Search This Blog

Tuesday, February 19, 2013

உங்க டூத் பேஸ்ட்ல என்ன இருக்கு?

காலை எழுந்த உடன் முதல் வேலை பல் துலக்குவது தான். அந்த பற்பசை பற்றி நம்மில் பலருக்கு சில விசயங்கள் தெரிவதில்லை. நம்முடைய முன்னோர்களின் பற்கள் இன்றைக்கும் உறுதியாக இருக்க காரணம் அவர்கள் ஆலும், வேலும் பயன்படுத்தி பல்துலக்கியது தான். 

ஆனால் இன்றைக்கு விலை உயர்ந்த பேஸ்ட், ப்ரஸ் பயன்படுத்தினாலும் நம்முடைய பற்கள் சொத்தையாகின்றன. எளிதில் ஆட்டம் கண்டு 50 வயதிற்குள் சிலருக்கு பற்கள் விழுந்து விடுகின்றன. எனவே நாம் பயன்படுத்தும் பற்பசை எந்த மாதிரியானது. எப்படி பல் துலக்க வேண்டும் என்று விளக்குகிறார் பிரபல பல் மருத்துவர் ஒருவர்.

பற்பசையில் என்ன இருக்கு?
பற்களை பாலிஷ் செய்யவும், சுத்தப்படுத்துவதற்குமான அப்ரசிவ்ஸ், நுரையை உருவாக்கும் டிடர்ஜெண்டுகள், நீண்டகாலம் கெடாமலிருக்க பிரிசர்வேடிவ், நிறத்தை அளிக்கும் கலர்கள் பற்பசையில் உள்ளன. மேலும் சுவை அளிக்கும் ப்ளேவர்ஸ், நறுமணத்தை வழங்கும் ப்ராகரன்ஸ் ஆகியவை உள்ளன. இவை தவிர கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் டி போன்றவை பற்பசையில் காணப்படுகின்றன.

எப்படி பல் துலக்கணும்?
விளம்பரங்களில் ப்ரஸ்சை நிறைத்து பேஸ்ட் வைக்கின்றனர். அது தவறானது. ஃப்ளோரைடும், இதர இரசாயனப் பொருட்களும் கலந்த டூத் பேஸ்டை ப்ரஸ்ஸில் ஒரு பட்டாணி அளவுக்கு எடுத்தாலே போதுமானது. நாம் பல் துலக்குவது டூத் பேஸ்டின் அளவைப் பொறுத்து அல்ல, மாறாக எவ்வாறு பேஸ்டை உபயோகின்றீர்கள் என்பதாகும்.

ப்ளோரைடு நல்லதா? கெட்டதா?
ப்ளோரைடு கலந்த பற்பசைகளை பயன்படுத்துமாறு பல் மருத்துவக் கழகங்களும், பல் மருத்துவர்களும் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள். நாம் வசிக்கும் இடத்தைப் பொறுத்தும், நாம் அருந்தும் நீரில் கலந்துள்ள ப்ளோரைடின் அளவைப் பொறுத்தும் இந்த அறிவுரை மாறுபடுகிறது.

ப்ளோரைடு இயற்கையாகவே கிடைக்கின்ற ஒன்று. அது நமது பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க உதவுகிறது. பல சோதனைகளில், ப்ளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பவர்களுக்கு பற்குழி விழுவது குறைகிறது அல்லது தவிர்க்கப்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் அளவுக்கு அதிகமான ப்ளோரைடு உபயோகம் பற்களுக்கு ஊறு விளைவிக்கும். அது மட்டுமல்லாமல் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.

குழந்தைகளுக்கு பற்பசை:
அதிக அளவு ப்ளோரைடு உபயோகம் ப்ளூரோசிஸ் என்ற பல்சிதைவு ஏற்பட காரணமாகிறது. மேலும் குழந்தைகளுக்கு பற்கள் விழுந்து முளைக்கும் சமயத்தில் அதிக அளவு ப்ளோரைடு உபயோகித்தால் பற்களில் வெள்ளைத் திட்டுக்கள் விழக் கூடும்.

ப்ளோரைடு பற்பசையினை உபயோகிக்கும் பொழுது ஒரு பட்டானி அளவிற்கு மட்டுமே எடுத்துக் கொண்டு பல்துலக்க வேண்டும் என்று பல் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

எச்சரிக்கை அவசியம்:
1997-ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) ப்ளோரைடு கலந்த பற்பசைகளில் கீழ்க்கண்ட எச்சரிக்கையை அச்சிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. ஒரு முறை பல் துலக்குவதற்கு வேண்டிய அளவை விட அதிகமான பற்பசையை உட்கொண்டாலே உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் அல்லது, விஷமுறிவு மையத்தை நாடவும் என்ற எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

ப்ளோரைடு கலவையை நேரடியாக உட்கொண்டால் விஷம் தான். ஆனால் பற்களிலும், எலும்புகளிலும் ப்ளோரைடு கலந்திருக்கிறது. இது பற்களை வலுவானதாக ஆக்குகிறது.

ப்ளோரைடு பற்பசை உபயோகிக்கும் பொழுது அது தொண்டைக்குள் செல்லாமல் துப்பி விடுவது நல்லது. சிறுவர்களுக்கு பிடித்தமான சுவைகளில் பற்பசைகள் தயாரிக்கப்படுவதால் சிறுவர்கள் இதனை விழுங்காமல் பார்த்துக் கொள்வது கடினம்.

சில சிறுவர்கள் பற்பசையில் டேஸ்ட் நன்றாக இருக்கிறது என்று அதை சாப்பிடுவார்கள். அது விஷம் என்று புரியவைக்கவேண்டும்.

பல் துலக்க 2 அல்லது 3 நிமிடங்களே போதுமானது. காலையில் உபயோகிக்கும் பேஸ்டின் அளவை விட இரவில் சற்று அதிகம் உபயோகிக்கலாம். ஏனெனில் காலையில் பற்களை அழகாக்கவும், இரவில் அழுக்குகளைப் போக்கவும் பற்களை துலக்குகிறோம்.

ஒவ்வொருவரின் வயதைப் பொறுத்து பேஸ்டின் அளவு மாறுபடும். குழந்தைகளுக்கு பெரியவர் பயன்படுத்துவதை விட குறைந்த அளவு பயன்படுத்தினால் போதும். கூடுதல் நேரம் பற்களை துலக்குவதால் பற்கள் பளிச்சிடாது.

வண்ண நிறங்களை கொண்ட பேஸ்டை விட வெள்ளை நிறத்திலான பேஸ்டை வாங்குங்கள். ஃப்ளோரைடு குறைந்த பேஸ்டை தேர்வு செய்யுங்கள். பற்கள் சொத்தையாக காரணமாகும் இரசாயனங்கள் அடங்கியதுதான் அப்ரேஸிவ். ஆகவே இதன் அளவு குறைந்த பேஸ்டை வாங்குங்கள். சோடியம் லாரைல், சோடியம் லாரேத், பேக்கிங் சோடா, பெராக்ஸைட் ஆகியன அடங்கிய பேஸ்டுகளை தவிருங்கள்.

ஜெல் பேஸ்டுகள் பற்களின் தேய்மானத்திற்கு காரணமாகும் என்பதால் க்ரீம் பேஸ்டுகளே நல்லது. குழந்தைகளுக்காக வாங்கும் பேஸ்டில் ஃப்ளோரைடு இல்லை என்பதை உறுதிச் செய்யவும்.

பூமியில் இயற்கையாக கிடைப்பது கால்சியம் ப்ளோரைடு என்ற தாது உப்பு வடிவில் உள்ளது. ஆனால் பற்பசையில் கலக்கப்படும் ப்ளோரைடு இந்த வகையில் இல்லை. சோடியம் ப்ளோரைடு அல்லது ப்ளூரோசாலிசிக் அமிலம் பற்பசையில் உபயோகிக்கப்படுகிறது.

இவை அலுமினியத் தொழிற்சாலைகளில் விஷக் கழிவுகளாக வெளியேறுபவை. இவை எலி பாஷாணத்திலும், பூச்சி மருந்திலும் உபயோகப் படுத்தப்படுகிறது. இவைகளையே ப்ளோரைடு தேவைக்காக பற்பசையில் சேர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

No comments:

Post a Comment