Search This Blog
Saturday, February 2, 2013
அறிந்திராத தகவல்கள் இதோ உங்களுக்காக-- கணிதமேதை அல் குவாரிஸ்மி !!!(AL KHWARIZMI )
கணிதத்துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய சாதனைகள் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இன்றைய நவீன கணினிக்கு அவை தான் அடிப்படையாகும்.
எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பகுதியில் ஆட்சிப் புரிந்த அப்பாசியக் கலிபா அல்-மாமுனூடைய காலத்தில் தான் முறையான கணித விஞ்ஞான ஆய்வு தொடங்கிற்று. இந்தக் காலக்கட்டத்தில் கணித துறை ஆக்கங்கள் அனைத்தும் இவர்களால் மட்டுமே இயற்றப்பட்டன. 11 ஆம் நூற்றாண்டு வரை கணிதத்துறையில் முஸ்லிம்களின் அடிப்படையான ஆக்கங்களே காணப்பட்டன.
12 ஆம் நூற்றாண்டில் இவர்களுடைய கணிதவியல் ஆக்கங்களை யூதர்களும்,கிறித்தவர்களும் அரபி மொழியிலிருந்து லத்தின் மற்றும் ஹீப்ரு மொழிகளில் மொழிபெயர்த்தனர். 13 ஆம் நூற்றாண்டு வரை யூத கிறித்துவர்களால் கூட இவர்களுடைய ஆக்கங்களுக்கு நிகரானவற்றை இயற்ற முடியவில்லை.
நாம் இன்று எழுதக்கூடிய 1,2,3 என்ற எங்கள் ஆங்கில எண்கள் என்றே பலர் தவறாக எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் அவை அரபி எண்கள் என்று தான் அழைக்கபடுகின்றன. ஆனால் முஸ்லிம்கள் தாம் பிறரிடமிருந்து பெற்றக் அறிவுக் கலைக்கு என்றும் நன்றிக் கடன் பட்டவர்களாக, அறிவு துறையில் நேர்மையுடையவர்களாக (Intellectual Honesty ) விளங்கியுள்ளனர். அதன் காரணமாக வலப்புறத் திலிருந்து இடப்புறமாக எழுதப்படும் அரபி எழுத்து முறை வழக்கத்திற்கு மாறாக இந்த எண்கள் மட்டும் இடப்புறத்திலிருந்து வலபுறமாகத்தான் இன்றும் எழுதப்படுகின்றன.
இன்னும் பூஜ்யம் அல்லது ஸைபர் என்ற எண் வடிவத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் எண் முறை கணிதத்தை (Arithmetic) முஸ்லிம்கள் மிகவும் எளிமைப் படுத்திவிட்டனர். Zero என்ற ஆங்கில சொல்லுக்கு பிரெஞ்சு மொழியில் Ciphra எனப்படும். இது Sifr என்ற அரபி சொல்லிலிருந்து தோன்றியதாகும். என்றால் பூஜ்யம் என்று பொருள்படும்.
ஒன்பதாம் நூற்றாண்டில் கலிபா அல் மாமூனுடைய காலத்தில் வாழ்ந்த மிகப் பெரும் கணித மேதை அபு அப்துல்லா முஹம்மது இப்னு மூசா அல்குவாரிஸ்மி என்பவராவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி ஆகும். 1,2,3 என்ற எண்முறை கணிதம் இவரது பெயராலேயே ஐரோப்பாவிலிருந்து அறிமுகமானது. அதனை ஆங்கிலத்தில் Algorithm என அழைப்பர். அல்குவாரிஸ்மி என்ற பெயரே Algorithm என மருவி வந்துள்ளது Algebra என்ற குரிக்கணிதவியலின் தந்தையும் இவர்தான். இவர் கிதாபுல் ஜபர் வல் முகாபலா என்ற நூலினை எழுதியுள்ளார். அல்ஜபர் என்ற அரபி சொல்லிருந்து தான் Algebra என்ற சொல் பிறந்தது.வடிவக்கணிதம் (Geometry ), முக்கோணக்கணிதம் (Trigonometry ) என்ற கணித முறைகள் ஏற்படுத்தியவர்களும் முஸ்லிம்களே.
அரபியர்களின் நடமாடும் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படும் அல்-கிந்தி என்பவர் 270 நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில கணித நூல்களும் அடங்கும். இவரது முழுப்பெயர் அபுயூசுப் யாகூப் இப்னு இசாக். இவர் வாழ்ந்தக் காலம் கி.பி 801 - 873 ஆகும்.
அல் குவாரிஸ்மி மற்றும் அல் கிந்தினுடைய எழுத்துகளின் வழியாக தான் எண்முறை கணிதம் மேற்குலகிற்கு நன்கு அறிமுகமானது. இவர்களுக்கு பின் எண்ணற்ற பல முஸ்லிம் கணித மேதைகள் தோன்றி கணிதவியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு தொண்டாற்றியுள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment