இங்கே இருக்கும் படங்கள் யாவும் ஒன்றை காட்டிலும் மற்றொன்று தனிப்பட்ட வகையில் சிறந்தது என்பதால் வரிசை படுத்த படவில்லை
என்ன தான் பாறையில் செய்த இதயம் கொண்டவராக நீங்கள் இருந்தாலும் உங்களை இருக்கையிலிருந்து எழுப்பி திரையரங்கதிளிருந்து அலறவைத்து ஓட வைத்த படங்களை சற்று ரீ விசிட் செய்வோம்.
ஸ்ரீ : நந்தா படத்திற்கு பிறகு சூர்யா நடித்து வெளிவரும் படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது,ஒவ்வொரு காட்சியும் இந்த படத்தில் செதுக்கி வெச்சிருந்தாங்க , " யாமிருக்க பயம் ஏன் ஸ்ரீ இருக்க பயம் ஏன் " இப்படிலாம் டேரிபிக் பின்னணி இசை அமைத்து திரையரங்கில் இருக்கும் ரசிகர்களை பயமுர்த்தியிருப்பர். அதுவும் கடைசி காட்சியில் ரங்கோலி கோலத்தை முகத்தில் கொட்டிக்கொண்டு நீதி மன்றத்தில் நம் நாட்டாமை சாமி " விஜய் குமார்" பேசும் வசனம் இதுக்கு மேலயுமா டா நீங்க தியேட்டர்ல இருக்கீங்க என்ற கேள்வி எழுப்பியது.
தெனாவெட்டு , சிங்கம் புலி: இந்த இரண்டு ஜீவா படத்துக்குள்ள செம்ம போட்டி , " தப்புனே தப்புனே " ஜீவா பேசு வசனங்கள் " தெனாவெட்டு " படம் பார்க்க வந்த நம் தப்பை உணரத்திக்காட்டியது. இந்த படத்தோட இயக்குனரை ஒரு அறைக்குள் பூட்டி வைத்து இந்த படம் பார் என்று கூறினால் அந்த தண்டனை ' கும்பி பாகத்தை ' தாண்டியது. இந்த இருபடங்களோடு " டார்சர் ஆரம்பம் " (கச்சேரி ஆரம்பம் ) போட்டியிட ஏதோ இமானின் பாடல்கள் நல்லா இருக்கும் காரணத்தால் தோல்வி அடைந்தது.
சத்யம்: ப்ளாக் டிக்கெட் சங்கத்தினர் கடும் இழப்பை சந்திக்கச் செய்த படம் இது தான். " ஹாரிஸ் ஜெயராஜ் " இசையமைக்கும் 25 வது படம், விஷால் போலீஸ், நயன்தார வேற செம்மையா சிக்ஸ் பசக் வச்சுகிட்டு வராங்கனு இப்படி செம்ம பில்ட்அப் . " சட்டம் தான் தண்டனை கொடுக்கணும் சாமி தான் கண்ண குத்தனும்" இப்படி ஷேக்ஸ்பியர் கூட சிந்திக்காத வசனங்கள், குச்சி ஐசில் போதை மருந்தை கண்டுப்பிடிக்கும் வியக்கத்தக்க காட்சிகள், எல்லாவற்றையும் தாண்டி மொட்டை அடித்துக்கொண்டு " எவன் அப்பன் வீட்டு காசுனு " விஷால் பேசும் காட்சி நம் மனதை மம்முட்டியால் தோன்றுகிறது.
திருப்பதி: குடும்பத்தோடு படம் பார்க்கச் சென்ற ரசிகர்களுக்கு பெரிய மொட்டை போட்ட படம் தான் " திருப்பதி ".." அஜித்" வாயால நெருப்பு உடராறு, ஏ.வீ.எம். தயாரிப்பு, செம்ம படமா இருக்கும்னு தியேட்டர்க்கு சென்றால் அய்யோ அய்யோ வென்று அலறவைதது. இது ஒரு கடுப்பு சரித்திரம்.
சுறா: இதவிட ஒரு அற்புதமான 50 வது படம் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காது . " எந்த தியட்டர்ல சுறா படம் போட்டாலும் ஸ்க்ரீன் கிழிஞ்சிடும் " இந்த படத்த பத்தி பல நாளுக்கு கழுவி ஊத்தலாம் ஆனால் அவை யாவும் சுராவிற்கு ஒரு ஈடாகாது.
ராஜபாட்டை : இது படமா இல்ல மாறுவேட போட்டியா ?? என்ற பெரிய கேள்வி பார்க்கையிலே வரும் . எந்த கதை கிடைத்தாலும் ' சோ நைஸ் ல ' என்று பீல் பண்ணி பண்ணி நடிக்கும் நம்ம சியான் பெருசா மொக்கை வாங்கின படம்" " ராஜபாட்டை " தான். அக்கா சொன்ன என்ன டா ஆண்டவனே சொல்லிட்டான் இப்படி சுட்டி டிவி ரசிகர்கள் மனம் கவரும் வசனங்கள் அமையப்பெற்றிருப்பது இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம். "தூள்" மாறி இருக்கும் என எதிர்ப்பார்த்து போனால் தூள் தூளாய் அந்த எண்ணத்தை சிதைத்த ஒரு பெருமை இப்படத்திற்கு உண்டு.
வியாபாரி : படம் முழுக்க ஒரு மிருக காட்டுக்குள் புகுந்த ஒரு அனுபவம் . அடி வயற்றிலிருந்து கத்திக் கொண்டே இருக்கும் எஸ்.ஜே.சூர்யா கடுப்பின் உச்சகட்டம். இதனையும் தாண்டியது இவரின் பாட்டு , தனக்குள் இருக்கும் பாடகரை பாடவைத்து உலகத்தில் உள்ள அனைத்து பாடகருக்கும் எஸ்.ஜே.சூர்யா கொடுத்த சவால் வியக்கத்தக்கது.
இதய திருடன் : சார் நம்புங்க ' மோதி விளையாடு' மாதிரி அற்புதமான படத்தை சரண் தான் இயக்கினார் எனக் கூறினால் யாரும் நம்பமாட்டர் அதை மெய்ப்பிக்க வேண்டும் என்றால் அதற்க்கு ஆதாரம் " சரண்" இயக்கிய ' இதய திருடன்' .
பழனி: மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர்கள் பார்க்க வேண்டிய படமே அல்ல அதையும் தாண்டி கொடூரமானது. ஒரு படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் முதற்கொண்டு அனைவரும் பஞ்ச் வசனம் பேசி காதை இழுத்து தாரை தாரையாக அறுத்த படம் தான் " பழனி". " கமர்சியல் பஞ்சமிர்தம் " இப்படி காப்ஷனிலே புரட்சி செய்த படம் இது. " பழனி" படம் பார்த்து , கேட்டு உஷார் ஆனவர் " திருத்தணி " பார்க்காமல் தப்பித்திருப்பர் இல்லனா அவ்ளோ தான் வசனம் வசனமா பேசியே திரையரங்கிர்க்குள் நம்மை புதைப்பத்தில் வல்லவர் பேரரசு.
அலெக்ஸ் பாண்டியன்: இந்த பட்டியல் அமைக்கப் பட்டதுக்கு முக்கிய காரணம் " அலெக்ஸ் பாண்டியன் " தந்த அனுபவம் தான் . இதை பற்றி பேசினால் நாடி நரம்புகள் யாவும் வெறுப்பில் வெடித்து விடும்.
இங்கே குறிப்பிடப்பட்டவை யாவும் வெறும் படங்களல்ல ஒரு பாடம் . மரதி நம்முடைய தேசிய வியாதி மாறார் இனிமே வரும் நாட்களில் இந்த மாதிரி படங்களையும் அதற்க்கு கிடைத்த வரவேற்ப்பையும் நினைவில் கொண்டு இயக்கினால் மசாலா என்ற பெயரில் குப்பையை வாரிக்கொட்டும் கூட்டம் விலக்கப்படும்.
இன்னும் மாப்பிள்ளை, பரட்டை என்கிற அழகு சுந்தரம், கந்தசாமி , காளை, இந்திர விழா, மாசி, முகமூடி, துறை,ஜாம்பவான் இப்படி எத்தனையோ படங்கள் உள்ளன. ஐய்யா சாமி இன்னும் மசாலா படம் என்டேர்டைன்மென்ட்னு சொல்லி எங்களை சாவடடித்தது போதும் இனிமேலாவது கொஞ்சம் திருந்துங்க. இல்லனா குறும்படத்திலிருந்து திரைபடத்திற்கு வரும் புதுமுக இயக்குனர்களும் ரசிகர்களும் இதை உங்களுக்கு உணர்த்துவாங்க.
(குறிப்பு : இந்த ஆர்டிக்கல் என்னுடைய தனிப்பட்ட பார்வை தான் பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள். கன்டென்ட் காப்பி அடித்து தங்கள் பெயரை போட்டுக்கொள்ளும் ' திருட்டு விசிடி ' ரசிகர்கள் ப்ளீஸ் ஒதுங்கி கொள்ளுங்கள் )
No comments:
Post a Comment