Search This Blog

Monday, November 11, 2019

அயோத்தி வழக்கு இவ்வளவு ஆண்டுகளாக உயிர்ப்புடன் வைக்கப்பட்டு வந்தது எப்படி? - விரிவான தகவல்கள்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்துக்கள் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்து சனிக்கிழமை உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் மூலம், 70 ஆண்டு காலமாக இருந்த நில உரிமை வழக்கிற்கு முடிவு ஏற்பட்டுள்ளது.
சமாதானம் செய்யும் முயற்சியாக, 1993 பிப்ரவரியில் மத்திய அரசால் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்துக்கு வெளியே புதிய மசூதி கட்டிக் கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் உருவாக்கப்படும் தனித்தனி அறக்கட்டளைகள் மூலம் கோவில் மற்றும் மசூதி கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது என்பது அரசியல் கட்சிகளின், குறிப்பாக ஆளும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற அதன் சங் பரிவார் அமைப்புகள் மற்றும் சிறிய அமைப்புகளால் வாக்குகளை ஈர்ப்பதற்கான பிரச்சினையாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஒவ்வொரு முறை அயோத்தி பிரச்சினையை மக்கள் மத்தியில் எழுப்பும் போதும், ரத்தக்களரியும், சமூக வெறுப்பு செயல்களும் நிகழ்ந்தன என்பது உண்மை. கடவுள் ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டும் நோக்கம் நிறைவேறும் வரையில் இந்த விஷயம் மக்கள் மனதில் உயிர்ப்புடன் வைக்கப்பட்டு வருகிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, ஒய்.வி. சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நஸீர் ஆகியோர் கொண்ட ஐந்து நீதிபதிகள் அமர்வு இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டியுள்ளது. மத நம்பிக்கையை அரசியல் சட்ட உரிமையாக எடுத்துக் கொண்டு, இதில் இந்துக்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மசூதி 1528ல் கட்டப்பட்ட பிறகு, 325 ஆண்டுகளாக அதற்கு சொந்தம் கொண்டாடி வந்தமைக்கு முஸ்லிம் தரப்பினர் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றும், அந்த காலகட்டத்தில் அங்குத் தொடர்ச்சியாக `வழிபாடு' நடந்து வந்ததற்கு எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்க முடியவில்லை என்றும் 1045 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பங்குத் தந்தை ஜோஷப் டையபென்தாலர் மற்றும் மோன்ட்கோமெரி மார்ட்டின் ஆகியோர் எழுதிய பயணக் கட்டுரைகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. ``கடவுள் ராமர் பிறந்த புனித இடம் என்று இந்துக்களின் நம்பிக்கை உள்ளது'' என்று அவற்றில் உள்ளதை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.
இந்தியத் தொல்லியல் பராமரிப்புத் துறையின் விரிவான அறிக்கையையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. ``12 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த கட்டுமானங்கள் பூமிக்கடியில் இருந்தன'' என்றும், அது இந்து பூர்விகத்தைக் கொண்டவையாக இருந்தன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அங்கு இந்துக் கோவில் இருந்ததா என்பதை தொல்லியல் துறை அறிக்கை உறுதியாகக் கூறவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
அங்கு மசூதி இருந்த நிலையிலும், சர்ச்சைக்குரிய இடத்தில் உள் மற்றும் வெளிப் பகுதிகளுக்கு இந்துக்கள் உரிமை கோரி வந்தனர் என்பதைக் காட்டுவதற்காக, பல்வேறு வாய்வழி சாட்சியங்கள் மற்றும் பயணிகளின் குறிப்புகள் என்ற வகையில், போதிய ஆதாரங்களை இந்து தரப்பினர் முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
``இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் இடத்தில் இஸ்லாமிய கட்டுமானம் இருந்தபோதிலும், 1856-57க்கு முன்பிருந்த கட்டுமான பகுதிக்குள், அவர்களுடைய வழிபாட்டைத் தடுப்பதாக இருக்கவில்லை'' என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
``நீண்டகாலம், தொடர்ந்து, தடைப்படாத வகையில் ராமர் `பீடத்தில்' வழிபாடு செய்து வந்ததன் மூலம் இந்த நிலத்திற்கு வெளிப்பகுதியில் உள்ள இடத்தையும், மத முக்கியத்துவம் வாய்ந்த மற்ற விஷயங்களையும் அனுபவித்து வந்ததை இந்துக்களின் தரப்பினர் தெளிவாக நிரூபித்துள்ளனர்'' என்று கூறி அவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அயோத்தி
இருந்தபோதிலும் 1949 ஆம் ஆண்டில் மசூதியில் சிலைகளை நிறுவியது ``தீவிர சட்டவிரோத செயல்'' என்றும், அது ``புனிதத்தை அவமதிக்கும் செயல்'' என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. 1858 ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்பகுதிக்கு உரிமை கோரி சர்ச்சைகள் நிலவியபோதிலும், மசூதியை முஸ்லிம்கள் கைவிட்டுவிட்டதாகவோ அல்லது `நமாஸ்' செய்வதை நிறுத்திவிட்டதாகவோ நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை'' என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பூமிக்கு அடியிலிருந்த கட்டமைப்புகள் 12 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்று முதன்மையான தொல்லியல் துறையின் கண்டறிதல்களைச் சார்ந்து நீதிமன்றம் பரிசீலித்துள்ளது. அந்தப் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட மற்ற கோவில்கள் மற்றும் அந்த காலகட்டத்தைச் சேர்ந்த கோவில்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அங்குத் தோண்டி எடுக்கப்பட்ட கட்டுமானங்கள் மற்றும் மசூதியின் அஸ்திவாரங்கள் மற்றும் அதன் கட்டடக் கலை அம்சங்கள் இந்த மத பூர்விகத்தைக் கொண்டவையாக இருக்கலாம் என்று தெரிகிறது என்று தொல்லியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
``அங்கு மசூதி இருந்தது என்பதை ஆதாரங்கள் காட்டினாலும், அது கடவுள் ராமரின் பிறந்த இடம் என்பதால் அங்கு இந்து வழிபாட்டைத் தடுக்க முடியாது. இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் இடத்தில் முஸ்லிம் கட்டுமானம் இருப்பதால், 1856-57க்கு முந்தைய கட்டுமானத்திற்குள் இருந்த சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபாட்டைத் தொடர்வதைத் தடுக்க முடியாது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை, இஸ்லாமிய மசூதி என்ற கட்டுமானத்தால் அசைத்துவிட முடியாது'' என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இவ்வளவு ஆண்டுகளாக இந்த விஷயம் எப்படி உயிர்ப்புடன் வைக்கப்பட்டு வந்தது என்பதை இப்போது நாம் பார்ப்போம். ராம்ஜன்ம பூமி குறித்த முதலாவது சர்ச்சை 1853-55 காலக்கட்டத்தில் ஏற்பட்டதாகப் பதிவுகள் இருக்கின்றன. மசூதியை ஆக்கிரமித்துக் கொண்ட மஹந்த்கள் மற்றும் அதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட முஸ்லிம்களுக்கு இடையில் பெரிய அளவில் ஆயுத மோதல் நடந்ததைத் தொடர்ந்து, அந்த இடத்தில் இரண்டு சமுதாயத்தினரும் வழிபாடுகளைத் தொடர்வது என்று மூத்தவர்கள் சேர்ந்து முடிவு செய்தனர். கட்டடம் மசூதியாக பயன்படுத்தப்பட்டது. மசூதிக்கு வெளியே இந்துக்கள் வழிபாடு நடத்தினர்.
(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)
courtesy: ஜெ.வெங்கடேசன்

Saturday, November 9, 2019

அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - Ayodhya_Babar masjid final verdict


நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு:


https://drive.google.com/file/d/1UlIAJbCzyNIQXR41lzxkXg3Q40eZHXku/view?usp=sharing

Monday, November 26, 2018

These Toilets Could Change The World

Bill gates believe these Toilets Could Change The World.



Friday, February 3, 2017

பழக்கவழக்கங்களும் அதற்கான காரணங்களும்

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.

முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது.

அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.

பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள்.

ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?

தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

#கருவறையில் 10 மாதம்
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.

#கடல்_நீர்
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.

#வெளியேறும்_வழி
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.

#மொட்டை_போடாவிட்டால்?
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

#நேர்த்திக்கடன்
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.

#மூன்று_வயதில்_ஓர்_மொட்டை
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.

#ஆன்மீக_ரீதிக்கே_மரியாதை
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர். எப்படியோ, இப்போதாவது உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டோமே. அதுவே போதும்.

: பொதுவாக, குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் (நாணயங்களை) போடுவோம். இப்பழக்கம் தொன்று தொட்டே நம்மிடம் இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், அவ்வாறு செய்வதால் ஆகூழ் (அதிர்ஷ்டம்) வந்து சேரும் என்று கூறுவார்கள்.

உண்மையில் இதன் பின்னால் ஓர் அறிவியல் கூறு மறைந்திருக்கிறது. இப்பொழுது, துருப்பிடிக்கா எஃகால் செய்யப்படும் காசுகள் போல் அல்லாமல், முற்காலத்தில் காசுகள் செம்புகளால் தான் செய்யப்பட்டன. செம்பு நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு கனிமம் ஆகும். செம்பு தாது குறைபாடால் மூட்டுவலி, மாரடைப்பு என்று பல கோளாறுகள் ஏற்படும். எனவே, நம் முன்னோர்கள் செம்பு காசுகளை குளங்களில் போட்டனர். செம்புக் காசுகளில் இருக்கும் செம்பு அணுக்கள் நீருடன் கலக்கும், அதைக் குடிக்கும் மக்கள் உடலுக்கும் செம்பு தாது சேரும். முற்காலத்தில் குளத்து நீர்தான் ஊர்மக்கள் எல்லாருக்கும் குடிநீராகப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பழக்கம் நாளடைவில் பொருளிழந்து தற்பொழுது நாமும் துருப்பிடிக்கா எஃகால் ஆன காசுகளைக் குளங்களில் போடுகிறோம்.

பின்னர், கனிமநீரை (mineral water) வாங்கி அருந்துகிறோம்.

செம்பு குடங்களில் நீரைப் வைத்து அருந்துவது சிறப்பு. செம்பு நீர், புற்றுநோயைத் தவிர்க்கும் பண்புடையதாக அறிவியல் உலகம் கூறுகிறது.

 ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும். உண்மையான விளக்கம் இதுதான் !!

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.

இது ஒரு பழமொழி என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் இது ஒரு மருத்துவக் குறிப்பு.

இதனின் ௨ட்பொருள்;
ஆனையைப் பிாித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் உண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து உடலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதே போல்,பூ னைக்கு என்பதை பூ + நெய் என்று பிாித்துப் பாா்க்கும்போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் உணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.

பழமொழியின் பொருள் நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல் தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
ஆயுளும் வளரும்...

: சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...???

இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும்..!!
தெரியாதோர்க்காகஇந்தப் பதிவு...

தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது.

இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது.

விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது.

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம். ஆனால் இப்போது டைனிங் டேபிள்.

இது சரியா..? தவறா..?

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன..?

என்பதைத் தெரிந்துக் கொள்வோம்:-

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது.

காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால்...சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தபட்டது...!!!

: ஆதி தமிழர்கள் பாம்பிற்குப் பால் ஊற்றுவது மற்றும் முட்டை வைப்பதன் காரணம் என்ன..?

உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.

பின்னர் எதற்குப் புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்..?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக பாம்புகள் இருந்தன. காரணம் அடர்ந்த காடுகள் மத்தியில் மனித நடமாட்டம் மிகமிகக் குறைவு. மனிதனை விடப் பாம்புகள் அதிகம் காணப்பட்டது .

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள். ஆகவே அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும்.அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும்.

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக் கட்டுப்படுத்தும் வேலையைப் பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது . ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள்.

அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

பலரை சென்றடைய தயவுசெய்து பகிருங்கள் உறவுகளே...

: பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...!

தேனீ - உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம்.

🐝தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

இனிக்கும் செய்தியல்ல....!

🐝 ஆச்சரியமான
மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
தெரிந்துகொள்ளலாமா.............?

முதலில்... ஆச்சரியம். 

🐝தக்கனூண்டு
சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

🐝தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச்
போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,
பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு
தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச்
சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும்
தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித
உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும்
காரணம்.

🐝தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப்,
வாட்ஸ்அப் முறைகளை விடத்
துல்லியமானது. 

🐝யானை, ஆமைகளுக்கு
ஞாபகசக்தி அதிகம் என்போம். 
ஆனால்,
அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி
கொண்டவை தேனீக்கள். 

🐝இதுபோல இன்னும்
பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு
உடம்பில் இருக்கின்றன. 

ஆனால், அதிர்ச்சி
தரும் விஷயம்... 

🐝அந்தத் தேனீக்கள் இப்போது
'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில்
இடம்பிடித்திருக்கின்றன.

🐝ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால்,
நிச்சயம் இதுதான். 

🐝ஒட்டுமொத்த மக்கள்
தொகையாலும் பூமிக்கு விளையாத
நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.

🐝அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு
சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப்
போர்வையைப் போத்துகிறது.

🐝தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி
தெரிந்துகொண்டால்தான், அது
காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட
நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.

🐝தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப்
பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப்
பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச்
சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

🐝''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு.
மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத்
தேனீ. 

🐝இதில் இந்திய, இத்தாலிய மற்றும்
கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.

🐝 மத்த தேனீக்கள்
தானாகவே காட்டில் வளரும். 

🐝ஒரு
குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில
நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித்
தேனீக்கள் (பெண்கள்) இருக்கும். 

🐝இதில் ஆண்
தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித்
தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித்
தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.

🐝ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது
மட்டும்தான் வேலை. 

🐝ஆண் தேனீக்கு,
ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப்
பாதுகாப்பதும் கடமை. 

🐝மற்ற எல்லா
வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.

🐝உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது,
தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச்
சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா
வேலைகளையும் பணித் தேனீக்கள்தான்
கவனிக்கும்.

🐝தேனீக்களின் பொறியியல் அறிவு
அபாரமானது. 

🐝தேன் கூட்டை அறுங்கோண
வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு
சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம
முழுசாப் பயன்படுத்த முடியும். 

🐝ஆண்
தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய
அறுங்கோண செல் வடிவத்தில் கூடு
கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர்
வடிவில் செல் கட்டும். 

🐝கூட்டின் கட்டுமானம்
திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித்
தேனீ அதில் முட்டையிடும்.

🐝பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான்
தேனீக்களின் உணவு. 

🐝அப்போதைய பசிக்கு
அப்போதே சாப்பிட்டுவிடும். 

🐝அப்புறம் ஏன்
தேன் சேகரிக்கிறது? 

🐝குளிர் காலங்கள், பூ
பூக்காத காலங்களில் உணவுத்
தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன்
சேகரிக்கிறது. 

🐝தேனீக்கள் தேன் சேகரித்துப்
பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த
உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.

🐝தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள்,
பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்
இருக்கும் 'தேன் பை’யில்
சேகரித்துக்கொள்ளும். 

🐝அந்த மதுரம்
முழுவதும் செரிக்காமல், தேனீயின்
வயிற்றில் இருக்கும் நொதிகளுடன்
சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

🐝கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள்,
கூட்டின் வாசலில் காத்திருக்கும்
தேனீக்களிடம் அந்தத் திரவத்தை
ஒப்படைக்கும். 

🐝அதற்காக ஏப்பமிட்டு
ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து
திரவத்தை வெளியில் கொண்டுவந்து
எதிர் தேனீயின் வாயில் கொட்டும். 

🐝ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும். 

🐝கூட்டைப் பராமரிக்கும்
தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர்
ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி,
அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்
சேர்க்கும். 

🐝பிறகு அந்தத் திரவத்தில்
இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக
தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.

🐝பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை
மெழுகைப் பூசிவைக்கும். 

🐝இத்தனை
நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம்
சுவைக்கும் தேன் உருவாகும். 

🐝தேன்
எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை
தேனிக்களுக்கு எனக் கூட்டில்
விட்டுத்தான் எடுப்பார்கள். 

🐝அதுதான் தேன்
சேகரிக்கும் தர்மம் !

🐝இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ
அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

🐝இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான்
அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில்
வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப்
பறக்கும். 

அதை எந்த ஆண் தேனீ துரத்திப்
பிடிக்கிறதோ, அதோடுதான் இணை
சேரும் ராணி. 

🐝புணர்ச்சி முடிந்தவுடன்
ஆண் இறந்துவிடும். 

🐝அதன் பிறகு ராணித்
தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து
வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான்
வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

🐝தேன் சேகரிப்பதற்கான தகவல்களை
தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை
அட்டகாசமானது. 

🐝உணவுத் தேவை
ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள்
முன்னே சென்று பூக்கள் இருக்கும்
இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்
கூட்டுக்குத் திரும்பும். 

🐝கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,
தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது
சோலை எந்தத் திசையில் எவ்வளவு
தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித்
தெரிவிக்கும்.

🐝இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட
நடனம் மற்றும் வாலாட்டு நடனம். 

வட்ட
நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள்
இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.

🐝வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை
ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே
பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு
நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது
என்றும் அர்த்தம். 

🐝வாலை வேகமாக
ஆட்டினால், சோலை அருகில் உள்ளது
என்றும், மெதுவாக ஆட்டினால்,
தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

🐝சூரியன், சோலையின் திசை, தங்கள்
கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும்
சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.

🐝இந்த நுட்பமான நடன ரகசியத்தைக்
கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர்
கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு
கொடுத்தார்கள்.

🐝தேன் சேகரிக்கும் போது தேனீக்களின்
காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல்
உட்காரும்போது, விதவிதமான
கூட்டணியுடன் பரவும். 

🐝இதுதான்
காடுகளின், சோலைகளின் பரவலுக்குக்
காரணம். 

🐝தேனீக்களை அதிகம்
காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.

🐝காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே
இயற்கையாகவே அடர்ந்த காடுகள்
உருவாகிவிடும்!''

🐝''அழியும் உயிரினம் பட்டியலில் இடம்
பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன
ஆபத்து?''

🐝''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய
நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும்
உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில்
மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு
தேனீக்கள் அழிந்துவிட்டன. 
அதாவது,
தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42
சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 

🐝இன்னும்
இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.

🐝ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை
வரலாம்.

🐝தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம்,
Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD.
அதாவது கூட்டில் இருந்து உணவு
சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள்
கொத்துக் கொத்தாகக்
காணாமல் போய்விடும். 

🐝ராணி மட்டும்
கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள்
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு
கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால்,
ராணித் தேனீ என்ன செய்வதெனத்
தெரியாமல் குழம்பி, சீக்கிரமே
இறந்துவிடும். 

🐝இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும். 

🐝பணித்
தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு. 

🐝அதில்
முக்கியமானது... செயற்கை உரம்,
பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட
பயிர்கள். 

🐝செயற்கை உரத்தில் உள்ள நியோ
நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள்,
தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து
அவற்றின் நினைவுத்தினை
மழுங்கடித்துவிடும். 

🐝இதனால்
கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய்
பறந்துபோய் அலைந்து திரிந்து
இறந்துவிடும். 

🐝மரபணு மாற்றப்பட்ட உணவுப்
பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர்
சீட்ஸ்’ என்பார்கள். 
🐝அதாவது, அந்தப் பயிர்கள்
'விதை தானியத்தை’ உருவாக்காது.
மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.

🐝அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின்
மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்
செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி,
ஒரு கட்டத்தில் தேனீக்களைக்
கொன்றேவிடும்.

🐝இப்படி விவசாயத்தில் 'வணிக
லாபத்துக்காக’ மனிதன் செய்த பல
மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.

🐝ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து
வருடங்களாக விவசாய உற்பத்தி
பெருமளவு குறைந்து வருவதற்குக்
காரணம் தேனீக்களின் இறப்பு எனத்
தெரியவந்தது. 

🐝அதனால், அங்கு செயற்கை
உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள்
போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.

🐝வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து
தங்கள் வயல்களில் பறக்கவிட்டு
மகரந்தச்சேர்க்கை உண்டாக்க
முயற்சிக்கிறார்கள். 

🐝பல லட்சம் தேனீக்களை
அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு
தேனீயைக்கூட உருவாக்க முடியாது.

🐝இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று
வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

🐝'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார்

Monday, August 22, 2016

ரியோ ஒலிம்பிக்: இந்திய வீரர்களின் ரிப்போர்ட் கார்ட்!!!

ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பங்கேற்றார்கள்.  ஒரு வெள்ளி, வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் 67-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய வீரர்களின் ரிப்போர்ட் கார்ட் எப்படி உள்ளது என்று பார்க்கலாமா?
பேட்மிண்டன்
பி.வி. சிந்து -  இறுதிச்சுற்றில் தோற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
சாய்னா நேவால் - ஆரம்பச் சுற்றுகளிலேயே தோற்றுப்போனார்.
ஸ்ரீகாந்த் - காலிறுதியில் தோற்றார்.
ஜூவாலா கட்டா - அஸ்வினி (மகளிர் இரட்டையர்): நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறமுடியாமல் தோல்வி.
மானு அத்ரி-சுமீத் ரெட்டி (ஆடவர் இரட்டையர்) - நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறமுடியாமல் தோல்வி.


மல்யுத்தம்
சாக்‌ஷி மாலிக் (58 கிலோ) -  வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆடவர் ஃப்ரீஸ்டைல்
யோகேஷ்வர் தத் (65 கிலோ) - தகுதிச்சுற்றில் தோல்வி
நர்சிங் யாதவ் (74 கிலோ) - ஊக்க மருந்து விவகாரம் தொடர்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை.
சந்தீப் தோமர் (57 கிலோ) - காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி.
ஆடவர் கிரேக்கோ ரோமன்
ரவீந்திர கேத்ரி (85 கிலோ) - காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி.
ஹர்தீப் சிங் (98 கிலோ) - காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி.
மகளிர் ஃப்ரீஸ்டைல்
வினேஷ் போகத் (48 கிலோ) - காலிறுதியில் தோல்வி
பபிதா குமாரி (53 கிலோ) - காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி.
ஜிம்னாஸ்டிக்ஸ்
தீபா கர்மாகர் - இறுதிச்சுற்றில் நான்காம் இடம்.

டென்னிஸ்
பயஸ்-போபண்ணா (ஆடவர் இரட்டையர் பிரிவு) - முதல் சுற்றில் தோல்வி
சானியா-பிரார்த்தனா (மகளிர் இரட்டையர் பிரிவு) - முதல் சுற்றில் தோல்வி
போபண்ணா-சானியா (கலப்பு இரட்டையர் பிரிவு) - வெண்கலத்துக்கான போட்டியில் தோற்று 4-ம் இடம்.
துப்பாக்கிச் சுடுதல்
ஆடவர் பிரிவு
அபிநவ் பிந்த்ரா (10 மீ. ஏர் ரைபிள்) - இறுதிச்சுற்றில் நான்காம் இடம் பிடித்து வெண்கலத்தைத் தவறவிட்டார்.
பிரகாஷ் நஞ்சப்பா (50 மீ. பிஸ்டல்): இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
ககன் நரங் (10 மீ. ஏர் ரைபிள்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
(50 மீ. ரைபிள் புரோன்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
ஜிது ராய் (10 மீ. ஏர் பிஸ்டல்) -  இறுதிச்சுற்றில் 8-வது இடம்.
(50 மீ. பிஸ்டல்) -  இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
செயின் சிங் (50 மீ. ரைபிள் புரோன்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
குருபிரீத் சிங் (10 மீ. ஏர் பிஸ்டல்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
(25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டல்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
மானவ்ஜித் சிங் (டிராப்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
கினான் செனாய் (டிராப்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
மைராஜ் அஹமதுகான் (ஸ்கீட்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
மகளிர் பிரிவு
அபூர்வி சண்டீலா (10 மீ. ஏர் ரைபிள்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
அயோனிகா பால் (10 மீ. ஏர் ரைபிள்) -  இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
ஹீனா சித்து (10 மீ. ஏர் பிஸ்டல்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
(25 மீ. பிஸ்டல்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
தடகளம்
ஆடவர் பிரிவு
முகமது அனாஸ் (400 மீ. ஓட்டம்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
ஜின்சன் ஜான்சன் (800 மீ. ஓட்டம்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
அங்கித் சர்மா (நீளம் தாண்டுதல்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
ரஞ்சித் மகேஸ்வரி (மும்முறைத் தாண்டுதல்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
விகாஸ் கெளடா (வட்டு எறிதல்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
கோபி தொனாகல் (மாரத்தான்) - 25-வது இடம்.
கேதா ராம் (மாரத்தான்) - 26-வது இடம்.
குருமீத் சிங் (20 கி.மீ. நடைப் போட்டி) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
கணபதி (20 கி.மீ. நடைப் போட்டி) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
மணீஷ் சிங் (20 கிமீ நடைப் போட்டி) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
சந்தீப் குமார் (50 கி.மீ. நடைப் போட்டி) - 35-வது இடம்.
ஆரோக்கிய ராஜீவ், குன்கு முகமது, தருண் அய்யாசாமி, மோகன் குமார் ராஜா, லலித் மாத்தூர் (5 பேரும் 4*400 மீ. தொடர் ஓட்டம்) - தகுதிநீக்கம் செய்யப்பட்டார்கள்.
மகளிர் பிரிவு
டூட்டீ சந்த் (100 மீ. ஓட்டம்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
ஸ்ரபானி நந்தா (200மீ. ஓட்டம்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
நிர்மலா (400 மீ. ஓட்டம்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
தின்டு லூக்கா (800 மீ. ஓட்டம்) - அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை.
சுதா சிங் (3000 மீ. ஸ்டீபிள்சேஸ்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
லலிதா பாபர் 3000 மீ. ஸ்டீபிள்சேஸ்) - இறுதிச்சுற்றுக்குத் தேர்வானார். அதில் 10-ம் இடம் பிடித்தார்.
மன்பிரீத் கெளர் (குண்டு எறிதல்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
சீமா பூனியா (வட்டு எறிதல்) - இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
குஷ்பிர் கெளர் (20 கி.மீ. நடைப் போட்டி) - 54-ம் இடம் பிடித்தார்.
சப்னா பூனியா (20 கி.மீ. நடைப் போட்டி) - போட்டியை முடிக்கவில்லை.
பூவம்மா, அனில்டா தாமஸ், ஜிஸ்னா மேத்யூ, அஸ்வினி அகுஞ்ஜி, தேவஸ்ரீ மஜும்தார்
(5 பேரும் 4*400 மீ. தொடர் ஓட்டம்) - தகுதிச்சுற்றில் 13-வது இடம்பிடித்து, இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.
ஹாக்கி
ஆடவர் அணி: காலிறுதியில் பெல்ஜியடத்திடம் தோற்றது.
மகளிர் அணி: காலிறுதிக்குத் தகுதி பெறவில்லை.
குத்துச்சண்டை
ஆடவர் பிரிவு
சிவ தாபா (56 கிலோ எடைப் பிரிவு) - முதல் சுற்றில் தோல்வி.
மனோஜ் குமார் (64 கிலோ) - காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி.
விகாஸ் கிரிஷன் (75 கிலோ) - காலிறுதியில் தோல்வி.
வில்வித்தை
அதானு தாஸ் (ஆடவர் தனிநபர் ரீகர்வ் பிரிவு) - காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி.
தீபிகா குமாரி (ரீகர்வ் தனிநபர்) - காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி.
பம்பேலா தேவி (ரீகர்வ் தனிநபர்) - காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி.
லட்சுமி ராணி (ரீகர்வ் தனிநபர்) - 64 பேருக்கான சுற்றில் தோல்வி.
தீபிகா குமாரி, லட்சுமி ராணி, பம்பேலா தேவி (அணி பிரிவு) - காலிறுதியில் தோல்வி.
கோல்ஃப்
ஆடவர் பிரிவு
அனிருபன் லாஹிரி - 57-ம் இடம் பிடித்தார்.
செளராசியா - 50-ம் இடம் பிடித்தார்.
மகளிர் பிரிவு
அதிதி அசோக் - இறுதிச்சுற்றுக்கு நுழைந்து 41-ம் இடம் பிடித்தார்.
பளு தூக்குதல்
சதீஷ் குமார் (ஆடவர் 77 கிலோ) - 11-ம் இடம்.
மீராபாய் சானு (மகளிர் 48 கிலோ) - போட்டியை முடிக்கவில்லை. அனைத்திலும் தோல்விகண்டார்.
டேபிள் டென்னிஸ்
அஜந்தா சரத் கமல், செளம்யஜித் கோஷ் (ஆடவர் ஒற்றையர் பிரிவு), மெளமா தாஸ், மணிகா பத்ரா (மகளிர் ஒற்றையர் பிரிவு) - அனைவரும் முதல் சுற்றிலேயே தோல்வி.
துடுப்புப் படகு
போகனால் பாபன் (ஆடவர் ஒற்றை துடுப்பு) - 13-ம் இடம்.
நீச்சல்
சாஜன் பிரகாஷ் (ஆடவர் 200 மீ. பட்டர்ஃபிளை) - 43 பேர் கலந்துகொண்ட போட்டியில் 41-வது இடம்.
ஷிவானி கட்டாரியா (மகளிர் 200 மீ. பட்டர்ஃபிளை) - 28-ம் இடம்.
ஜூடோ
அவதார் சிங் - முதல் சுற்றில் தோல்வி.

Wednesday, April 27, 2016

நவரத்தினங்கள்

ஒருவருக்கு ஜாதக ரீதியாக உள்ள தடைகளையும் குறைபாடுகளையும் அவருக்குரிய அதிஷ்ட கற்களை அணிவதன் மூலம் போக்கி கொள்ளலாம் என முன்னோர்கள் கணித்து உள்ளனர்.
தனக்குரிய அதிஷ்ட கல்லை ஒருவர் அணிவதன் மூலம் நல்ல அதிஷ்டத்தையும் ,செல்வாக்கையும் பெற முடியும். காரிய தடைகளை சரி செய்ய முடியும். நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும். நல்ல திருமண வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம். நோய் நொடிகளையும் குணப்படுத்தி கொள்ள முடியும்.
ஒரு கல் என்ன செய்து விட முடியும் என்ற கேள்வி எழலாம் ..! ஆனால்..! தனக்குரிய கல்லை தேர்ந்தெடுத்து அனுபவ ரீதியாக வாழ்க்கையில் ஏற்றம் பெற்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.நவரத்தினங்களுக்கு பல அதிசய சக்திகள் இருப்பது அசைக்க முடியாத உண்மை..!
நவரத்தினங்களான
மாணிக்கம், முத்து, மரகதம், புஷ்பராகம், பவழம், வைரம், வைடூரியம், நீலம், கோமேதகம்
1. நவரத்தினங்களின் பண்புகள் - மாணிக்கம்
இரத்தினங்களின் ராஜா எனப்படும் மாணிக்கம் சிவப்பு மற்றும்,இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் .
பண்புகள்
மாணிக்ககல் உணர்ச்சி வசப்படுதலை கட்டுபடுத்தும். வாழ்வில் உயர்வையும் தைரியத்தையும் கொடுக்கும் . வெகுளித்தனமாகவும்,ஏமாளித்தனமும் உள்ளவர்கள் இந்த கல்லை அணிந்தால் அவர்கள் புத்தி சாதுர்யம் பெறுவார்கள். தீய எண்ணங்கள் ,கவலை ,கருத்து வேறுபாடுகளை போக்கும் . இந்த கல் நீண்ட ஆயுளை கொடுக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை .
மாணிக்கத்தை கனவில் கண்டால் அதிஷ்டம் உண்டாகும் . இது செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது .மன உறுதியையும் ,தன்னம்பிக்கையையும் கொடுக்கும் .இதனை தலையணை அடியில் வைத்து வைத்து தூங்கினால் தீய கனவுகளை தடுத்து நல்ல நித்திரையை கொடுக்கும் .
மாணிக்க கல்லை அணிவதால் முக வசீகரம் அதிகரிக்கும் .கடினமான காரியங்கள் எளிதில் கைகூடும் .நினைவாற்றல் அதிகரிக்கும் .தொழில்,வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும் .
யாரெல்லாம் மாணிக்கம் அணியலாம் ..!
சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். சூரியனுக்குரிய ரத்தினம் மாணிக்கம் ஆகும் . எனவே சிம்மராசிக்காரர்கள் இந்த கல்லை அணியலாம் .மேலும் கிருத்திகை,உத்தரம்,உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் மாணிக்கம் அணியாலாம் . எண்கணித படி 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த கல்லை அணியலாம் . பிறந்த தேதி,மாதம்,வருடம் ஆகியவற்றை கூட்டினால் 1 வருபவர்களும் , பெயர் எண் 1 ஆக அமைந்தவர்கள் மாணிக்கம் அணியலாம்.

2. நவரத்தினங்களின் பண்புகள் - முத்து
முத்தை பெரும்பாலும் பெண்களே விரும்பி அணிகிறார்கள். முத்து ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும்,பெண்களுக்கு பாதுகாப்பையும் அளிக்கும்.மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்து தம்பதியினரை ஒற்றுமையாக வைக்கும் சக்தி இதற்க்கு உண்டு.
வீட்டில் தீ விபத்து நேராமல் காக்கும். நீண்டஆயுளை கொடுக்கும்.பேய்களை விரட்டும்.
முத்து கற்களை மாணிக்க கல்லை சுற்றிலும் பதித்து அணிந்தால் அதிஷ்டம் கிடைக்கும்,
அசையாசொத்துகள் வாங்கும்போது ஏற்படும்தடைகளை முத்து போக்கும்.விலகிசென்ற நட்புகளையும்,உறவுகளையும் சேர்த்து வைக்கும்.
முத்தின் மருத்துவ குணங்கள்
முத்தை ஊறவைத்த நீர் நல்ல ஊட்டம் மிகுந்தது.அந்த நீரை பருகினால் வயிற்றில் அமில சக்தியை மாற்றும்.குடல் அழற்சி வராமல் காக்கும்.மூத்திர கடுப்பை போக்கும்.
இதய வால்வுகோளாறு,எலும்புருக்கி,வாதம்,பித்தம், மூளைவளர்ச்சியின்மை,தூக்கமின்மை,ஆஸ்த்துமா ஆகிய நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும். சர்க்கரையை குறைத்து கல்லீரலை சரியாய் இயங்க செய்யும்.
யாரெல்லாம் முத்து அணியலாம்
கடக ராசிக்கு அதிபதி சந்திரன் .சந்திரனுக்குறிய ரத்தினம் முத்து.எனவே கடக ராசிக்காரர்கள் முத்து அணியலாம். ரோஹிணி,அஸ்தம்,திருவோணம் ஆகிய நட்சத்திர காரர்களும் முத்து அணியலாம். எண் கணிதபடி 2,11,20,20 தேதிகளில் பிறந்தவர்கள்,பிறந்த தேதி,மாதம்,வருடம் அனைத்தையும் கூட்டினால் 2 எண் வருபவர்களும்,பெயர் எண் 2 கொண்டவர்கள்களும் முத்து அணியலாம்.மேலும், 7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் ,பெயர் எண் 7 கொண்டவர்களும் முத்து அணியலாம்.

3. நவரத்தினங்களின் பண்புகள் - மரகத பச்சை
ஆக்கபூர்வமான கற்பனை வளத்தை கொடுக்கும் திறன் படைத்தது மரகதகல். மலட்டுதன்மையை போக்கும்,தீய சக்திகள்,பில்லி சூனியங்களில் இருந்து காக்கும்.போரிலும் வம்பு வழக்குகளிலும் வெற்றி தேடி தரும்.காதல் உணர்வை கொடுக்கும். சிறந்த கல்வியை கொடுக்கும்.
பேச்சாற்றலை வளர்க்கும். ஜோதிடர்கள்,மருத்துவர்கள் இந்த கல்லை அணிந்தால் மிக சிறந்த இடத்தை அடைவார்கள். உடல் வளர்ச்சி குன்றியவர்கள் மரகதகல்லை அணிந்தால் உடல் வளர்ச்சி திருப்திகரமாய் இருக்கும்.மரகத கல்லை உற்று நோக்கினால் களைபடைந்த கண்கள் புத்துணர்ச்சி அடையும்.நினைவாற்றலை பெருக்கும்.
மரகதத்தின் மருத்துவ குணம்
மரகத கல் வயிற்று கடுப்பை போக்கும். பெண்களுக்கு சுகப்பிரசம் ஆக உதவும்.இருதய கோளாறு ,ரத்த கொதிப்பு,புற்றுநோய்,தலைவலி, நுரையீரல் சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்தும்.
யாரெல்லாம் மரகதம் அணியலாம்..?
மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன். புதனுக்குரிய ரத்தினம் மரகதம்
மிதுனம்,கன்னி ராசிக்காரர்கள் மற்றும் ஆயில்யம்,கேட்டை,ரேவதி ஆகிய நட்சத்திர காரர்கள் மரகதம் அணியலாம். எண்கணிதப்படி 5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் எண் 5 உடையவர்களும் மரகதம் அணியலாம்.
4. நவரத்தினங்களின் பண்புகள் - புஷ்பராகம்
இந்தகல் நிறமற்றதாகவும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மஞ்சள் நிற புஷ்பராகம் கனக புஷ்பராகம் ஆகும் இதுவே சிறந்தது. இந்த கல்லை அணிந்தால் தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாகும்.துணிச்சல் பிறக்கும்.பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணதடை நீங்கும்.நின்றுபோன கட்டட வேலைகள் மீண்டும் தொடங்கும்.
கோபம் குறையும்,மனம்அமைதியாக இருக்கும்.நிலம்,வீடு,வாகனம்,வாங்கும் நிலை உருவாகும்.பெரும் புகழ் கிடைக்கும் . பகை,சதி,சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும்.நல்ல நட்பை கொடுக்கும்.
புஷ்பராகத்தின் மருத்துவ குணங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல்,இதயம்,குடல் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து காக்கும். நல்ல செரிமானத்தை கொடுக்கும். மூட்டுவலி,மூட்டு பிடிப்பு ஆகிய வற்றில் இருந்து காக்கும்.உடல் எடையை குறைக்கவும் பயன்படும்.
யாரெல்லாம் புஷ்பராகம் அணியலாம்
தனுசு,மீனம் ஆகிய ராசிகளின் அதிபதியான குரு விற்கு உரிய ரத்தினம் புஷ்பராகம்.
தனுசு,மீன ராசிக்காரர்களும் புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி ஆகிய நட்சத்திர காரர்களும் புஷ்பராகம் அணியலாம். எண்கணித படி 3 ,12,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண்,பெயர் எண் 3 அமைய பெற்றவர்களும் புஷ்பராகம் அணியலாம்.
5. நவரத்தினங்களின் பண்புகள் - பவழம்
இந்தகல் பகுத்தறிவையும்,செயல் அறிவையும் ,துணிச்சலையும் கொடுக்கும் . அதிககோபம் ,பொறாமை,வெறுப்பு,கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும் .பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.
சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும் . முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும்.குழந்தைகளை கண்திருஷ்டி யில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.
அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை
உருவாக்கும்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும்.அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும்.நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.
பவழத்தின் மருத்துவ குணங்கள்
ஒவ்வாமை நோய்கள்,ரத்த சோகை,மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு இக்கல் உகந்தது. ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும்.பவழத்தை பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த சம்பந்த நோய்களையும்,நுரையீரல் நோய்களையும் தடுக்கும். வெள்ளை நிற பவழத்தை புஷ்பராக கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும்.மலட்டுதன்மையை போக்கும்.நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும்.சிவப்பு பவழத்தை ரத்தத்தை தூய்மை செய்ய பயன்படுத்தினர் இந்திய மருத்துவர்கள்.
யாரெல்லாம் பவழம் அணியலாம்
பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி, எனவே மேஷம் மற்றும் விருச்சிக ராசி காரர்களும் ,மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் ஆகிய நட்சத்திர காரர்களும் எண் கணிதபடி 9,18,27 தேதிகளில் பிறந்தவரும்,பெயர் எண் 9 வருபவர்களும் பவழம் அணியலாம்

6. நவரத்தினங்களின் பண்புகள் - வைரம்
உடல் உரம்,மன உரம் ,வெற்றி ,செல்வம் ,அதிஷ்டம், நட்பு ஆகியவற்றுடன் தொடர்புகொண்டது வைரம் . தன்னம்பிக்கையை வளர்க்கும் .ஆணுக்கு பெண்ணிடமும் ,பெண்ணுக்கு ஆணிடமும் நேசத்தை வளர்க்கும் .கோரக்கனவுகளை நீக்கி இனிய தூக்கத்தை கொடுக்கும் .
கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை போக்கும் .கலைத்துறையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் பெரும் புகழும் வந்து சேரும் . பிறரை வசீகரிக்கும் வகையில் பேச்சாற்றல் உருவாகும் . சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.
வைரத்தின் மருத்துவ குணங்கள்
மலட்டு தன்மையை போக்கும், ஆண்குழந்தையை விரும்பும் பெண்கள் வைரம் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும் .இதயத்துக்கு வலிமை சேர்க்கும் சக்தி இதற்க்கு உண்டு . சளி,சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும்.கருப்பை கோளாறை சரி செய்யும் .சக்கரை நோய் ,மனநோய் ஆகியவற்றை சரி செய்யும்.வாதம், பித்தம் போன்ற நோய்களில் இருந்து காத்து ஆண்மைதன்மையை இழக்காதவாறு செய்யும்.
யாரெல்லாம் வைரம் அணியலாம் ..!
சுக்கிரனை அதிபதியாய் கொண்ட ரிஷபம் மற்றும் துலாம் ராசிகாரர்களும் பரணி,பூரம்,பூராடம் ஆகிய நட்சத்திர காரர்களும் 6 15 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் ,பெயர் எண் மற்றும் விதி எண் 6 15 25 கொண்டவர்களும் வைரம் அணியலாம்..!
7. நவரத்தினங்களின் பண்புகள் - வைடூரியம்
இந்த கல் உடம்பில் பட்டால் மனம்பற்றிய முன்னேற்றத்தை கொடுக்கும் .சிந்தனையை மேம்படுத்தும் . தியானத்திற்கு ஏற்றது . நம்மை மேல்நிலைக்கு கொண்டுசெல்லும் ஆன்மிக சக்திவாய்ந்த கல் .மனதில் அமைதியான அதிர்வுகளை உண்டாக்கும் .மனநோய்களை குணப்படுத்தும் .பெருந்தன்மையயும் பரந்த நோக்கத்தையும் கொடுக்கும் .மனதெளிவை கொடுத்து மனசோர்வை அகற்றும் .
சூதாட்டம் போட்டி பந்தயங்களில் வெற்றியை கொடுக்கும் .பூர்வீக சொத்து கிடைக்கும் .நிலையான வருமானம் அமையும் .முகத்தில் வசீகரம் உண்டாகும் .
வைடூரியத்தின் மருத்துவ குணங்கள்
வைடூரியம் பதித்த நகைகளை குழந்தைகளுக்கு அணிவித்தால் நல்ல வளர்ச்சி,ஆரோக்கியம் பாதுகாப்பு கிடைக்கும். பயத்தை போக்கும் வைடூரியகல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.காக்கை வலிப்பு,தோல் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
யாரெல்லாம் வைடூரியம் அணியலாம்
அசுவினி,மகம்,மூலம் ஆகிய நட்சத்திர காரர்களும் ,7 16 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண்,பெயர் எண் 7 வருபவர்களும் வைடூரியம் அணியலாம்.
மேலும் ,2 11 20 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும்,விதி எண் பெயர் எண் 2 வருபவர்களும் இந்த கல்லை அணியலாம் ...!
8. நவரத்தினங்களின் பண்புகள் - நீலம்
ஞானம்,சாந்தம்,பெருந்தன்மை நற்பழக்கம்,ஆழ்ந்தகவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது நீலம்.திருஷ்டியை தடுக்கும். தீமைகளில் இருந்து காத்துக்கொள்ள அரசர்கள் இதனை அணிந்தனர். புகழையும் உடல்பலத்தையும் அளிக்கும். போதை பொருளுக்கு அடிமையானவர் நீலத்துடன் மரகத கல்லை சேர்த்து வலக்கையில் அணிந்தால் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவர்.
தியானத்திற்க்கு உகந்தது நீலம். நமது மூன்றாவது கண்ணை விழிப்படைய செய்து ஆழ்மனதெளிவை கொடுக்கும். திருமண உறவை மேம்படுததும்.பகையை நீக்கி பகைவருடன் ஒத்துபோகசெய்யும். சிறை மீட்டு காப்பாற்றும் சக்தி நீலக்கல்லுக்கு உண்டு. வம்பு வழக்கு,சட்ட சிக்கலில் உள்ளவர்கள் இக்கல்லை அணிந்தால் நல்ல பலன் கிட்டும் நீலகல்லை வலக்கையில் அணியவேண்டும்.
நீலகல்லின் மருத்துவ குணம்
கீல் வாதம்,இடுப்புவாதம்,நரம்புவலி,வலிப்பு ஆகியவற்றிக்கு நீலம் உகந்தது. பித்த சம்பந்த நோய்களையும்,குஷ்ட நோயையும் குணப்படுத்தும்.வயிற்று நோயை சரிபடுத்தும்.அதிக உடல் பருமனை குறைக்கும்.இக்கல்லை நெற்றியில் வைத்து அழுத்தினால் காய்ச்சல் குணமாகும். மூக்கில் இருந்து கசியும் ரத்தம் நிற்கும்.
யாரெல்லாம் நீலம் அணியலாம்
சனி பகவானை அதிபதியாக கொண்ட மகரம் கும்பம் ராசிக்காரர்கள், மற்றும் பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள், எண் கணித படி 8 17 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், விதிஎண்,பெயர் எண் 8 கொண்டவர்களும் நீலம் அணியலாம்.
மேலும் ராகுவின் எண் 4 13 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் விதி எண் பெயர் எண் 4 கொண்டவர்களும் நீலம் அணியலாம்.
9. நவரத்தினங்களின் பண்புகள் - கோமேதகம்
புத்திசாலிதனத்தையும்,கல்வி மேம்பாட்டினையும் கொடுக்கும்.அச்சத்தைபோக்கி தைரியத்தை கொடுக்கும்.தம்பதியினரிடையே இணக்கத்தை உண்டாக்கி அமைதியான மகிழ்ச்சியான வாழ்வை தரும்.வாக்கு வசியம்,வாக்கு சாதுர்யம் உண்டாகும்.அரசியல் வாதிகள்,கலைஞர்கள்,ஆசிரியர்கள் ஆகியோருக்கு வெற்றியை தரும்.
உத்தியோக உயர்வை கொடுக்கும்,தொழில்வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. பண வரவை அதிகரிக்கும். லாட்டரி,ரேஸ் ஆகியவற்றில் வெற்றியை கொடுக்கும். பங்கு வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.
கோமேதகத்தின் மருத்துவ குணங்கள்
கோமேதக பஸ்பம் ஈரல்வலி,குடல்வாதம்,ரத்த புற்று, வெண்குஷ்ட்டம் போன்ற நோய்களை குணப்படுததும். பசியின்மையை போக்கும்.
யாரெல்லாம் கோமேதகம் அணியலாம்..?
திருவாதிரை,சுவாதி,சதய நட்சத்திர காரர்கள்.மற்றும் எண்கணித படி 4 13 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 4 வருபவர்களும் கோமேதகம் அணியலாம்.