Search This Blog

Sunday, April 7, 2013

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கடுகு!

பெரும்பாலான உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது கடுகு. உடல் ஆரோக்கியம் காப்பதிலும் பருமனை குறைப்பதிலும் கடுகு பெரும் பங்கு வகிப்பது சமீபத்திய ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.

இயற்கையின் வரப்பிரசாதமான தாவரங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து மனித சுகாதார நிறுவனம் சார்பில் ஸ்லாவ்கோ கோமனிட்ஸ்கி என்ற ஆராய்ச்சியாளர் தலைமையில் ஆய்வு நடந்தது.

கடுகின் மூலப்பொருட்கள் எலிகளுக்கு கொடுக்கப்பட்டு பல கட்டமாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் கிடைத்த தகவல்கள்: கடுகு செடியில் உள்ள ஹோமோபிராசினோலைட் என்ற மூலப்பொருள் தசைகளுக்கு வலு சேர்ப்பதுடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது.

பசியை தூண்டி செரிமானத்துக்கு உதவுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான கடுகு பிராசினோ ஸ்டீராய்ட் என்றும் அழைக்கப்படுகிறது. மூப்படையும் வயதில் தசைகள் அதிகம் சேதமடையாமல் இது பாதுகாப்பு அளிக்கிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. உடலில் புரதத்தின் அளவை சீராக வைக்கிறது.

இதனால் உடல் ஆரோக்கியம் அதிகரித்து சுறுசுறுப்பான செயல்பாடுகளுக்கு உதவுகிறது. உணவில் கடுகை தினமும் சேர்த்துக் கொண்டால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் அழகாக தோற்றமளிப்பர்: ஆய்வில் தகவல்

தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

லண்டன் ரோஹம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடல் நிலை மற்றும் தூங்கும் பழக்கவழக்கங்கள் குறித்த ஆய்வொன்றை நடத்தினர்.

அதன் விவரம்: தூக்கத்தில் இருந்து சராசரியாக காலை 5.58 மணிக்கு எழுந்திருக்கும் நபர்களையும், காலை 8.54 மணி வரை தூங்கிய பிறகு எழுந்திருப்பவர்களின் நடவடிக்கை, உடல் நிலை பற்றி அறியப்பட்டது.

அதில் காலையில் நேரம் கழித்து எழுந்திருக்கும் நபர்களை விட, விடியற்காலை கண்விழித்து எழும் நபர்கள் உற்சாகமாக காணப்படுவது தெரியவந்தது.

அத்துடன் அவர்களது உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருந்தனர். தோல் சுருக்கமின்றி இளமையாக காணப்பட்டனர். உடல்வாகும் அழகாக தோற்றமளித்தது. மேலும் வார இறுதியில் 2 பிரிவினருமே சற்று அதிக நேரம் தூங்குகின்றனர். அவ்வாறாக சீக்கிரம் எழுந்திருப்பவர்கள் காலை 7.45 மணி வரை தூங்குவதாக ஆய்வில் தெரியவந்தது.