Search This Blog

Wednesday, November 16, 2011

Why this name?????

சிவாஜி சிவாஜி கணேசன் என்று முதலில் அழைத்தவர் தந்தை பெரியார். வி.சி.கணேசன் இவரது சொந்தப் பெயர், சத்ரபதி என்னும் நாடகத்தில் மராட்டிய மன்னன் வீர சிவாஜி பாத்திரத்தை செய்த நாளிலிருந்து சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டார்.
ஆரூர் தாஸ் இயற்பெயர் யேசுதாஸ். திருவாரூர் அவரது சொந்த ஊர். இவருடைய குருநாதர் தஞ்சை ராமையாதாஸ் யேசுதாஸ் என்ற பெயரை ஆரூர்தாஸ் என்று அழைத்தார்.
ஜெமினி கணேசன் எஸ்.எஸ். வாசனின் ஜெமினி நிறுவனத்தில் முதன் முறையாக அக்கவுண்டன்ட் வேலை பார்த்ததால் ஜெமினி கணேசன் என்று தன் பெயரை வைத்துக் கொண்டார்.
டெல்லி கணேஷ் டெல்லியில் ராணுவத்தில் பணியாற்றிய பின் கலைத்துறைக்கு வந்ததால் இந்த டெல்லி பட்டம் கணேஷ§க்கு ஒட்டிக் கொண்டது.
குண்டு கல்யாணம் உடல் உருவம் மற்றும் சொந்த பெயர் சேர்ந்ததால் இப்பெயர்
மௌனம் ரவி மௌனம் என்ற பெயரில் கையெழுத்து பத்திரிகை ஒன்றை நடத்தி வந்ததால் முதலில் மௌனம் கே.ரவிச்சந்திரன் என்று அழைக்கப்பட்ட சினிமா பத்திரிகை தொடர்பாளரான ரவி, மௌனம் ரவி என்று அழைக்கப்பட்டார்.
வெண்ணிற ஆடை மூர்த்தி -
வெண்ணிற ஆடை நிர்மலா- இவர்களுடைய முதல் படமும் இயற்பெயரும்.
ஏ.வி.எம்.ராஜன் ஏ.வி.எம். நிறுவனத்தினர் முதலில் நானும் ஒரு பெண் படத்தில் இவரை நடிக்க வைத்தனர். அதிலிருந்து ராஜனாக இருந்தவர் ஏ.வி.எம்.ராஜன் ஆனார்.
மேஜர் சுந்தர்ராஜன் மேஜர் சந்திரகாந்த் என்ற படத்தில் வந்த மேஜர் கேரக்டரை ஏற்று நடித்த நாளிலிருந்து மேஜர் சுந்தர்ராஜன் என்று அழைக்கப்பட்டார்.
சௌகார் ஜானகி சௌகார் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி அப்படத்தின் பெயரைத் தன் பெயரின் முன் சேர்த்துக் கொண்டார்.
குமரி முத்து சொந்த ஊர் கன்னியாகுமரி ஆதலால் குமரி முத்து.
தக்காளி சீனிவாசன் கல்லூரியில்கூட இவருக்கு தக்காளி (குண்டு உடல் உருவம்) பட்டப் பெயர். அத்துடன் இவர்கள் வருங்காலத் தூண்கள் என்ற படத்தில் தக்காளி என்னும் கேரக்டரில் நடித்தார்.
யார் கண்ணன் இயற்பெயர் சக்திக் கண்ணன். யார் எனும் படத்தை இயக்கினார். பிறகு சக்தி இருந்த இடத்தில் யார் தொற்றிக் கொண்டது.
மலேசியா வாசுதேவன்
மலேசியா நாட்டிலிருந்து இந்தியா வந்து செட்டிலானதால் கிடைத்த பெயர் மலேசியா வாசுதேவன்.
கறுப்பு சுப்பையா- வெள்ளை சுப்பையா திரை உலகில் அறிமுகமாகும் போது இரண்டு பேருமே சுப்பையாதான். ஒரு அடையாளத்திற்காக அவரவர் நிறங்களை வைத்து இப்படி நிற வேற்றுமைப் படுத்தப்பட்டனர்
கலைப்புலி தாணு தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை முதற் பெயராக வைத்துக் கொண்டார் தாணு.
நிழல்கள் ரவி நிழல்கள் என்ற படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானவர் இயற்பெயர் ரவி.
என்னெத்த கன்னையா நான் என்ற படத்தில் என்னெத்த பண்ணி என்னெத்த செஞ்சி என்று எதற்கெடுத்தாலும் என்னெத்த என்ற வார்த்தையை சொன்னார். அதிலிருந்து இவரும் என்னெத்த கன்னையா ஆனார்.
பக்கோடா காதர் மதறாஸ் டு பாண்டிச்சேரி திரைப்படத்தில் பக்கோடா கேட்டு அழுதுக் கொண்டும். பக்கோடா சாப்பிட்டு கொண்டும் இருந்த காட்சி பிரபலமானதால் பக்கோடா காதர் ஆனார்.
ஒரு விரல் கிருஷ்ணராவ்
ஒரு விரல் என்ற த்ரில்லிங் படத்தில் நடித்ததிலிருந்துதான் இவருக்கு ஒரு விரல்(கிருஷ்ணராவ்) என்ற பெயர்
குட்டி பத்மினி முதலில் குழந்தை நட்சத்திரமாகத்தான் அறிமுகமானார். ஏற்கனவே பத்மினி என்ற நடிகை இருந்ததாலும் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதாலும் குட்டி பத்மினி என்று அழைக்கப்பட்டார்.
ஓமக்குச்சி நரசிம்மன் தன் பெயரைத் தமிழ் சினிமா ரசிகர்கள் நினைக்கும்போதெல்லாம் தன்னுடைய தோற்றம் (ஓமக்குச்சி!) சட்டென நினைவுக்கு வரவேண்டும் என்பதற்காக தன் பெயருக்கு முன் ஓமக்குச்சியைச் சேர்த்துக் கொண்டார்.
ராம்போ ராஜ்குமார் ராம்போ என்ற ஆங்கிலப்படத்தின் கதாநாயகன் மேல் ஏற்பட்ட ஈர்ப்பாலும் அவரின் சண்டைக் காட்சிகளின் யுக்திகளால் கவரப்பட்டவர் என்கிற காரணங்களாலும் தன் பெயருக்கு முன் ராம்போவை சேர்த்துக் கொண்டார்.
ஜாக்குவார் தங்கம் ஜாக்குவார் என்பது ஒரு கருஞ்சிறுத்தை. வேகமாக பாயக்கூடியது. அதன் அடிப்படையில் தன்னை ஜாக்குவார் தங்கம் என மாற்றிக் கொண்டார்.
சூப்பர் சுப்பராயன் மோனைக்காகத்தான் சண்டை மாஸ்டர் சுப்பராயன் சூப்பர் சுப்பராயன் ஆனார்.
கனல் கண்ணன் கண்ணனுக்கு முன்னால் கனல் சேர்ந்ததுக்கும் மோனை தான் காரணம்.
ஜுடோ ரத்தினம் பல விதமான சண்டை வகைகளில் ஜுடோ ஒருவிதம். அதில் ரத்தினம் ஸ்பெஷலிஸ்ட்.
விக்ரம் தர்மா இவர் சண்டை காட்சிகள் அமைத்த முதல் படம் விக்ரம். அதனால் விக்ரம் தர்மா என வைத்துக் கொண்டார்.
மியூசிக் முருகேஷ் (மீசை முருகேஷ்) திரை இசைக்குழுவில் இருந்துக்கொண்டே நடிக்க வந்ததால் கிடைத்த பெயர் மியூசிக். மீசையும் பெரியது.
குன்றத்தூர் பாபு குன்றத்தூர் பாபுவின் சொந்த ஊர்.
பயில்வான் ரங்கநாதன் எம்.ஜி.ஆர் தான் முதன்முதலில் இவரை இப்படி அழைத்தவர். உண்மையிலேயே இவர் பயில்வான்.
பூர்ணம் விஸ்வநாதன் தந்தையின் பெயர் பூர்ணம். வானொலியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியபோது (1945-65) 1946-இல் பெயர் அறிவிக்கும் முறை வந்தது. அப்போது பூர்ணம் என்பது இயற்பெயரோடு சேர்ந்து கொண்டு நிரந்தரப் பெயராகிவிட்டது.
காத்தாடி ராமமூர்த்தி தான் நடித்த நாடகத்தில் பாத்திரத்தின் பெயர் காத்தாடி. அதனால் ராமமூர்த்தி என்ற பெயரின் முன் சினிமா உலகில் காத்தாடி ராமமூர்த்தி என நிலைத்து விட்டது.

No comments:

Post a Comment