நெஞ்சுக்கோழையை நீக்கும்.
இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி,
ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா,
குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும்
தலைவலி போன்ற நோய்களைக்
குணப்படுத்தப் பயன்படுகிறது.
இலை வாந்தி உண்டாக்கிக்
கோழையகற்றியாகவும். வேர்
மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
சமூல சூரணம் 1 சிட்டிகை நெய்யில்
காலை மாலை ஒரு மண்டலம் கொடுக்க 8
வித பவுத்திர நோயும்தீரும்.
வேர்சூரணம் 1 லிட்டர் நீரில் 1
பிடி போட்டு 8 இல்ஒன்றாய் காச்சிக்
கொடுக்க நாடா புழு, நாக்குப்பூச்சிந
ீங்கும். பேதியாகும் சிறுவர்களுக்குப்
பாதியளவு கொடுக்கவும்.
இலையை விளக்கெண்ணெய்
விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவரப்
படுக்கைப் புண்கள் தீரும்.
இலைச் சூரணத்தைப் பொடி போல்
நசியமிட தலை வலி நீங்கும்
இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப்
பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத்
தோல் நோய் அனைத்தும் தீரும்.
மூலநோய் ஒரு சிக்கலான
நோய்.அறுவை செய்தாலும் வளரும்.
மூலிகை மருந்துகள் நல்ல பயன் தரும்.
ஆசனமூலம், பக்க மூலம், சிந்திமூலம்,
மேக மூலம், சரக்கண்ட மூலம்,
மாலைமூலம், கொடிமூலம்,
கண்டமாலை என எட்டு வகைப்படும்.
பதினெட்டு வகை எனவும், கூறுவர்.
அவை இவற்றில் அடங்கும். மூலத்திற்குக்
குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.
பூத்த குப்பைமேனியை வேறுடன்
பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம்
செய்து இதில்2 – 5 கிராம் அளவு பசும்
நெய்யில் காலை மாலை 48 நாள்
சாப்பிட எந்தவகை மூலமும் முற்றிலும்
குணமாகும். மோரில் சாப்பிடவும்.
புளிகாரம் இல்லாவிடில்
விரைந்து குணமடையும்.
குடற்பழுவான நாடாப்புழு,
கீரிப்பூச்சி, ஆகியவற்றிக்கு, இதன் வேர்
50 கிராம்200 மி.லி. நீரில்
காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்
அனைத்தும் வெளியேறும்.
குப்பைமேனிச்சாற்றில்
சுண்ணாம்பு மத்தித்துநாய், பாம்பு,
எலி, முதலியனவற்றில் கடிவாயில் தடவ
குணமடையும். மேகப்புண்ணும்
குணமடையும்.
ஆமணக் கெண்ணையில் இந்த
இலையை வதக்கி இளஞ் சூட்டுடன்
வைத்துக் கட்ட படுக்கைப் புண்,
மூட்டு வீக்கம், வாத வலி தீரும்.
இந்த இலையின் பொடியை மூக்கில்
பொடி போல் இழுக்க நீர்
வடிந்து தலைவலி உடனே குணமடையும்.
இதனை நசியமிடுதல் என்பர். வெறிநாய்க்
கடியும், சித்த பிரமையும்
குணமடையும்.
குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும்
அரைத்துப் பூசி ஒரு மணி நேரம்
சென்று குளித்து வர
சொறி சிரங்கு படை குணமடையும்.
எல்லா வகையான புண்களுக்கும் இதன்
இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப்
பூச குணமடையும், மேனி மீண்டும்
எழிலோடு விளங்கும்
Search This Blog
Sunday, November 24, 2013
குப்பைமேனி மருத்துவக் குணங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment