Search This Blog

Sunday, February 10, 2013

உங்கள் பாதங்களை ஒழுங்காக பராமறிக்கின்றீர்களா?


நம்மைத் தாங்குபவை பாதங்கள் தான். எனவே பாதங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். பாதங்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் கவனித்துச் சரிசெய்ய வேண்டும். உதாரணமாக, பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் ஏற்பட்டால் தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம்.

தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். அப்போது பாதங்களைக் கவனிக்காமல் போனால் அதிக பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

இதுபோன்ற அறிகுறி தென்பட்டதுமே, தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகளான அதிகச் சோர்வும், உடல் எடை அதிகமாதலும் ஏற்படுகின்றனவா என பார்க்க வேண்டும். இதில் எந்த அறிகுறி இருந்தாலும் உடனே மருத்துவரைச் சந்திப்பது அவசியம். தொடர்ந்து பாதம் மரத்துப் போய் இருப்பது நீரிழிவு நோயின் பாதிப்பாகும்.

சர்க்கரை நோய், ரத்தத்தில் பாதம் மரத்துப் போதல் இருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக, சில நேரங்களில் கால்களில் செருப்புகள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ, வலியையோ கூட உணர்ந்துகொள்ள முடியாது. இந்நிலையில் என்ன செய்யலாம்?

பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு ஒரு முக்கியக் காரணமாகும். அதனால் உடல் எடை அதிகம் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அழகான, ஆரோக்கியமான பாதங்கள் நமக்கு ஒரு தனி கவுரவத்தைப் பெற்றுத் தரும். எனவே பாதங்களை பத்திரமா பார்த்துக்கங்க!

No comments:

Post a Comment