தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில்
நிறைய பேருக்கு அன்றாட
வாழ்க்கையின் தொல்லைகளில்
ஒன்றாகவும்,
தினசரி வாழ்க்கையை பாதிக்கிற
ஒரு விஷயமாகவும் இருக்கும்.
அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்ன
ு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம
படிச்ச கேள்விப்பட்ட
அல்லது மருத்துவரால்
பரிந்துரைக்கப்பட்ட
ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம
தூக்கமின்மைய போக்க
முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?
அப்படி தூக்கம் வராமல்
புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்ப
ோது, ரொம்ப நல்ல புள்ளையா,
ஒன்றிலிருந்து 100 வரை எண்ண
வேண்டும்.
நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள
உறக்கம் வந்துவிடும். பலன்
என்னவா இருக்கும்னு. நினைக்கிறீங்க…?
வேற ஒண்ணுமில்ல, குழப்பம்தான். அட
ஆமாங்க சில சமயம்
நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள
தூக்கம் வந்துவிடும். பல சமயங்களில்
1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாக் கூட
தூக்கமே வராது.
ஆனா இப்போ, இரவு நன்றாக தூங்க
உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும்,
உறக்கம் வர காரணமாய் அவற்றில்
இருக்கும் வேதியியல்
பொருட்களையும் பற்றி விளக்கமாக
தெரிஞ்சிக்கலாம்
செர்ரி பழங்கள்:
நம் உடலுக்குள் இருக்கும்,
உடலியக்கங்களை கட்டுப்படுத்தும்
ஒருவகையான கடிகாரமான உயிரியல்
கடிகாரமானது நம்ம தூக்கத்தையும்
கட்டுப்படுத்துகிறது.
இந்த
கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த
ஆணையிடும் திறனுள்ள
மெலடோனின் அப்படீங்கிற வேதியியல்
பொருளின் இயற்கை உறைவிடம் தான்
செர்ரிபழங்கள்.
அதனால இரவு உறங்கச்
செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்
பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட
வேண்டும்.
வாழைப்பழம்:
இயற்கையான தசை தளர்த்திகளான
பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம
வாழைப்பழத்துல நிறைய இருக்கு.
அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன்
அப்படீங்கிற அமினோ அமிலமும்
வாழைப்பழத்துல இருக்குது. இந்த எல்
ட்ரிப்டோபான்
அமினோ அமிலமானது மூளைக்குள்ள
ே 5 HTP அப்படீங்கிற
ஒரு ரசாயனமா மாறிவிடும். அதன்
பிறகு இந்த 5 HTP-யானது செரடோனின்
மற்றும் மெலடோனினாக
மாறிவிடும்.
டோஸ்ட்:
நாம பொதுவா காலை உணவா அதிகம்
சாப்பிடுற டோஸ்டுக்கும்
தூக்கத்துக்கும் சம்பந்தம்
இருக்குன்னு சொல்றாங்க
விஞ்ஞானிகள்.
மாவுச்சத்து நிறைந்த உணவுகள்
எல்லாமே இன்சுலின் ஹார்மோன்
சுரப்பதை தூண்டும். இந்த இன்சுலின்
ஹார்மோன்
உறக்கத்தை தூண்டக்கூடியதாகும்.
இன்சுலின்
ஹார்மோனானது மூளையிலிருந்து ட்
ரிப்டோபான் மற்றும் செரடோனின்
ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில்
அதிகரிக்கச் செய்யும்
சமிக்ஞைகளை உருவாக்கிறதாம்.
மூளையிலிருந்து வெளியாகும்
இவ்விரு ரசாயனங்களும்
உறக்கத்தை தூண்டிவிடும் திறன்
கொண்டவை ஆகும்.
ஓட் மீல்:
ஓட்ஸ்
கஞ்சி சொல்லுவாங்களே அதத்தான்
அமெரிக்காவில் ஓட் மீல்
சொல்லுவாங்க.
அதாவது மேலே சொன்ன டோஸ்ட்
மாதிரியே இந்த ஓட்ஸ் கஞ்சியும்
ரத்தத்துல இருக்குற
சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த
சர்க்கரை இன்சுலின் ஹார்மோன்
சுரப்பதை தூண்டிவிட அதன்
விளைவாக உறக்கம் தூண்டும்.
மூளை ரசாயனங்கள்
சுரந்து கடைசியா… “உறக்கம் உன்
கண்களை தழுவட்டுமே…
நிம்மதி நெஞ்சினில் மலரட்டுமே…
அப்படீன்னு நாம தூங்கிடலாம்”
கதகதப்பான பால்:
உறக்கம் தரும் இயற்கை உணவுகள்
தரவரிசையில் நாம இன்னைக்கு பார்த்த
மேலே இருக்குற 4
உணவுகளுமே புதுசுதான்.
ஆனா பால் மட்டும் பழசுதான். ஆமாம்
சின்ன வயசுலேர்ந்து ஒரு டம்ளர் பால்
சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம்
வரும் அப்படீன்னு அம்மா காய்ச்சின
பாலை கொடுப்பாங்க இல்லையா?
ஆனா நம்ம அம்மாவுக்கு இந்த பால்ல
இருக்குற எந்த வேதியியல்
மூலப்பொருள் காரணமாக
நமக்கு தூக்கம்
வருதுன்னு தெரிஞ்சிருக்க
வாய்ப்பில்லை
வாழைப்பழத்துல இருக்குற எல்
ட்ரிப்டோபன் அமினோ அமிலம்
பாலிலும் இருக்கிறது, அதுதான்
செரடோனின் உற்பத்தி மூலமா உறக்கம்
வரவைக்கும். அதுமட்டுமல்லாமல்
பாலில் அதிக கால்சியம்
இருப்பது உறக்கத்தை தூண்டும்
என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
உறக்கம்
நல்லா வரனும்னா இனிமே யாரும்
தூக்க மாத்திரைகளை சாப்பிடாதீங்க.
அதுக்கு பதிலா மேலே சொல்லியிருக்
குற ஐந்து வகையான
இயற்கை உணவுகளை சாப்பிட
முயற்சி பண்ணுங்க, ஏன்னா,
அவசியமில்லாம
மாத்திரைகளை சாப்பிடுறது உடலுக்க
ு கேடுதான்.
Search This Blog
Sunday, November 24, 2013
இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!
மூளையைத் தூங்க விடாதீர்கள்!
பொதுவாக நினைவாற்றல்
என்பது அனைவருக்கும் மாபெரும்
தேவை. நினைவாற்றல் சுமாராக
இருப்பவர்கள் கூட
நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள
மூன்று முக்கியமான
வழிமுறைகளை கடைப்பிடிக்க
வேண்டும்.
1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்
இந்த மூன்றிற்குமே சிறப்பான
பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப்
பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல
வேண்டியதில்லை.
நமக்கு நாமே பயிற்சி அளித்துக்
கொள்ளலாம். அதற்கான சில
பயிற்சி முறைகளைப் பார்ப்போம்.
முதலாவதாக ஒரு பயிற்சி.
ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள்.
பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக
எண்ணுங்கள். பிறகு 100
லிருந்து தலைகீழாக, 100, 98 96,
என்று இரண்டு இரண்டாகக்
குறைத்து எண்ணுங்கள்.
பிறகு நான்கு நான்காகக்
குறையுங்கள். இப்படியே 5,6,7
வரை தாவித்
தாவி குறைத்து எண்ணுங்கள்.
இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக்
கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய
நினைவுத் திறன் நல்ல அளவில்
வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
இப்போது ஓர் ஆங்கிலப்
பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் ஒரு பத்தியில் எஸ்.
எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக்
கொள்ளுங்கள்.
அடுத்து இரண்டு மூன்று பத்திகளில்
உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக்
குறித்துக் கொள்ளுங்கள்.
இப்போது மீண்டும்
ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள்
என்றால், எத்தனை எஸ்
அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள்
என்று தெரியவரும்.
அதை வைத்து உங்கள் நினைவுத்
திறனின் அளவை நீங்கள்
தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத்
திறனை வெகுவாக வளர்த்துக்
கொள்ளலாம்.
தொலைக்காட்சியில் வரும்
விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம்
பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள்.
வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம்
இருந்திருந்தால், இதைவிட நன்றாக
இருந்திருக்கும் என்று சிந்தித்துப்
பாருங்கள். சிந்திக்க சிந்திக்க
மூளையின் சிந்திக்கும் ஆற்றல்
வளர்வதோடு நினைவாற்றலும்
பெருகும். முயன்று பாருங்கள்.
இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள்
நெற்றியை கற்பனையாக நீங்களே 6
அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.
ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள்
9 மணி புரோகிராம் என்று எழுதிப்
போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க
ராம்கோபாலை சந்திக்க வேண்டும்
என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்).
பிறகு அந்த
அறையை இழுத்து மூடுங்கள்.
இதே போன்று இரண்டாவது அறையைத்
திறந்து இன்னொரு புரோகிராம்
எழுதிப் போடுங்கள்.
அதே போன்று அடுத்தடுத்த
நான்கு அறைகளும், இப்படிச்
செய்து விட்டால் இரவு படுக்கையில்
படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக
இருக்கும். இந்த 6 புரோகிராம்களும்
அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள்
மனதில் தோன்றும். இன்னும்
இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய
முறைகளைக் கையாண்டு உங்கள்
நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
புத்தகங்களைப் படிப்பது, காலையில்
ஐந்து மணிக்கெல்லாம்
எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத்
திட்டமிடுவது, அபிப்யாசங்கள்
செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள்
சிந்திக்கும் திறனையும்,
நினைவுத்திறனையும் வளர்த்துக்
கொண்டே போகலாம்.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர்
இயந்திரம். அதிலும் இதயமும்,
மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள்.
இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால்
வாழ்க்கை நின்று விடும்.
மூளைக்கு ஓய்வு கொடுத்தால்
அது துருப்பிடித்துப் போய்
ஒன்றுக்கும்
பயனற்று வாழ்க்கை முன்னேற்றம்
நின்று போய்விடும்.
ஆகையால் எந்த நேரமும்
மூளைக்கு ஏதேனும்
வேலை கொடுத்துக்கொண்ட
ே இருங்கள்.
நினைவாற்றலை மேம்படுத்துங்கள்.
நினைத்ததைச் சாதியுங்கள்.
பனை
பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப்
பேரினம். அறிவியல் வகைப்பாட்டில்
இதை போரசசு (Borassus) என்னும்
பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில்
பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய
மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம்
வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல்
இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம்
இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள்
(நுங்கு) பெரியதாக, வட்டமாக,
பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
பொது வழக்கில் மரம் என்று தமிழில்
வழங்கப்படினும், இது மர வகையைச்
சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல்
அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ்
இலக்கண மரபுகளின்படியும்
பனையை மரம் என்பது தவறு.
நெடிய மரமாக 30 மீட்டர் உயரம்
வரை பனைமரம் வளரும். இலைகள்
நீட்டமாக விசிறி போல் இருக்கும்.
இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள்
சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக,
வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
பனையை, கேட்டதைக் கொடுக்கும்
தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள்
கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும்
நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர
கோடை காலத்தில் ஏற்படும்
வேர்குரு நீங்கும்.
தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர
சீதக்கழிச்சல் நீங்கும்.
பணங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில்
அடிக்கடி பயன் படுத்தி வர
அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம்
தாகம் போன்றவை நீங்கும்.
பனங்கிழங்கிற்கு ஊடல்
குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த
கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல்
அழகு பெறும்.உடல் பலமும்
அதிகரிக்கும்.பதநீர் மகிமை..
பனை மரத்துல
நுங்கு பிஞ்சு உருவானதும்,
அதை நாறைக் கட்டி,
வளர்ச்சியை கட்டுப்படுத்துவ
ாகபிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு,
தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த
பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக
மண்பானையில் பால்(கள்) இறங்கும்.
இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம்
வரை பால் எடுக்கலாம். அந்த பாலில்
சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி.
சில இடங்களில் மண்பானை அடியில்
சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவா
ங்க. இதனால
மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர்
தயார். இந்த பனைமர பதநீரைவிட,
தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும்.
ஆனால் சுவையில் பனைமர
பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில்
சோறு சமைக்கலாம்; பொங்கல்
வைக்கலாம்;
கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல்
அரிசி படைக்கலாம். யானை இறந்தால்
ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க.
பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான்.
பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும்
வரை எல்லா வகையிலும் பயன்தரும்
என்பது நிதர்சனம்'',
சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும்
பனஞ்சறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக
நோய் இருப்பவர்கள் இதை 40
நாட்களிடைவிடாஅது அருந்தி வர அந்த
நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி,
பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய்
தீர்கும் குணங்கள் உண்டு.
பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும்
தாகத்திற்கு மிகவும் ஏற்றது.
பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி,
அதனுடன் தேங்காய்
உப்பு போட்டு சாப்பிட்டு வர
உடலுக்கு பலம் உண்டாகும். மேலும்
உடல் பருமன் ஆகும்.
பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில்
சிறிது தேங்காய் எண்ணெய்
கலந்து புண்களின் மீது பூச ஆரும்.
பயன் தரும் பாகங்கள் . . .
நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு,
பனை ஓலை, குருத்து, பனை கருக்கு,
பனைப்பால், முற்றிய மரம் முதலியன.
வளரியல்பு. . . பனை கற்பக மரமாகும்.
கூந்தல் பனை, கரும்பனையில்
கரும்பனையே மருத்துவ
குணமுடையதாகும்.
பனை இந்தியாவில் அதிகமாகக்
காணப்படும். இது எல்லா மண்வளத்திலும்
வளர்க்கூடியது. வரட்சியைத்
தாங்கி வளரக்கூடியது.
பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர்.
இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக
வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன்
இருக்கும்.
இது தொண்ணூறு அடிக்கு மேல்
வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம்
வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில்
அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும
். இது விதை மூலம்
உற்பத்தி செய்யப்படுகிறது.
மருத்துவப் பயன்கள். . .
பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது.
குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத்
தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த
சுவை உடையது.
பனை மரத்தின் பால் தெளுவு-
தெளிவு எனப்படும்.
சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.
வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200
மி.லி. அருந்தி வந்தால் போதும்.
உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும்.
வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும்.
புளிப்பேறிய கள் மயக்கம் தரும்,
அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக்
கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த
தெளிவு எல்லோருக்கும் சிறந்த
சுவையான சத்தான குடிநீராகும்.
அதைக் காய்ச்சினல் இனிப்பான
கருப்பட்டி கிடைக்கும்.
நுங்கு வெயிலின் கொடுமையைக்
குறைக்க மனிதனுக்குக் கிடைத்த
அரு மருந்தாகும்.
எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த
சத்துணவாகும். நுங்கின் நீர்
வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.
பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர்
சத்து நிறைந்தது. பித்தம் தருவது.
சுட்டு சாப்பிடலாம்.
பனங்கொட்டையை மிருதுவான மண்
அல்லது ஈர மணலில்
புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட
பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள
நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச்
சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட
உணவாகும்.
சிறு குழந்தைகளுக்கு உடலைத்
தேற்றும்.
பனை மரத்தின் அடி பாகத்தில்
கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை,
தடிப்பு, ஊரல்,
சொறி உள்ளவர்களுக்கு அதன்
மீது தடவினால் குணமடையும்.
ஐந்தாறு முறை தடவ வேண்டும்.
பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்
கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது.
இதில் விசிறி, தொப்பி, குடை,
ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும்.
கைவினைப் பொருள்கள் செய்யலாம்.
இந்தோனேசியாவில்
ஓலையை எழுதும் பேப்பராகப் பயன்
படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த
கொதிநீரில் வேக வைத்து மஞ்சள்
பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள்
போட்டு ஏட்டுப் புத்தகம்
உண்டாக்கினார்கள்.
கண்ணில் புண் ஆனால்
பனை குருத்து மட்டையைத் தட்டிப்
பிழிந்த சாறு மூன்று நாள் விட
குணமடையும் எரிச்சில் தீரும்.
அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள்.
பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள்
தயார் செய்தனர். வேலிக்கும் பயன்
படுத்தினர். பனையின் எல்லாபாகமும்
உபயோகப் படுத்தினார்கள்.
பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம்
நீங்கும். பசியை தூண்டும்.
புஷ்டி தரும். முன்பு சொன்னபடி,
நுரையீரல் மற்றும்
தொண்டை பாதிப்புகளுக்கு
கொடுக்கப்படும் ஆயுர்வேத
மருந்துகளில் பனைவெல்லம்
சேர்க்கப்படுகிறது.
எலிகளை வைத்து நடத்திய
பரிசோதனையில் பனைவெல்லம்,
நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால்
ஏற்படும் நுரையீரல்
பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய
வந்துள்ளது.
வெல்லம் அயச்சத்து மிகுந்தது.
சோகை நோய்களுக்கு மருந்து.
தமிழகத்தில் பனை மரத்தின்
வெல்லத்தை இரண்டு வகையாக
சொல்வார்கள். முற்றிலும்
சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற
வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள்.
இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக
உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’
எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள்
உள்ளன.
பாலில்
பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால்
மார்புச்சளி இளகும். முக்கியமாக
தொண்டைப்புண், வலி இவை அகலும்.
சங்கீத வித்வான்கள் எப்போதும்
பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய
பாலையே அருந்துவது வழக்கம். அதனால்
அவர்களின் குரல் வளம் குறையாமல்,
பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில
மூலிகைகளும் சேர்க்கப்படுவது
உண்டு.
தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம்,
காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள்
இவற்றுக்கு நல்லது.பனை மரத்தில்
இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான
நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது.
பனை நீரிலுள்ள
சீனி சத்து உடலுக்கு தேவையான
வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும்
குளுக்கோஸ்
மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய
குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல
புஷ்டியை தருகிறது.
கருவுற்ற பெண்களுக்கும்
மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற
மலச்சிக்கல், வயிற்றுப் புண்
முதலியவைகளை குணப்படுத்துகிற
து. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய
வியாதிகளை போக்குகின்ற நல்ல
மருந்தாகவும் இது செயல்படுகிறது.
இதை அருந்துவதால் இருதய நோய்
குணமாகும். இருதயம் வலுவடையும்.
இதிலிருக்கும் கால்சியம்
பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில்
ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின்
பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.
இதிலிருக்கும்
இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி,
சிரங்கு உள்பட சகல தோல்
வியாதிகளையும் நீக்குவதுடன் கண்
நோய், ஜலதோசம், காசநோய்
இவைகளையும் நீக்குகிறது.
மேலும் பதநீரானது சயரோகம்,
இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம்,
பசியின்மை, வயிற்றுப்புண்,
வாய்வு சம்பந்தமான நோய்களையும்
குணப்படுத்துகிறது.
முத்தான முத்து பற்றிய முப்பது விஷயங்கள்
* நமது முன்னோர்கள் கிடைப்பதற்கரிய
மற்றும் விலை உயர்ந்த சில அரிய
பொருட்களைக் கண்டறிந்து அவைகளைத்
திறம்பட பயன்படுத்தி உள்ளனர். அவற்றில்
நவரத்தினங்கள் என்ற ஒரு பிரிவு உள்ளது.
ஒன்பது வகையான விலை உயர்ந்த அரிய
மருத்துவத்தன்மை
கொண்டது மட்டுமின்றி மனதிற்கு மகிழ்ச்சியையும்
அளிக்கும் ரத்தினங்களையே நவரத்தினம்
என்கிறார்கள். இவற்றில் முத்து என்ற
நவரத்தினமும் ஒன்று. மணிகளின் அரசன்
என முத்து போற்றப்படுகிறது.
* பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள்
முத்தின்
பயன்களை உணர்ந்து பயன்படுத்தியுள்
ளனர். அக்கால இலக்கியங்களிலும்,
பாடல்களிலும் முத்தின் மதிப்பு மற்றும்
முத்துமாலை பற்றியும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
* பழங்காலத் தமிழ் மகளிர்
முத்து மாலை அணிந்துள்ளனர்.
முத்துக்கள் நிரப்பப்பட்ட சிலம்புகளையும்
அணிந்துள்ளனர்.
* சிப்பிகளினுள் விழும்
நீர்த்திவலை அல்லது திடப்பொருளே உறைந்து உருண்டு முத்து ஆக
மாறுகிறது.
முத்து உருவாகுதலை முத்து விளைகிறது என்ற
சொல்லால் குறிப்பிடப்படுகிறது.
* மெல்லுடலிகள் என்ற பிரிவின் கீழ் வரும்
கடல்வாழ் உயிரினங்களில்
முத்துக்களை உற்பத்தி செய்யும்
திறனுடைய க்வாட்ருலா, யூனியோ,
மார்கரிட்டேனே என்ற பெயருடைய
சிப்பிகள் உள்ளன.
* கடலில் எல்லா இடங்களிலும்
முத்து கிடைப்பதில்லை. குறிப்பிட்ட
இடங்களில்
மட்டுமே முத்து கிடைக்கிறது.
* முத்துக்கள் என்பது அரகோனனட் என்றும்
ஒரு வகையான சுண்ணாம்புப்
(கால்சியம் கார்பனேட்) படிகங்களால்
ஆனவையாகும்.
* கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர்
தூரத்திற்கு, சுமார் இருபது மீட்டர்
வரை உள்ள ஆழங்களில் சிப்பிகள்
படுகைகளாகக் காணப்படுகிறது.
மூச்சடக்கிக் கொண்டு கடலுக்குள்
மூழ்கி இச்சிப்பிகளை சேகரித்து வருதலே முத்துக்
குளித்தல் எனப்படுகிறது.
* தற்போது நவீன முறையில் சிப்பிகள்
அள்ளப்படுகின்றன. எல்லா சிப்பிகளிலும்
முத்து காணப்படுவதில்லை.
* முத்துக்கள் பல வகைப்படும். ஆழ்கடலில்
எடுக்கப்படும் முத்து உயர் ரகமாகும்.
* பத்து நிறங்களில்
முத்து கிடைக்கிறது. எனினும்
பொதுவாக கிரீம்
நிறமாகவோ அல்லது பிங்க்
நிறமாகவோதான் இருக்கும்.
* வெள்ளை, நீலம், சாம்பல், பிரவுன்
நிறங்களிலும் முத்து காணப்படுகிறது.
அந்தமான் தீவுகளில் கருப்புநிற
முத்துக்கள் கிடைக்கின்றன.
* பொதுவாகவே முத்துக்கள்
உருண்டையாக இருக்கும். ஆனாலும்
நீர்த்துளியின்
வடிவத்திலோ சற்று ஒழுங்கற்ற
உருண்டை வடிவத்திலேயோ முத்து காணப்படலாம்.
* முத்துச் சிப்பிகளின் ஆயுட்காலம்
ஐந்தரை ஆண்டுகளாகும். முத்துக்களின்
வாழ்நாள் 100 முதல் 300 ஆண்டுகளாகும்.
சில முத்துக்கள் 500 ஆண்டுகள்
வரை இருக்கும், அதன்பின் முத்துக்களின்
பளபளப்பு குறைந்து நிறம் மங்குவதுடன்
முத்துக்கள் மேல் வெடிப்பு ஏற்படும்.
* முத்துக்களை யார்
வேண்டுமானாலும் அணியலாம்.
முத்து அணிந்தால் முத்து உடலில்
பட்டு கரையும்.
அப்போது உடல்சூடு நீங்குமென
மருத்துவர்கள் குறிப்பிடுகின்றன.
* உலக அளவில் முத்து என்றதும்
நினைவுக்கு வருவது ஜப்பான் - இந்திய
அளவில் முத்து என்றதும்
நினைவுக்கு வருவது ஐதராபாத் நகரம்.
தமிழ்நாட்டில் தூத்துக்குடியில்
முத்து அதிகம் கிடைக்கின்றது.
* சீனா, ஜப்பான், ஹாங்காய்,
இலங்கை நாடுகளிலிருந்து முத்துக்கள்
நம்
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு மும்பையில்
பெருமளவில் விற்பனையாகிறது.
* சந்தைகளில் விற்கப்படும் முத்துக்கள்
மீன் வாசனையோடு இருக்கும்.
* சில வகையான ரசாயனக் கரைசலில்
முத்துக்களை மூழ்க வைத்து உலர
வைக்கும் போதுதான் முத்துக்கள்
வெண்மையான நிறத்தைப் பெறுகின்றன.
* உலக அளவில் மன்னர் வளைகுடா மற்றும்
பாரசீக வளைகுடா பகுதியில் சிறப்பான
முத்துக்கள் கிடைக்கின்றன.
* இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலப்
பெண்கள்தான் அதிக அளவில்
முத்து மாலைகளைச்
செய்து அணிந்து கொள்கின்றனர்.
* தற்போது செயற்கையில்
சிப்பிகளினுள் திரவத்தைச்
செலுத்தி செயற்கை முத்து தயாரிக்கிறார்கள
்.
* 12ம் நூற்றாண்டிலேயே சீனர்கள் வளர்
முத்துக்களை உருவாக்கியுள்ளனர்.
செயற்கை முத்துக்களின்
தந்தை எனப்படுபவர் மிகிமாட்மோ என்ற
ஜப்பானியர் ஆவார். 1893ல் முதல்
முறையாக செயற்கை முறையில்
முத்தை உருவாக்கினார்.
* முத்துக்களை ஒன்றுடன்
ஒன்று உரசாமல் வைக்க வேண்டும். தங்க
நகைகளோடோ அல்லது இதர
ஆபரணங்களோடோ முத்து நகைகளை வைக்க
வேண்டாம்.
* காற்றுப்புகாத அறைகளில்
முத்து ஆபரணங்களை வைக்க வேண்டும்.
ஸ்பிரே மற்றும் வாசனைப்
பொருட்களுடன் முத்து மாலைகள்
வைக்க வேண்டாம்.
* முத்து மாலையைப்
போடுவதற்கு முன்பும், கழட்டிய
பின்பும் பருத்தித் துணியால் சுத்தம்
செய்ய வேண்டும்.
* காகிதம், சாயம் போகும் துணியில்
முத்தை வைக்க வேண்டாம். இவற்றால்
முத்தை துடைக்கக் கூடாது.
* அமிலங்கள், இரசாயனப்
பொருட்களுக்கு அருகே முத்துக்களை வைக்க
வேண்டாம்.
* முத்து சிறந்த மருத்துவப்
பொருளாகும்.
பல்வேறு நோய்களை முத்து தீர்க்கிறது.
முத்துக்களை பல்வேறு மூலிகைச்
சாறுகள்
கலந்து பல்வேறு மருந்துகளைத்
தயாரிக்கிறார்கள்.
* முத்து இளமையைக் காக்கும்.
அழகு சாதனங்கள் தயாரிக்க
முத்து பயன்படுகிறது.
* நெஞ்சு எரிச்சல், மூலநோய், கண்
எரிச்சல், தலைவலி போன்ற
நோய்களை குணப்படுத்த
முத்து பயன்படுகிறது.