக்கப் பட்டதுக்கு முக்கிய காரணம் " அலெக்ஸ் பாண்டியன் " தந்த அனுபவம் தான் . இதை பற்றி பேசினால் நாடி நரம்புகள் யாவும் வெறுப்பில் வெடித்து விடும்.


இங்கே குறிப்பிடப்பட்டவை யாவும் வெறும் படங்களல்ல ஒரு பாடம் . மரதி நம்முடைய தேசிய வியாதி மாறார் இனிமே வரும் நாட்களில் இந்த மாதிரி படங்களையும் அதற்க்கு கிடைத்த வரவேற்ப்பையும் நினைவில் கொண்டு இயக்கினால் மசாலா என்ற பெயரில் குப்பையை வாரிக்கொட்டும் கூட்டம் விலக்கப்படும்.

இன்னும் மாப்பிள்ளை, பரட்டை என்கிற அழகு சுந்தரம், கந்தசாமி , காளை, இந்திர விழா, மாசி, முகமூடி, துறை,ஜாம்பவான் இப்படி எத்தனையோ படங்கள் உள்ளன. ஐய்யா சாமி இன்னும் மசாலா படம் என்டேர்டைன்மென்ட்னு சொல்லி எங்களை சாவடடித்தது போதும் இனிமேலாவது கொஞ்சம் திருந்துங்க. இல்லனா குறும்படத்திலிருந்து திரைபடத்திற்கு வரும் புதுமுக இயக்குனர்களும் ரசிகர்களும் இதை உங்களுக்கு உணர்த்துவாங்க.

(குறிப்பு : இந்த ஆர்டிக்கல் என்னுடைய தனிப்பட்ட பார்வை தான் பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள். கன்டென்ட் காப்பி அடித்து தங்கள் பெயரை போட்டுக்கொள்ளும் ' திருட்டு விசிடி ' ரசிகர்கள் ப்ளீஸ் ஒதுங்கி கொள்ளுங்கள் )

40 Tips for Happy Health Life - MUST READ & SHARE Health:

1. Drink plenty of water.
2. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar.
3. Eat more foods that grow on trees and plants, and eat less food that is manufactured in plants.
4. Live with the 3 E’s — Energy, Enthusiasm, and Empathy.
5. Make time for prayer and reflection
6. Play more games.
7. Read more books than you did in 2012.
8. Sit in silence for at least 10 minutes each day.
9. Sleep for 7 hours.


Personality:
10. Take a 10-30 minutes walk every day —- and while you walk, smile.
11. Don’t compare your life to others’. You have no idea what their journey is all about.
12. Don’t have negative thoughts or things you cannot control. Instead invest your energy in the positive present moment.
13. Don’t over do; keep your limits.
14. Don’t take yourself so seriously; no one else does.
15. Don’t waste your precious energy on gossip.
16. Dream more while you are awake.
17. Envy is a waste of time. You already have all you need.
18. Forget issues of the past. Don’t remind your partner with his/her mistakes of the past. That will ruin your present happiness.
19. Life is too short to waste time hating anyone. Don’t hate others.
20. Make peace with your past so it won’t spoil the present.
21. No one is in charge of your happiness except you.
22. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
23. Smile and laugh more.
24. You don’t have to win every argument. Agree to disagree.


Community:
25. Call your family often.
26. Each day give something good to others.
27. Forgive everyone for everything.
28. Spend time with people over the age of 70 & under the age of 6.
29. Try to make at least three people smile each day.
30. What other people think of you is none of your business.
31. Your job won’t take care of you when you are sick. Your family and friends will. Stay in touch.


Life:
32. Do the right things.
33. Get rid of anything that isn't useful, beautiful or joyful.
34. Forgiveness heals everything.
35. However good or bad a situation is, it will change.
36. No matter how you feel, get up, dress up and show up.
37. The best is yet to come.
38. When you awake alive in the morning, don’t take it for granted – embrace life.
39. Your inner most is always happy. So, be happy.

Last but not least:
40. Enjoy LIFE!

சித்தர்கள் வகுத்த தமிழ் ஆண்டுகளும், தமிழர்கள் இயற்கைக்குச் செலுத்தும் நன்றியும்...!

சித்திரையைத் தமிழ்ச்சித்தர்கள் ஆண்டின் தொடக்கமாக வைத்ததற்கு வானவியல் காரணங்கள் பலவுண்டு. அதை இன்னொரு பதிவில் ஆராய்வோம். பலரும் தமிழ் மாதங்கள் செந்தமிழில் இல்லை எப்படி அவை தமிழருக்குரிய ஆண்டுகளாக இருக்கும் என்கின்றனர். அறுபது(60) ஆண்டுச் சுழற்சிக்கும் தமிழ்ப் பெயர்களுண்டு. அவற்றைப் பதிவின் இறுதியிற் காண்க. சம(ஸ்)கிருதத்தைப் பலரும் வடமொழியென அழைக்கின்றனர். இது மிகத்தவறானது. ஹிந்தி, உருது போன்றவற்றை வடமொழியெனலாம். சம(ஸ்)கிருதத்தையல்ல.

ஹிந்தி, உருது போன்றவை சம(ஸ்)கிருத சொற்களைப் பயன்படுத்திப் பிறந்த மொழிகளேயன்றி இலக்கண அடிப்படையில் ஹிந்தி, உருது போன்ற வடமொழிகளைவிட தமிழ்மொழிக்கே தொடர்பதிகம். மாபெரும் தமிழாசான், தமிழ்ச்சித்தர் வியாசரால் தமிழுக்குச் சமமாக(சம) உருவாக்கப்பட்ட கிருதமே(கிருதம்=மொழி) சம(ஸ்)கிருதம். சித்தர்களால் வழிபாட்டிற்காகப் பயன்படுத்ப்பட்ட மொழியேயன்றி, பேச்சுமொழியல்ல சம(ஸ்)கிருதம். தமிழே சித்தர்களின் உயர்வான ஞானமொழி. .சம(ஸ்)கிருதத்தைவிடப் பலயுகங்கள் காலத்தால் மூத்ததும் தமிழே. இதை ஆழமாக இன்னுமொரு பதிவிற் பார்ப்போம்.

தை முதல்நாள் தமிழர்களின் திருநாள். உழவர்களின் பெருநாள். தமிழர்கள் இயற்கைக்கு நன்றிகூறி விழா எடுக்கும் இனிய நாள். தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் இன்ப நாள். இந்த நாளன்று உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் சாதி, மதம் என்ற எந்த ஒரு வேறுபாடில்லாமல், அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. சொல்லப்போனால், அது தமிழர்களின் ஒரு தேசிய திருவிழா என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த பொங்கல் பண்டிகை உலமெங்கும் இருக்கும் தமிழர்களால் இன்றும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால் பலருக்கும் இந்த பொங்கல் பண்டிகை எதற்கு கொண்டாடுகின்றோம் என்றே தெரியாது. தெரியாமலேயே இத்தனை வருடங்களாக பலரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள்.

பொங்கல் பவிழாவானது களனி திருத்தி, வயல் உழுது, எரு இட்டு, நீர் பாய்ச்சி, நெல் விதைத்து, களை எடுத்து,விளைந்த நெல்மணிக் கதிர்களை அரிவி வெட்டி, சூடு மிதித்து, நெல்லை வீட்டுக்குக் கொண்டு வந்து கூடையில் போட்டு பின்னர் அதில் கொஞ்சம் எடுத்து உரலில் போட்டுக் குத்தி அரிசியாக்கி, புதுப்பானையில் பாலும் சர்க்கரையும், பாகும் பருப்பும் இட்டுப் பொங்கி, மஞ்சளும், இஞ்சியும், கரும்பும், கற்கண்டும் இயற்கைத் தெய்வமான ஞாயிறுகுப் படைத்து மனைவியும் மக்களும் கொண்டாடி மகிழும் விழா ஆகும்.

அறுவடைக்கு முன்னதாக நல்ல நாளில் வயலில் தலைசாய்த்து காற்றினால் தலையசைத்து நிற்கும் நெல்மணிக் கதிர்களில் கைப்பிடி அரிந்து தட்டில் எடுத்து வந்து வீட்டு வாசலில் கட்டுவார்கள். இதற்குப் புதிர் எடுத்தல் என்று பெயர். பின்னர் தைப்பூசத் திருநாளில் புதிர் குழைத்தல் இடம்பெறும். புத்தரிசி பொங்கி, சர்க்கரையும் வாழைப் பழமும் சேர்த்துப் படைக்கும் இப்புதிர் சோற்றை சுற்றமும் நட்பும் சூழ இருந்து உண்டு மகிழ்வர்.

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். இந்நாளில் வயல் உழவும், வண்டி இழுக்கவும், பால், தயிர், நெய் கொடுக்கவும், எரு எடுக்கவும் காரணமாக இருந்த எருதுகளையும், பசுக்களையும், கன்றுகளையும் குளங்களில் குளிப்பாட்டி, குங்குமம், சந்தனம், மலர் மாலைகளால் அலங்கரித்து குடிக்கக் பச்சையரிசிக் கஞ்சி கொடுப்பர். உழவன் கமத்துக்கு துணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடப் படுகிறது. இந்த விழா பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படும்.

இந்தத் தமிழர் திருநாளைச் சாகடிக்காமல் வளர்த்து வருவது நமது கடமை. கொஞ்சம் கொஞ்சமாக கலை இலக்கியங்களை வேலைப்பளுவாலும் அரசியல் சூழ்ச்சியாலும் மறந்து வரும் தமிழர்கள், இனம் வாழ வேண்டுமெனில், நமது கலை கலாச்சாரத்தை மீட்டெடுப்போம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. அதாவது தமிழ் உறவுகளது வாழ்வில் அல்லல்கள் நீங்கி, துன்பங்கள் தொலைந்து, கோடி இன்பங்கள் குவிந்து ஒளி பிறக்கும். இன்பம் சேரும் மகிழ்ச்சி பொங்கும் என எதிர்பார்ப்போமாக!

தமிழப் புத்தாண்டு..!

தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் தை, சித்திரை என்று இருவேறு பிரிவினர்களால் வகைப்படுத்தப்படுகிறது. இதில் எது உண்மையாக இருக்கும்?

தமிழர்கள் இந்தத் தமிழ்நாட்டில் மட்டுமா இருக்கின்றனர்? இந்தியா தவிர, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், பிஜூ தீவுகள் மற்றும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு எனக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருக்கும் நாம் பன்னெடுங்காலமாக சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறோம். உலகம் முழுவதும் கதிரவனை (ஞாயிறு) அடிப்படையாகக் கொண்டு காலத்தை வரையறுத்திருக்கிறார்கள். இந்தக் காலத்தின் அளவை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து நம் முன்னேர்கள் முன்பே தெரிவித்திருக்கிறார்கள். இதைத் தமிழில் “தெறிப்பளவு” என்பார்கள். ஆங்கிலத்தில் “Time Measure ” என்பார்கள். அதாவது,

2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 நாடி – நாழிகை
2½ நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
360 ஆண்டு = 1 தேவ ஆண்டு
12 ஆயிரம் தேவ ஆண்டு = 1 சதுர்யுகம்

இந்த சதுர்யுகத்தில் பார்த்தம், பரமம் போன்றவைகளைக் கடந்து யுகம் இருக்கிறது. இந்த யுகங்களில் கிருதயுகம், திரேதாயுகம் மற்றும் துவாபரயுகம் போன்றவை முடிந்து போய் விட்டன. தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி பல லட்சம் ஆண்டுகளுக்குக்கும் மேலான காலக் கணக்குகளை நம் முன்னோர்கள் சிறப்பாக வகுத்து வைத்திருந்திருக்கிறார்கள்.

இக்காலச் சுழற்சியில் தமிழர்கள் நாள் மற்றும் ஆண்டைப் பொழுதுகளாகப் பிரித்துள்ளனர்.

"பெரும்பொழுதென்றா சிறுபொழுதென்றா
இரண்டு கூற்றத் தியம்பிய பொழுதே"

என்று நம்பியகப்பொருள் நூற்பா மொழிகிறது

ஒவ்வொரு நாளையும் நான்கு மணிகளாகக் கொண்டு பகுத்து, ஆறு பொழுதுகளாகப் பிரித்துள்ளனர். அந்தப் பொழுதுக்கு தனித்தனியாகப் பெயரையும் வைத்திருந்தார்கள். அவை;

2 முதல் 6 மணி வரை – இராப்பொழுதின் பிற்கூறு - வைகறை
6 முதல் 10 மணி வரை – பகற்பொழுதின் முற்கூறு – விடியல் (காலை)
10 முதல் 2 மணி வரை – பகற்பொழுதின் நடுக்கூறு - நண்பகல்
2 முதல் 6 மணி வரை – பகற்பொழுதின் பிற்கூறு - ஏற்பாடு
6 முதல் 10 மணி வரை – இராப்பொழுதின் முற்கூறு - மாலை
10 முதல் 2 மணி வரை – இராப்பொழுதின் நடுக்கூறு - யாமம்

இந்த ஆறு பொழுதுகளும் சேர்ந்தது சிறு பொழுது என்கிறார்கள்.

இதுபோல் ஒவ்வொரு ஆண்டையும் இரு மாதங்களாகப் பகுத்து, ஆறு பொழுதுகளாகப் பிரித்துள்ளனர். அந்தப் பொழுதுக்கு தனித்தனியாகப் பெயரையும் வைத்திருந்தார்கள். அவை;

சித்திரை & வைகாசி மாதங்கள் – இளவேனில் காலம்
ஆனி & ஆடி மாதங்கள் – முதுவேனில் காலம்
ஆவணி & புரட்டாசி மாதங்கள் – கார் காலம்
ஐப்பசி & கார்த்திகை மாதங்கள் – கூதிர்க் காலம்
மார்கழி & தை மாதங்கள் – முன்பனிக் காலம்
மாசி & பங்குனி மாதங்கள் – பின்பனிக் காலம்

என்று இந்த ஆறு காலங்களும் சேர்ந்து பெரும் பொழுது என்கிறார்கள்.

இந்தப் பெரும் பொழுதின் தொடக்கம் இளவேனில் காலம்தான். இந்தக் காலத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். இம்மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக இருப்பதுதான் சரி.

தை மாதம் ஆண்டிற்கான பெரும் பொழுதுகளில் முன்பனிக் காலத்தில் வருகிறது. இந்த முன்பனிக் காலமே ஆண்டின் முதல் தொடக்கமாக வைத்துக் கொண்டாலும் மார்கழி மாதம் ஆண்டின் தொடக்கமாக இருக்குமே தவிர, அதில் இரண்டாவதாக உள்ள தை மாதம் எப்படி ஆண்டின் தொடக்கமாகும்?

தமிழ் மாதங்கள் கதிரவனை அடிப்படையாகக் கொண்ட மாதங்களாகும். அதாவது பூமிக்குச் சார்பாகக் கதிரவனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே காலங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும் போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும். கதிரவன் அவ்வாறு ஒருமுறை சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை (degrees) எனும் அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் கதிரவன் 12 இராசிகள் வழியாகப் பயணம் செய்கிறது. அந்தப் 12 இராசிகளை;

1. மேடம் (‍ேமஷம்)
2. இடபம் (ரிஷபம்)
3. மிதுனம்
4. கர்க்கடகம் (கடகம்)
5. சிங்கம் (சிம்மம்)
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனுசு
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்

என்று குறிப்பிடுகின்றனர்.

கதிரவன் இந்த பன்னிரண்டு இராசிக்குள் நுழைந்து அதை விட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு மாதம் ஆகும்.

கதிரவன் மேட இராசியில் பயணம் செய்யும் போது நடைபெறும் மாதம் சித்திரை. இவ்வாறே அடுத்துள்ள ஒவ்வொரு இராசியிலும் கதிரவன் பயணிக்கும் காலத்தை மாதங்களாகக் கொண்டு மொத்தம் 12 மாதங்கள் என கணக்கிட்டுள்ளனர்.

அவை முறையே சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என 12 மாதங்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இம்மாதங்களை நல்ல தமிழில் சொன்னால்,

1. மேழம்
2. விடை
3. ஆடவை
4. கடகம்
5. மடங்கல்
6. கன்னி
7. துலை
8. நளி
9. சிலை
10. சுறவம்
11. கும்பம்
12. மீனம்

என்று சொல்லலாம்.

இப்படி காலக்கணக்கை கணிக்கும் நிலையைத் தமிழில் காலந்தேர் (காலம் + தேர்) என்று சொல்கிறோம். இதைத்தான் ஆங்கிலத்தில் Calendar என்கின்றனர்.

தமிழ்க் காலந்தேரில் இருக்கும் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்திற்கென்று சில சிறப்புகள் உண்டு. சித்திரை மாதம் ஆண்டுக்கான பெரும் பொழுதில் இளவேனில் காலத்தில் இருக்கிறது. இந்தக் காலத்தை வசந்த காலம் என்றும் சொல்வார்கள்.

ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள்.!

தமிழ் ஆண்டுகள் அறுபது எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் இருபது ஆண்டுகள் உத்தம ஆண்டுகள் என்றும், அடுத்த இருபது ஆண்டுகள் மத்திம ஆண்டுகள் என்றும், கடைசி இருபது ஆண்டுகள் அதம ஆண்டுகள் என்றும் அழைக்கப் பெறுகின்றன. இந்தச் சம(ஸ்)கிருத பெயர்களுக்குச் சரியான தமிழ்ப் பெயர் உங்களுக்குத் தெரியுமா?

தெரியவில்லையே என்று கலங்க வேண்டாம். உங்களுக்காகவே சம(ஸ்கிருதப் பெயர்களும், அதற்கு இணையான தமிழ்ப் பெயர்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சம(ஸ்கிருதப் பெயர் -தமிழ்ப் பெயர்

பிரபவ -நற்றோன்றல்

விபவ -உயர்தோன்றல்

சுக்கில-வெள்ளொளி

பிரமோதூத-பேருவகை

பிரசோத்பத்தி-மக்கட்செல்வம்

ஆங்கீரச-அயல்முனி

சிறிமுக-திருமுகம்

பவ- தோற்றம்

யுவ-இளமை

தாது-மாழை

ஈசுவர-ஈச்சுரம்

வெகுதானிய-கூலவளம்

பிரமாதி-முன்மை

விக்ரம-நேர்நிரல்

விச-விளைபயன்

சித்திரபானு-ஓவியக்கதிர்

சுபானு-நற்கதிர்

தாரண-தாங்கெழில்

பார்த்திப-நிலவரையன்

விய-விரிமாண்பு

சர்வசித்த-முற்றறிவு

சர்வதாரி-முழுநிறைவு

விரோதி- தீர்பகை

விகிர்தி-வளமாற்றம்

கர-செய்நேர்த்தி

நந்தன-நற்குழவி

விசய-உயர்வாகை

சய-வாகை

மன்மத-காதன்மை

துன்முகி-வெம்முகம்

ஏவிளம்பி-பொற்றடை

விளம்பி-அட்டி

விகாரி-எழில்மாறல்

சார்வரி-வீறியெழல்

பிலவ-கீழறை

சுபகிருது-நற்செய்கை

சோபகிருது-மங்கலம்

குரோதி-பகைக்கேடு

விசுவாவசு-உலகநிறைவு

பராபவ-அருட்டோற்றம்

பிலவங்க-நச்சுப்புழை

கீலக-பிணைவிரகு

சவுமிய-அழகு

சாதாரண-பொதுநிலை

விரோதி கிருது-இகல்வீறு

பரிதாபி-கழிவிரக்கம்

பிரமாதீச-நற்றலைமை

ஆனந்த-பெருமகிழ்ச்சி

இராட்சச-பெருமறம்

நள- தாமரை

பீங்கள-பொன்மை

காளயுக்தி-கருமைவீச்சு

சித்தார்த்தி-முன்னியமுடிதல

ரவுத்ரி-அழலி

துன்மதி-கொடுமதி

துந்துபி-பேரிகை

உருத்ரோத்காரி-ஒடுங்கி

இரக்தாட்சி-செம்மை

குரோதன்-எதிரேற்றம்

அட்சய-வளங்கலன்

Friday, January 11, 2013

தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.


உணவு விடயத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

1 . அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.

2 . உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது.

3 . உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.

4 . குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.

5 . தின்றல் -- பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.

6 . துய்த்தல் -- உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.

7 . நக்கல் -- நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.

8 . பருகல் -- நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.

9 . மாந்தல் -- ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.

10 . கடித்தல் -- கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.

11. விழுங்கல் -- வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.

12. முழுங்கல் -- முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது.