Search This Blog
Sunday, February 10, 2013
தாய்ப்பாலில் அப்படி என்னதான் இருக்கிறது?
உலக அளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உணவு என்றால் அது தாய்ப்பால்தான். இதற்கு இணையான பொருள் எதுவும் இல்லை. பிறந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தாய்ப்பால் அருமருந்தாக செயல்படுகிறது பிறந்த சிசுக்களுக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரசும் 2 : 1 என்கிற விகிதத்தில் தாய்ப்பாலில் உள்ளது.
இதுதான் குழந்தைக்கு சரியான அளவுகோல். பச்சிளம் குழந்தைக்குத் தேவையானதோ whey புரோட்டீன். இந்த whey புரோட்டீன் தாய்ப்பாலில் மட்டும்தான் உள்ளது. இந்த புரோட்டீன்தான் பச்சிளம் குழந்தைகளுக்கு பொருத்தமான வகை புரோட்டீன். தாய்ப்பாலில் உள்ள மைக்ரோ நியுட்ரிஷியன்ஸ் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புக்கள் மிகமிக குறைவு. தாய்ப்பால் போதுமான அளவு சுரக்காவிட்டால் சத்தான உணவுகளை உட்கொள்ளலாம். அசைவ உணவுகளில் மட்டன், கருவாடு போன்றவைகளை தாய்மார்கள் உண்ணவேண்டும்.
அதேபோல் வெள்ளைப்பூண்டு, வெல்லம் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொண்டால் குழந்தைகளுக்கு தேவையான தாய்ப்பால் கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மட்டுமல்ல தாய்க்கும் சிறந்த நன்மைதான். மார்பகப் புற்றுநோய் ஏற்படாது. உயர் ரத்த அழுத்தம் குறைகிறது. அதேபோல் நீரிழிவு நோயும் ஏற்படுவது தடுக்கப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment