வாழைப்பழம் - எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழமாகும். மேலும், இதற்கு காலநிலை எதுவும் இல்லாமல் எல்லா காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷம் இருப்பதாகக் கூறுகிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அதாவது தினமும் மூன்று வேளை உணவுக்குப் பிறகு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும் என்கின்றனர் அவர்கள்.
மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது வாழைப்பழம். அதாவது, வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுகோஸ் உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் அதிகமாகக் கொண்டுள்ளது.
ஒரு மனிதன் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை பெறுகிறான் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மட்டும் நிறைந்திருக்கவில்லை, மேலும், பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு மருந்தாகவும் கூட வாழைப்பழம் உள்ளது. எனவே ஒவ்வொரு மனிதனும் தினமும் ஒரு வாழைப்பழத்தையாவது சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த காலத்தில் அதற்காகத்தானோ என்னவோ வெற்றிலையுடன் வாழைப்பழத்தை வைத்துக் கொடுக்கும் முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தெரியாததா என்ன?
முதலில் மலச்சிக்கல் வியாதியில் இருந்து மனிதனைக் காப்பாற்றும் இயற்கை மருந்து வாழைப்பழம்தான். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.
நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் தயார் செய்து குடித்தால் சோம்பல் போயேப் போச்சு.
மேலும், நெஞ்செரிப்பு, உடற் பருமன், குடற்புண், உடலில் வெப்பநிலையை சீராக வைக்கவும், மன அழுத்தம் போன்றவற்றிற்கு வாழைப்பழம் நல்ல மருந்தாக உள்ளது.
புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடித்தலை விடும்போது வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் எளிதில் விடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment